Published : 05 Apr 2016 03:56 PM
Last Updated : 05 Apr 2016 03:56 PM

2 - பொன்னேரி

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளில் ஒன்று பொன்னேரி. இத்தொகுதியின் ஒரு பகுதி வங்காள விரிகுடாவை ஒட்டியுள்ள இந்த தொகுதியில், பொன்னேரி வட்டத்தின் பெரும்பகுதிகள் அடங்கியுள்ளன.

பொன்னேரி, மீஞ்சூர், ஆரணி ஆகிய பேரூராட்சிகள் மற்றும் புகழ்பெற்று வருகிற சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோயிலை தன்னகத்தே கொண்டுள்ளது பொன்னேரி சட்டப்பேரவை தொகுதி.

அதுமட்டுமல்லாமல், இத்தொகுதியில், போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் விட்டுப்போன வரலாற்றுச் சுவடுகளை கொண்டுள்ள பழவேற்காடு அமைந்துள்ளது.

கடலும், ஏரியும் சூழ்ந்த தீவு பகுதியான பழவேற்காடு, வங்காள விரிகுடாவின் முகத்துவாரம், பறவைகள் சரணாலயம், டச்சுக் கல்லறை, பழமையான மாதா கோயில் ஆகியவற்றுடன் சுற்றுலா பயணிகள் நேசிக்கும் இடமாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தொகுதியில் உள்ள மீஞ்சூரை சுற்றியுள்ள பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான காமராஜர் துறைமுகம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் சமையல் எரிவாயு நிரப்பும் மையம், வல்லூர், வடசென்னை அனல்மின் நிலையங்கள் மற்றும் தனியார் கப்பல் கட்டும் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் நிரம்பியுள்ளன.

அரசு மீன் வளக்கல்லூரி, அரசு கலைக்கல்லூரி ஆகியவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ள இத்தொகுதியில் தலித், வன்னியர், மீனவர்கள் மற்றும் தெலுங்கு மொழி பேசும் நாயுடு உள்ளிட்ட சமூகத்தினர் கணிசமாக வசிக்கின்றனர்.

வாழை மற்றும் பூக்கள், நெல் சாகுபடி என தொடரும் விவசாயம் மற்றும் மீன் பிடித்தொழில் இத்தொகுதியின் பிரதான தொழில்களாக விளங்குகின்றன.

மேலும், பொன்னேரி தொகுதியில் அனல் மின் நிலையம் உள்ளிட்ட அரசு திட்டங்களுக்காக தங்கள் விளைநிலங்களை அளித்த மீஞ்சூரை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பலர், உரிய வாழ்வாதாரம் இல்லாமல் தவிப்பது தொடர் கதை.

அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியேற்றப்படும் சாம்பல்களால், பல விளைநிலங்கள் மாயமாகி வருவதும், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதும் இத்தொகுதியின் நெடுநாளைய பிரச்சினைகளாக உள்ளன.

துறைமுகத்திலிருந்து, கும்மிடிப்பூண்டி மற்றும் ஆந்திர பகுதிகளுக்கு நிலக்கரி ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால் இத்தொகுதியில் உள்ள பொன்னேரி-திருவொற்றியூர் நெடுஞ்சாலை எந்நேரமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதும், சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு, பொதுமக்கள் பலர் நோயாளிகளாக உருமாறி வருவதும் தொடர்கதையாக உள்ளது.

