Published : 05 Apr 2016 16:09 pm

Updated : 07 May 2016 18:57 pm

 

Published : 05 Apr 2016 04:09 PM
Last Updated : 07 May 2016 06:57 PM

217 - ஓட்டப்பிடாரம் (தனி)

217

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரே தனித் தொகுதி ஓட்டப்பிடாரமாகும். வ.உ.சி. சிதம்பரனார், வீரபாண்டிய கட்டப்பொம்மன், வெள்ளையத்தேவன், வீரன் சுந்தரலிங்கனார் போன்ற சுதந்திர போராட்ட தியாகிகளை நாட்டுக்கு தந்த பூமி. ஆனால், மாவட்டத்தில் உள்ள பின்தங்கிய தொகுதிகளில் ஒன்று.

ஓட்டப்பிடாரம் தாலுகா முழுவதும், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் தாலுகாக்களில் ஒருசில பகுதிகளை உள்ளடக்கியது ஓட்டப்பிடாரம் தொகுதி. தூத்துக்குடி மாநகராட்சியில் சில பகுதிகள் ஓட்டப்பிடாரம் தொகுதியில் வருகின்றன. முதலில் திருநெல்வேலி மக்களவை தொகுதிக்குள் ஓட்டப்பிடாரம் இருந்தது. பின்னர் மறுசீரமைப்பில் மாற்றியமைக்கப்பட்டு தூத்துக்குடி மக்களவை தொகுதிக்குள் கொண்டுவரப்பட்டது.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

ஓட்டப்பிடாரம் தொகுதியில் பிரதான தொழில் விவசாயம். வானம் பார்த்த பூமியாக மழை பெய்தால் மட்டுமே விவசாயம் என்ற மானாவாரி விவசாயத்தை நம்பி தான் விவசாயிகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக சில தொழிற்சாலைகள் ஓட்டப்பிடாரம் தொகுதியில் அமைந்து வருகின்றன. குறிப்பாக சில தனியார் அனல்மின் நிலையங்கள் இந்த தொகுதியில் உள்ளன.

ஆயத்த ஆடை தொழிலில் பிரசித்தி பெற்ற குட்டி திருப்பூர் என்றழைக்கப்படும் புதியம்புத்தூர் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தான் அமைந்துள்ளது.

இந்த தொகுதியில் பிரச்சினைகள் ஏராளம். மானாவாரி விவசாயத்தை பாதுகாக்க குளிர்பதன கிடங்குகளை அதிகம் அமைக்க வேண்டும். புதியம்புத்தூரில் ஆயத்த ஆடை பூங்கா அமைக்க வேண்டும். கொம்பாடி ஓடையில் தடுப்பணை கட்ட வேண்டும். தாமிரபரணி ஆற்றில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை ஓட்டப்பிடாரம் பகுதிக்கு திருப்பி விட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் நீண்ட காலமாக நிறைவேற்றப்படவில்லை என்கின்றனர் இத்தொகுதி மக்கள்.

இந்த தொகுதி 1962-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதுவரை 12 தேர்தல்களை சந்தித்துள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் 3 முறையும், அதிமுக 3 முறையும் அதிகபட்சமாக வென்றுள்ளன. திமுக, இந்திய கம்யூனிஸ்ட், ஜனதா கட்சி, புதிய தமிழகம், சுதேசி கட்சி, பார்வர்டு பிளாக் ஆகியவை தலா ஒரு முறையும் வென்றுள்ளன. கடந்த 2011 தேர்தலில் புதிய தமிழகம் சார்பில் போட்டியிட்ட டாக்டர் க. கிருஷ்ணசாமி 25,126 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு 71330 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் எஸ். ராஜா 46,204 வாக்குகளும் பெற்றனர்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

ஓட்டப்பிடாரம் தாலுகா (பகுதி)

மேலமருதூர், தருவைக்குளம், மேல அரசடி, வலசமுத்திரம், சித்தலக்கோட்டை, ஓட்டப்பிடாரம், கெலசேகரநல்லூர், முறம்பன், ஓட்டநத்தம், கொல்லங்கிணறு, மருதன்வாழ்வு, நாரைக்கிணறு, கோவிந்தபுரம், கலப்பைப்பட்டி, கீழக்கோட்டை, கொடியன்குளம், அக்கநாயக்கன்பட்டி, மணியாச்சி, பாறைக்குட்டம், மேலப்பாண்டியபுரம், சவரிமங்கலம், ஐம்பு, இங்கபுரம், புதியம்புத்தூர், சாமிநத்தம், தெற்குவீரபாண்டியாபுரம், சில்லாநத்தம், புதூர்பாண்டியபுரம், கீழ அரசடி, ஓணமாக்குளம், மலைப்பட்டி, இளவேலங்கால், தென்னம்பட்டி, கொத்தாளி, பரிவல்லிக்கோட்டை, சங்கம்பட்டி, ஆரக்குளம் மற்றும் பாஞ்சாலங்குறிச்சி கிராமங்கள்,

