Last Updated : 24 Feb, 2019 09:29 AM

 

Published : 24 Feb 2019 09:29 AM
Last Updated : 24 Feb 2019 09:29 AM

எங்கள் ஆட்சியில் எதுவும் சாத்தியமே: ராஜஸ்தான் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

எங்கள் ஆட்சியில் எதுவும் சாத்தியமே என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

ராஜஸ்தான் மாநிலம் டாங்க் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பாஜக பேரணி, பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி பேசியதாவது:

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாயக் கடன் 10 நாட்களில் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் அவர்களது வாக்குறுதியை அவர்கள் இதுவரை நிறைவேற்றவில்லை.

ஆனால் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். உத்தரபிரதேசத்தில் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தோம். ஆனால் ராஜஸ்தான், கர்நாடகாவில் விவசாயக் கடனை தள்ளுபடி செய்வதாகக் கூறி காங்கிரஸார் ஏமாற்றி வருகின்றனர். பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை திசை திருப்புவதே காங்கிரஸின் வேலையாகிவிட்டது.

எங்கள் ஆட்சியில் எதுவும் சாத்தியமே. நாங்கள் வாக்குறுதி அளித்தபடி அனைத்துத் திட்டங்களையும் அமல்படுத்தி இருக்கிறோம். முன்பு இருந்த ஆட்சிகள் திட்டங்கள் பற்றி மட்டுமே பேசுவார்கள். ஆனால் நாங்கள் திட்டங்களை முடித்துக் காட்டினோம். ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம் திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்தினோம்.

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தீவிரவாதத் தாக்குதலை உலக நாடுகள் அனைத்தும் கண்டிக்கின்றன. தீவிரவாதம் எந்த வகையில் வந்தாலும் அதை எதிர்ப்போம்.

புல்வாமா தாக்குதலில் இறந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு ஆதரவாக உலக நாடுகள் நிற்கின்றன. தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்பதில் அனைவருக்கும் கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது.

உலகில் தீவிரவாதம் அதிகமானால் அமைதி என்பதே சாத்தியமில்லை. தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தைத்தான் நாம் நடத்தி வருகிறோம்; காஷ்மீர் மக்களுக்கு எதிரான போராட்டத்தை அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x