மேலும், பழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வாறவேண்டும், பழவேற்காடு பஸ் நிலையம் அமைக்கவேண்டும், பழவேற்காடு ஏரியில்- பழவேற்காடு- எடமணிக்குப்பம் இடையே உயர்மட்ட பாலம் அமைக்கவேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் கிடப்பில் கிடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கடந்த 1951 முதல் 2011 வரை நடந்த 14 தேர்தல்களில், 6 முறை அதிமுகவும், 4 முறை திமுகவும், இரு முறை காங்கிரஸும், ஒரு முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், ஒரு முறை கிசான் மஸ்தூர் பிரஜா கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. இதில், கடந்த 2011-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக வேட்பாளர் பொன்.ராஜா 93,624 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் மணிமேகலை 62, 354 வாக்குகள் பெற்று 2-ம் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

ப.பலராமன்

அதிமுக

2

டாக்டர் கே.பரிமளம்

திமுக அணி

3

வே.செந்தில்குமார்

விசிக

4

அ.பாண்டியன்

பாமக

5

கி.கணேசன்

பாஜக

6

சே.வினோத்பாபு

நாம் தமிழர்

தொகுதியில் அடங்கும் பகுதிகள்

பொன்னேரி வட்டம், பூங்குளம், எஞ்சூர், செலியம்பேடு, மாங்கோடு, கீரப்பாக்கம், கள்ளூர், அண்ணாமலைச்சேரி, பெரியவேப்பத்தூர், உப்பு நெல்வயல், அகரம், தேவம்பட்டு, கங்காணிமேடு, உமிபேடு, செகண்யம், பெரிய கரும்பூர், பனப்பாக்கம், குமரஞ்சேரி, இலுப்பாக்கம், கோளூர், சிறுளப்பாக்கம், அவுரிவாக்கம், கனவண்துறை, பாக்கம், திருப்பாலைவனம், பூவாமி, வேம்பேடு, ஆவூர், விடதண்டலம், சோம்பட்டு, பரணம்பேடு, கிளிக்கோடி, காட்டாவூர், மேதூர், ஆசனம்புதூர், வஞ்சிவாக்கம், பிரளயம்பாக்கம், ஆண்டார்மடம், பழவேற்காடு, தாங்கல்பெரும்பலம், சிறுபழவேற்காடு, கடம்பாக்கம், தத்தமஞ்சி, பெரும்பேடு, சின்னக்காவனம், கூடுவாஞ்சேரி, கனகவல்லிபுரம், திருப்பேர், எலியம்பேடு, லிங்கிபையன்பேட்டை, சோமஞ்சேரி, அதமனன்சேரி, சிறுளப்பன்சேரி, காட்டூர், கருங்காலி, களஞ்சி, காட்டுப்பள்ளி, வயலூர், திருவெள்ளைவாயல், ஏரிப்பள்ளிக்குப்பம், வேளுர், ஆலாடு, குமரசிறுளகுப்பம், கணியம்பாக்கம், கடமஞ்சேரி, தினைப்பாக்கம், மெரட்டூர், தேவதானம், தடப்பெரும்பாக்கம், வைரவன்குப்பம், பேரவள்ளூர், துறைநல்லூர், வடக்குநல்லூர், செவிட்டுபனபாக்கம், போந்தவாக்கம், மாதவரம், மில்லியன்குப்பம், சின்னம்பேடு, கீல்மேனி, தச்சூர், அனுப்பம்பட்டு, வெள்ளம்பாக்கம், தோட்டக்காடு, கல்பாக்கம், நெய்தவாயல், நாலூர், வன்னிப்பாக்கம், ஆமூர், பஞ்செட்டி, ஆதம்பாக்கம், நத்தம், எர்ணாவாக்கம், பாண்டிகவனூர், ஜெகநாதபுரம், நந்தியம்பாக்கம், புழுவேதிவாக்கம், வல்லூர், சீமாபுரம், மடியூர், வழுதிகைமேடு, ஞாயிறு, மாஃபூஸ்கான்பேட்டை, புதுப்பாக்கம், பெரியமுல்லைவாயல், சின்னமுல்லைவாயல், திருநிலை, கோடிப்பள்ளம், அருமந்தை, விச்சூர், வெள்ளிவாயல், இடையன்சாவடி, அரசூர், அப்பளாவரம் மற்றும் ஆண்டவாயல் கிராமங்கள்.