தூத்துக்குடி தாலுக்கா (பகுதி)

உமரிக்கோட்டை, மேலத்தட்டப்பாறை, இராமசாமிபுரம், தளவாய்புரம், திம்மராஜபுரம், பேரூரணி, அல்லிகுளம், தெற்குசிலுக்கன்பட்டி, மறவன்மடம், செந்திலம்பண்ணை, கூட்டுடன்காடு, வர்த்தகரெட்டிபட்டி, இராமநாதபுரம், முடிவைத்தானேந்தல், குமாரகிரி, கட்டாலங்குளம், சேர்வைக்காரன்மடம், குலயன்கரிசல், அய்யனடைப்பு மற்றும் கோரம்பள்ளம் கிராமங்கள், மாப்பிள்ளையூரணி (சென்சஸ் டவுன்) மற்றூம் அத்திமரப்பட்டி (சென்சஸ் டவுன்),

ஸ்ரீவைகுண்டம் தாலுகா (பகுதி)

ஆலந்தா, பூவாணி, மீனாட்சிபுரம் செக்காரக்குடி, செக்காரக்குடி, வடக்குகாரசேரி, சிங்கத்தாகுறிச்சி, உழக்குடி, கலியாவூர், முறப்பநாடு, கோவில்பட்டு, வடவல்லநாடு, கீழவல்லநாடு, தெய்வச்செயல்புரம், எல்லைநாயக்கன்பட்டி, செட்டிமல்லன்பட்டி, அணியாபரநல்லூர், தன்னூத்து, வல்லநாடு (காஸ்பா), கீழப்புத்தனெரி, வசப்பபுரம், அழிகுடி, முறப்பநாடு புதுக்கிராமம், நாணல்காடு, மணக்கரை, வித்தலாபுரம், முத்தாலங்குறிச்சி மற்றூம் வித்தலாபுரம் கோவில்பட்டு கிராமங்கள்.

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,08,897

பெண்

1,10,930

மூன்றாம் பாலினத்தவர்

15

மொத்த வாக்காளர்கள்

2,19,842தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு

2011

க. கிருஷ்ணசாமி

புதிய தமிழகம்

2006

P.மோகன்

அதிமுக

39.34

2001

A.சிவபெருமாள்

அதிமுக

43.3

1996

க. கிருஷ்ணசாமி

புதிய தமிழகம்

27.32

1991

S.X.ராஜமன்னார்

அதிமுக

66.28

1989

M.முத்தய்யா

திமுக

31.69

1984

R.S.ஆறுமுகம்

இ.தே.கா

67.89

1980

M.அப்பாதுரை

இந்திய கம்யூனிச கட்சி

52.11

1977

O.S.வேலுச்சாமி

இ.தே.கா

41.51

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

P. மோகன்

அ.தி.மு.க

38715

2

K. கிருஷ்ணசாமி

பி.எஸ்.பி

29271

3

S.X. ராஜமன்னார்

தி.மு.க

23356

4

K. மோகன்ராஜ்

தே.மு.தி.க

2690

5

V. கோதண்டராமன்

எ.ஐ.எப்.பி

1448

6

முத்துராஜ்

சுயேச்சை

978

7

A. சந்தானகுமார்

பி.ஜே.பி

963

8

மாடசாமி

சுயேச்சை

370

9

T. செந்தூர்பாண்டி

சுயேச்சை

256

10

R. சுரேஷ்குமார்

சுயேச்சை

185

11

பெருமாள்

சுயேச்சை

172

98404

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

K. கிருஷ்ணசாமி

பி.டி

71330

2

S. ராஜா

தி.மு.க

46204

3

A. முத்துபழவேசம்

பி.ஜே.பி

2614

4

M.A. தர்மர்

சுயேச்சை

1659

5

G. ராஜ்குமார்

சுயேச்சை

970

6

C. சங்கர்

சுயேச்சை

949

7

C. பரமசிவன்

சுயேச்சை

900

8

D. சந்திரா

பி.எஸ்.பி

785

9

R.S. பாலசுப்பிரமணி

சுயேச்சை

703

10

G. மாடசாமி

சுயேச்சை

339

126453

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

சட்டப்பேரவைத் தேர்தல்தமிழக தேர்தல் களம்ஓட்டப்பிடாரம் தொகுதி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

தவறவிடாதீர்

தேர்தல் 2016
copy

பொது copy

தேர்தல் 2016

More From this Author