Published : 05 Apr 2016 03:57 PM
Last Updated : 05 Apr 2016 03:57 PM

49 - ஜோலார்பேட்டை

வேலூர் மாவட்டத்தில் விஐபி அந்தஸ்து பெற்ற தொகுதிகளில் ஜோலார்பேட்டை தொகுதியும் ஒன்றாகும். காரணம் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணியின் சொந்த தொகுதியாகும். திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் இணைக்கப்பட்டிருந்த ஜோலார்பேட்டை, 2011-ல் தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் ஜோலார்பேட்டை தொகுதியாக உருவெடுத்தது.

இந்த தொகுதியில், கலந்திரா, சின்னவேப்பம்பட்டு, கேத்தாண்டப்பட்டி, சின்னமோட்டூர், குடியானக்குப்பம், மண்டலவாடி, ஏலகிரி மலை, திரியாலம், அச்சமங்கலம், ஆத்தூர்குப்பம், பெரியகரம், தோக்கியம், பொன்னேரி ஆகிய கிராமங்கள் முக்கிய இடங்களாக உள்ளன.

தொகுதியில் எண்ணற்ற பிரச்சினைகள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என கூறி வாக்குறுதி ஏட்டளவிலேயே நிற்கிறது.

கடந்த திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட பார்ச்சம்பேட்டை ரயில்வே மேம்பாலம் பணிகள் இன்று வரை ஆமை வேகத்திலேயே நடைபெற்று வருகிறது. எப்போது முடியும் என்பது ஒப்பந்ததாருக்கே வெளிச்சம் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

ஜோலார்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் படித்த இளைஞர்கள் நிறைய பேர் வேலை வாய்ப்பின்றி இருக்கின்றனர். விவசாயம் பொய்த்துவிட்டதால், கட்டிட வேலைக்காக வெளிமாநிலங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் நிறையபேர் உள்ளனர்.

படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் வகையில் ஜோலார்பேட்டையில் சிப்காட் தொழிற்பேட்டை ஏற்படுத்தப்படும் என தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதி கானல் நீராக போனதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஜோலார்பேட்டை தொகுதியில் மிகப்பெரிய ரயில் சந்திப்பு நிலையம் இருந்தாலும், பேருந்து நிலையம் இங்கு அமைக்கப்படவில்லை என்ற ஏக்கம் தொகுதி மக்களிடம் நீண்டகாலமாக உள்ளது.

இந்நிலையில், ஜோலார்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட ஏலகிரி மலையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. ஏழைகளில் ஊட்டி என்று வர்ணிக்கப்படும் ஏலகிரி சுற்றுலா தளமாக உருவாக்கப்படும் என அறிவிப்பு அப்படியே நிற்கிறது.

இது தவிர ஏலகிரி மலையில் உள்ள கிராம மக்களுக்கு அரசு மருத்துவமனை வசதி, போக்குவரத்து வசதி, மின்விளக்கு மற்றும் குடிநீர் வசதிகள் ஏதும் இங்கு இல்லாதது பெரும் ஏமாற்றமாகவே உள்ளது.

அதேபோல், ஜோலார்பேட்டைக்கு என்று தனியாக தீயணைப்பு நிலையம், மின்வாரிய அலுவலகம், அனைத்து கிராமங்களுக்கும் போக்குவரத்து வசதி, ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்லும் வசதி, அரசு பொறியியல் கல்லூரி, சீரான சாலை வசதி என பல்வேறு கோரிக்கைகள் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் உள்ளது தொகுதி மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொகுதி மறுசீரமைப்பு மூலம் முதன்முதலாக உருவான ஜோலார்பேட்டை தொகுதியின் முதல் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் அதிமுக உறுப்பினர் கே.சி.வீரமணி.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

கே.சி.வீரமணி

அதிமுக

2

டி.கவிதா தண்டபாணி

தி.மு.க

3

ஏ.பையாஸ்பாஷா

தேமுதிக

4

ஜி.பொன்னுசாமி

பாமக

5

ஆர்.ஓவியம் ரஞ்சன்

பாஜக - இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கட்சி



தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

வாணியம்பாடி வட்டம் (பகுதி) கலந்திரா, சின்னவேப்பம்பட்டு, பெத்தகல்லுபள்ளி மற்றும் கேத்தாண்டபட்டி கிராமங்கள், திருப்பத்தூர் தாலுக்கா (பகுதி) கொத்தூர் (ஆர்.எப்), கொத்தூர், சொரைகாயல்நத்தம், நயணசெருவு, தோப்புலகுண்டா, கத்தாரி, ஆத்தூர்குப்பம், குடியன்குப்பம், சின்னமோட்டூர், மண்டலவாடி, ஜோலார்பேட்டை (ஆர்.எப்), மங்கலம் (ஆர்.எப்), மங்கலம் விரிவாக்கம், ஏலகிரி மலை, நாகலத்து (ஆர்.எப்), நாகலத்து (விரிவாக்கம் ஆர்.எப்), பொன்னேரி, ஏலகிரி கிராமம், காட்டேரி, திரியாலம், வேடட்ப்பட்டு, பந்தாரப்பள்ளி, பச்சூர், பையனப்பள்ளி, வெலகல்நத்தம், நந்திபெண்டா (ஆர்.எப்), மண்டலநாயனகுண்டா, கொல்லங்குடை, பனியாண்டபள்ளி, மல்லபள்ளி, அக்ரஹாரம், அம்மனங்கோயில், மூக்கனூர், அச்சமங்கலம், தாமலேரி முத்தூர், பால்னாங்குப்பம், பாச்சல், கதிரிமங்கலம், பெரியகரம், புத்தகரம், சந்திரபுரம், விருபாட்சிபுரம், தோக்கியம், கந்திலி மற்றும் சின்னகந்திலி கிராமங்கள், நாட்ரம்பள்ளி (பேரூராட்சி) ஜோலார்பேட்டை (பேரூராட்சி)

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,11,201

பெண்

1,12,101

மூன்றாம் பாலினத்தவர்

1

மொத்த வாக்காளர்கள்

2,23,303

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்ற தேர்தல்

49. ஜோலார்பேட்டை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

கே. சி. வீரமணி

அ.தி.மு.க

86273

2

பொன்னுசாமி

பா.ம.க

63337

3

M. அண்ணாமலை

சுயேச்சை

1912

4

M.S. வீரமணி

சுயேச்சை

1442

5

M. காந்திபாபு

பிஎஸ்பி

956

6

G.M. பொன்னுசாமி

சுயேச்சை

889

7

K. பரமசிவம்

சுயேச்சை

864

8

T. கோவிந்தராஜ்

சுயேச்சை

506

9

G. சந்தோஷ்

சுயேச்சை

322

156501


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x