ஆரணி பேருராட்சி, பொன்னேரி பேருராட்சி, மீஞ்சூர் பேருராட்சி, அத்திப்பட்டு நகரம்.

29/4/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

123408

பெண்

126908

மூன்றாம் பாலினித்தவர்

65

மொத்த வாக்காளர்கள்

250381

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

பொன்னேரி சட்டமன்ற தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1951 – 2011 )

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

வாக்குகள்

விழுக்காடு

1951

ஒ. செங்கம் பிள்ளை

கிசான் மஜ்தூர் பிரஜா கட்சி

27489

27.67

1957

வி. கோவிந்தசாமி நாயுடு

காங்கிரஸ்

32119

25.94

1962

டி. பி. ஏழுமலை

காங்கிரஸ்

26125

48.41

1967

பி. நாகலிங்கம்

திமுக

37746

56.61

1971

பி. நாகலிங்கம்

திமுக

39783

58.39

1977

எஸ். எம். துரைராஜ்

அதிமுக

31796

42.64

1980

ஆர். சக்கரபாணி

அதிமுக

42408

51.07

1984

சேகர் என்கிற கே. பி. குலசேகரன்

அதிமுக

61559

59.05

1989

கே. சுந்தரம்

திமுக

51928

44.53

1991

இ. இரவிக்குமார்

அதிமுக

77374

64.74

1996

கே. சுந்தரம்

திமுக

87547

61.72

2001

ஏ. எஸ். கண்ணன்

இந்திய பொதுவுடமைக் கட்சி

81408

54.58

2006

பி. பலராமன்

அதிமுக

84259

---

2011

பொன். ராசா

அதிமுக

93649

--

2ம் இடம் பிடித்தவர்

கட்சி

வாக்குகள்

விழுக்காடு

கணபதி ரெட்டியார்

கிசான் மஜ்தூர் பிரஜா கட்சி

25626

25.79

டி. பி. ஏழுமலை

காங்கிரசு

31392

25.35

பி. நாகலிங்கம்

திமுக

15721

29.13

டி. பி. ஏழுமலை

காங்கிரஸ்

27751

41.62

டி. பி. ஏழுமலை

நிறுவன காங்கிரஸ்

21650

31.77

ஜி. வெற்றிவீரன்

திமுக

20524

27.53

பி. நாகலிங்கம்

திமுக

27490

33.11

கே. சுந்தரம்

திமுக

41655

39.96

கே. தமிழரசன்

அதிமுக (ஜெ)

44321

38.01

கே. பார்த்தசாரதி

திமுக

36121

30.22

ஜி. குணசேகரன்

அதிமுக

42156

29.72

கே. சுந்தரம்

திமுக

54018

36.22

வி. அன்பு வாணன்

திமுக

73170

ஏ. மணிமேகலை

திமுக

62576

--

2006 – தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

பி.பலராமன்

அதிமுக

84259

2

வி.அன்புவண்ணன்

திமுக

73170

3

எஸ்.அங்கமுத்து

தேமுதிக

13508

4

இ.மணி

சுயேச்சை

1649

5

சி.ஜானகிராமன்

சிபிஐ (எம்-எல்)

1185

6

எஸ்.நடராஜன்

பிஎஸ்பி

865

7

கே.ஏழுமலை

சுயேச்சை

593

175229

20 11 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

பொன் ராஜா

அதிமுக

93624

2

மணி மேகலை

திமுக

62354

3

S.ராஜா

பிஎஸ்பி

1347

4

K.கணேசன்

பிஜேபி

1335

5

ஜெயகாந்தன்

சுயேச்சை

1167

6

N.பிரபாகரன்

பு பா

754

7

K.ரகுபதி

சுயேச்சை

637

8

E.பழனி

சுயேச்சை

636

9

M.தேவேந்திரன்

சுயேச்சை

420

10

S.ரகுபதி

சுயேச்சை

319

11

J .S .கனி முத் து

சுயேச்சை

242

162835


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x