Published : 05 Apr 2016 16:09 pm

Updated : 07 May 2016 17:00 pm

 

Published : 05 Apr 2016 04:09 PM
Last Updated : 07 May 2016 05:00 PM

213 - விளாத்திகுளம்

213

தூத்துக்குடி மாவட்டத்தில் கடைகோடியில் உள்ள தொகுதி விளாத்திகுளம். எந்தவித வளர்ச்சியும் இல்லாத பின்தங்கிய தொகுதி. முழுக்க முழுக்க மானாவாரி விவசாயத்தை கொண்டது. வேறு எந்தவிதமாக தொழிலும் கிடையாது. வானம் பார்த்த பூமியாக மழை பெய்தால் தான் விவசாயம் என்ற நிலையில் உள்ளனர் இத்தொகுதி விவசாயிகள். மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் வரும் வைப்பாறு இந்த தொகுதி வழியாக செல்கிறது.

விளாத்திகுளம், எட்டயபுரம் தாலுகாக்கள் முழுமையும், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் ஒரு பகுதியும் இந்த தொகுதியில் அடங்கியுள்ளது. விளாத்திகுளம், புதூர், எட்டயபுரம் ஆகிய பேரூராட்சிகளை உள்ளடக்கியது இந்த தொகுதி மகாகவி பாரதியார் பிறந்த எட்டயபுரம் மண் இந்த தொகுதியில் தான் உள்ளது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் வாழ்ந்த பூமி விளாத்திகுளம் தொகுதி.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

விவசாயிகளை அதிகம் கொண்ட விளாத்திகுளம் தொகுதியில் மீனவர்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளனர். நாயக்கர் சமுதாயத்தினர் அதிகம் வாழுகின்றனர்.

இந்த தொகுதியில் பிரச்சினைகள் ஏராளம். மிளகாய் வத்தல் சந்தைக்கு விளாத்திகுளம் பெயர் பெற்றது. ஆனால், மிளகாய் வத்தலை சேமித்து வைக்க போதுமான குளிர்பதன கிடங்குகள் கிடையாது. மானாவாரி விவசாயத்தை பாதுகாக்க போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும். விளாத்திகுளத்தில் நிலவும் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். தொழிற்சாலைகள், கல்வி நிலையங்களை உருவாக்க வேண்டும் என்பன போன்றவை நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் இத்தொகுதி கோரிக்கைகள்.

இந்த தொகுதி 1952-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதுவரை 12 தேர்தல்களை இந்த தொகுதி சந்தித்துள்ளது. இதில் 7 முறை அதிமுக வென்றுள்ளது. அடுத்ததாக திமுக 4 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும் வென்றுள்ளன. கடந்த 2011 தேர்தலில் இத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜி.வி. மார்க்கண்டேயன் 22,597 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு 72753 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கே. பெருமாள்சாமிக்கு 50,156 வாக்குகளும் கிடைத்தன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

விளாத்திகுளம் தாலுகா

எட்டயபுரம் தாலுகா

ஓட்டப்பிடாரம் தாலுகா (பகுதி)

குதிரைக்குளம், நாகம்பட்டி, பசுவந்தனை, முத்துராமலிங்கபுரம், மீனாட்சிபுரம், குமரெட்டியாபுரம், எப்போதும்வென்றான், காட்டுநாயக்கன்பட்டி, ஆதனூர், முள்ளூர், முத்துக்குமாரபுரம்,வேப்பலோடை, தெற்கு கல்மேடு, வேடநத்தம்,கொல்லம்பருப்பு, சந்திரகிரி, ஜெகவீரபாண்டியபுரம், க.தளவாய்புரம், வெள்ளாரம், பி.துரைச்சாமிபுரம், கீழமுடிமன், கீழமங்கலம், சில்லாங்குளம், எஸ்.குமாரபுரம், கே.சண்முகபுரம், டி.துரைசாமிபுரம் மற்றும் பட்டிணமருதூர் கிராமங்கள்

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,01,219

பெண்

1,04,027

மூன்றாம் பாலினத்தவர்

2

மொத்த வாக்காளர்கள்

2,05,248தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு

2006

P.சின்னப்பன்

அதிமுக

46.73

2001

N.K.பெருமாள்

அதிமுக

48.16

1996

K.ரவி சங்கர்

திமுக

32.1

1991

N.C.கனகவல்லி

அதிமுக

62.1

1989

K.K.S.S.R.இராமச்சந்திரன்

அதிமுக (ஜெ)

36.59

1984

குமர குருபர ராமநாதன்

திமுக

40.52

1980

R.K.பெருமாள்

அதிமுக

53.75

1977

R.K.பெருமாள்

அதிமுக

38.39

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

P. சின்னப்பன்

அ.தி.மு.க

45409

2

K. ராஜாராம்

தி.மு.க

37755

3

S. பாலகிருஷ்ணன்

தே.மு.தி.க

5779

4

லிங்கராஜ்

பி.எஸ்.பி

4026

5

V.P. ஜெயராஜ்

பி.ஜே.பி

1197

6

A. நடராஜ்

சுயேச்சை

1077

7

R. முருக பாண்டியன்

அகில இந்திய பார்வர்டு பிளாக்

710

8

M. காந்தி

சுயேச்சை

541

9

T. தங்கமுத்து

ஜே.டி

460

10

L. அழகேசன்

சுயேச்சை

217

97171

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

V. மார்கண்டேயன்

அ.தி.மு.க

72753

2

K. பெருமாள்சாமி

ஐ.என்.சி

50156

3

M. கருத்து மெய்யப்பன்

சுயேட்சை

2378

4

G. மந்திரமுத்து

சுயேட்சை

1795

5

K. சுந்தரமூர்த்தி

பி.ஜே.பி

1499

6

S. அய்யாதுரை

பி.ஸ்.பி

1423

7

P.S. ஐய்யனார்

சுயேட்சை

1102

8

G. நடராஜ்

சுயேட்சை

806

9

N. நம்மாழ்வார்

சுயேட்சை

513

10

P. நடராஜன்

சுயேட்சை

443

11

K. பொன்னுகுமார்

சுயேட்சை

424

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

சட்டப்பேரவைத் தேர்தல்தமிழக தேர்தல் களம்விளாத்திகுளம் தொகுதி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

தவறவிடாதீர்

தேர்தல் 2016
copy

பொது copy

தேர்தல் 2016

More From this Author