Published : 05 Apr 2016 04:09 PM
Last Updated : 05 Apr 2016 04:09 PM

206 - விருதுநகர்

கர்மவீரர் காமராஜர் பிறந்த தொகுதி விருதுநகர். அதுமட்டுமின்றி, பருப்பு வகைகள், எண்ணெய், மிளகாய் வத்தல் உற்பத்தியிலும் பெயர்பெற்றது விருதுநகர் சட்டமன்றத் தொகுதி. தமிழகத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர்பெற்றுத் தந்த தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்ததும் விருதுநகரில்தான். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே மிகப்பெரிய வணிக தலமாக விளங்கிய சிறப்பும் விருதுநகருக்கு உண்டு. விருதுநகர் தொகுதியில் நாடார், தேவர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் பரவலாக வசித்து வருகின்றனர். விவசாயம், பருப்பு மற்றும் எண்ணெய் மில்கள் இத்தொகுதியின் முக்கிய தொழில் ஆதாரங்களாக விளங்குகின்றன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராமமூர்த்தி சாலையில் ரயில்வே பாலம் கட்டப்பட வேண்டும் என்பதும், தாமிரவருணி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தையும், பாதாள சாக்கடைத் திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றும் இத்தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. இதில், ராமூர்த்தி சாலையில் மேலம்பாலம் கட்டும் பணிகள் மட்டும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. விருதுநகர் தொகுதியில் விருதுநகர் நகராட்சி, விருதுநகர் ஒன்றியம் மற்றும் செங்கோட்டை, வடமலைக்குறிச்சி, சிவஞானபுரம், புல்லலக்கோட்டை, அல்லம்பட்டி, சத்திரரெட்டியபட்டி உள்ளிட்ட 42 வருவாய் கிராமங்கள் உள்ளன. இத்தொகுதியில் 3 முறை திமுகவும், 2 முறை அதிமுகவும், ஜனதாகட்சி, இந்திய தேசிய காங்கிரஸ், ஐசிஎஸ், தமாக ஆகிய கட்சிகள் தலா ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளன. கடந்த 2006ல் மதிமுக வேட்பாளர் ஆர்.வரதராஜனும், 2011ல் தேமுதிக வேட்பாளர் க.பாண்டியராஜனும் வெற்றிபெற்றுள்ளனர்.

2016 தேர்தலில் கலம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

கி.கலாநிதி

அதிமுக

2

ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன்

திமுக

3

மு.செய்யது காஜாசெரீப்

தேமுதிக

4

பொ.கணேஷ்பெருமாள்

பாமக

5

செ.காமாட்சி

பாஜக

6

த.அகிலன்

நாம் தமிழர்தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

விருதுநகர் தாலுகா (பகுதி)

செங்கோட்டை, எல்லிங்கநாயக்கம்பட்டி, வடமலைக்குறிச்சி, சிவஞானபுரம், புல்லலக்கோட்டை, அல்லம்பட்டி, சத்ரரெட்டியபட்டி, பெரிய பரலி, சின்னமூப்பன்பட்டி, பேளம்பட்டி, பாவாலி, சீனியாபுரம், செங்குன்றாபுரம், மூளிப்பட்டி, கவுண்டன்பட்டி, நாட்டார்மங்கலம், குமரலிங்கபுரம், விருதுநகர், அழகாபுரி, மீசலூர், ஆமத்தூர், வெள்ளூர், ஆனைக்குட்டம், ஏ.மீனாட்சிபுரம், மேலாமத்தூர், காரிசேரி, ஒண்டிப்புலி நாயக்கனூர், தாதம்பட்டி, புளியங்குளம், மருளுத்து, பட்டம்புதூர், வாய்பூட்டான்பட்டி, காசிரெட்டியபட்டி, பாச்சாகுளம், வி.முத்துலிங்காபுரம், சொக்கலிங்கபுரம், வாடி, புதூர், தம்மநாயக்கன்பட்டி, வச்சக்காரப்பட்டி, கலங்காபேரி மற்றும் சின்னவாடி கிராமங்கள்.

ரோசல்பட்டி (சென்சஸ் டவுன்), விருதுநகர் (நகராட்சி) மற்றும் கூரைக்குண்டு (சென்சஸ் டவுன்) சிவகாசி தாலுக்கா (பகுதி) எரிச்சநத்தம், சேவலூர், புதுக்கோட்டை, காளையார் குறிச்சி, மங்கலம், தச்சகுடி, நெடுங்குளம், பூரணசந்திரபுரம், மற்றும் கீழதிருத்தங்கல் கிராமங்கள்.

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,02,856

பெண்

1,05,031

மூன்றாம் பாலினத்தவர்

35

மொத்த வாக்காளர்கள்

2,07,922

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு

2011

கே. பாண்டியராஜன்

தேதிமுக

52.36

2006

R.வரதராஜன்

மதிமுக

38.85

2001

S.தாமோதரன்

த.மா.கா

42.67

1996

A.R.R.சீனிவாசன்

திமுக

41.53

1991

சஞ்சய் ராமசுவாமி

ICS (SCS)

56.07

1989

R.சொக்கர்

இ.தே.கா

32

1984

A.S.A.ஆறுமுகம்

ஜனதா கட்சி

45.36

1980

M.சுந்தரராஜன்

அதிமுக

48.86

1977

M.சுந்தரராஜன்

அதிமுக

44.52

1971

பெ. சீனிவாசன்

திமுக

49.9

1967

பெ. சீனிவாசன்

திமுக

49.88

1952

வி. வி. ராமசாமி

சுயே

46.67

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

வரதராஜன்.R

மதிமுக

50629

2

தாமோதரன்.S

காங்கிரஸ்

46522

3

சுப்புராஜ்.A

தேமுதிக

15575

4

செல்வகுமரேசன்.A

பகுஜன் சமாஜ் கட்சி

6241

5

செல்வம்.A

பார்வர்டு பிளாக்

5475

6

ஈஸ்வரன்.M

பாஜக

3255

7

ராமர்.P

சுயேச்சை

1294

8

சேகர்.G

சுயேச்சை

496

9

துரைராஜ்.P.T.C

சுயேச்சை

441

10

முருகன்.R

சுயேச்சை

405

130333

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

பாண்டியராஜன்.K

தேமுதிக

70441

2

ஆர்ம்ஸ்ட்ராங் நவீன்.T

காங்கிரஸ்

49003

3

கருகுவேல் மாரிசெல்வம்.S

சுயேச்சை

5652

4

காமாட்சி.S

பாஜக

3139

5

முருகேசன்.V

சுயேச்சை

1571

6

வீரபெருமாள்.S

சுயேச்சை

1093

7

பெருமாள்சாமி.M

பகுஜன் சமாஜ் கட்சி

715

8

பாண்டியன்.M

சுயேச்சை

653

9

அசோக்குமார்.J

சுயேச்சை

543

10

செந்தாமரைபன்டியன்.S

சுயேச்சை

494

11

அனந்தமுருகன்.M

சுயேச்சை

332

12

ராஜேந்திரன்.P

சுயேச்சை

329

13

நாகமுருகராஜன்.M

சுயேச்சை

324

14

சாந்தி.K

சுயேச்சை

248

134537

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x