Last Updated : 26 Feb, 2019 09:14 AM

 

Published : 26 Feb 2019 09:14 AM
Last Updated : 26 Feb 2019 09:14 AM

காங்கிரஸை முற்றிலும் கைகழுவி ம.பி., உத்தராகண்டிலும் மாயாவதி - அகிலேஷ் கூட்டணி 

உத்தர பிரதேசத்தில் ஒருவருக்கு பின் ஒருவராக ஆட்சி செய்த மாயாவதியும் அகிலேஷும் எதி ரும் புதிருமான கட்சிகளைச் சேர்ந்தவர்கள். கடந்த 2017 சட்டப் பேரவையில் பாஜக தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சியை பிடித் ததால், இருவரும் கூட்டணி அமைக்க முடிவு எடுத்தனர். இதில், காங்கிரஸை ஒதுக்கிய இவர்கள் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியை மட்டும் சேர்த்து உத்தரபிரதேசத் தில் கூட்டணி அமைத்துள்ளனர். இதையடுத்து அருகிலுள்ள உத்தராகண்ட் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களிலும் இருவரது கட்சிகளின் கூட்டணி அமைந்துள் ளது. இதன் தொகுதிப்பங்கீடு குறித்து இரண்டு கட்சிகளின் சார்பில் நேற்று அறிக்கை வெளியாகி உள்ளது.

இதன்படி, மத்தியபிரதேசத்தின் 29 மக்களவை தொகுதிகளில் சமாஜ்வாதி 3-ம், மீதியுள்ளவற் றில் பகுஜன் சமாஜும் போட்டி யிடுகின்றன. உத்தராகண்டின் ஐந்து தொகுதிகளில் நான்கிற்கான ஒதுக்கீடு மட்டுமே வெளியாகி உள்ளது. இதில், உத்தராகண்டின் பவுரி தொகுதியில் சமாஜ்வாதியும், மற்ற மூன்றில் பகுஜன் சமாஜும் போட்டியிடுகின்றன. மீதியுள்ள ஒரு தொகுதியின் நிலை குறித்து குறிப்பிடவில்லை.

உத்தரபிரதேசத்தில் இருந்து பிரிந்த மாநிலமாக உத்தராகண்ட் இருப்பினும் மாயாவதி, அகிலேஷ் கட்சிகளுக்கு அங்கு அதிக செல்வாக்கு இல்லை. அதன் சட்டப்பேரவையின் ஓரிரு தொகுதிகளில் மாயாவதி கட்சி வென்றுள்ளது. எனினும், இரண்டு கட்சிகளுமே மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதி கூட வென்றதில்லை. உயர் சமூகத்தினர் அதிகமுள்ள நான்கு மற்றும் ஒரு தனித்தொகுதியில் காங்கிரஸும், பாஜகவுமே மாறி, மாறி தக்க வைத்துக் கொண்டுள்ளன. தற் போது அம்மாநிலத்தின் ஐந்து தொகுதிகளும் பாஜக வசம் உள்ளன.

மத்திய பிரதேசத்தில் தற்போது பாஜக 27 மற்றும் காங்கிரஸிடம் 2 தொகுதிகள் உள்ளன. இந்த தேர்தலில் உத்தரபிரதேச மாநில எல்லையில் இருக்கும் சம்பல் கொள்ளைக்காரர்கள் பகுதியான மொரேனாவில் மட்டும் மாயாவதி கட்சி இரண்டாவது நிலை பெற்றிருந்தது. சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மாயா வதியும், அகிலேஷும் தனித்தே போட்டியிட்டனர். இதில் மாயா வதிக்கு இரண்டும் அகிலேஷுக்கு ஒரு தொகுதியும் கிடைத்தது. இருவரும் மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸுக்கு ஆட்சி அமைக்க ஆதரவு அளித்திருப்பது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x