Published : 05 Apr 2016 16:08 pm

Updated : 24 May 2016 12:07 pm

 

Published : 05 Apr 2016 04:08 PM
Last Updated : 24 May 2016 12:07 PM

115 - பல்லடம்

115

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளில் ஒன்று பல்லடம் தொகுதி. 1957-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

பல்லடத்தின் பிரதான தொழில்களாக, கறிக்கோழி பண்ணை, விசைத்தறிகூடங்கள், நூற்பாலைகள் மற்றும் விவசாயம் தொகுதி மக்களின் பிரதானத்தொழில்களாகும். பல்லடம் நகராட்சியில் 18 வார்டுகளும், 28 ஊராட்சிகளையும் கொண்டதாகும். தொகுதியில் கொங்குவேளாளர், தலித் மற்றும் நாயக்கர் மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். ஊராட்சி பகுதிகளில் சாலைகள், நிழற்குடைகள், நியாய விலைக்கடை கட்டிடங்கள் போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரசு கல்லூரி வரவில்லை. 2 வது கூட்டுக்குடிநீர்திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்பது மக்களின் அதிருப்தி.

பல்லடம் பகுதியில் மக்கள் தொகைக்கு ஏற்ப, குடிநீர் விநியோகம் இல்லை. இதனால், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். பல்லடம் அரசுமருத்துமனையை தரம் உயர்த்த வேண்டும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும்விதமாக, சாலைவசதிகளை விரிவுபடுத்த வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுச்சாலை அமைத்து, போக்குவரத்து நெரிசலை தீர்க்க வேண்டும்.

அதேபோல், பல்லடம்-திருச்சி தேசியநெடுஞ்சாலையில் விபத்துக்களை குறைக்கும்விதமாக சாலை மையத் தடுப்புகள் அமைக்க வேண்டும். பல்லடம் -மங்கலம் சாலையை விரிவுப்படுத்தி, புதிதாக தார்ச்சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும். பல்லடம்-மங்கலம் நான்குசாலை சந்திப்பில் மேம்பாலம் அமைக்க வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க வேண்டும், பல்லடத்தில் மின்மயான வசதி, வாரச்சந்தையில் போதிய கட்டிட வசதிகள் செய்துதரவேண்டும் ஆகியவை தொகுதி மக்களின் பிரதான எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.

பல்லடம் பகுதியில் பிரதானத் தொழிலாக விசைத்தறி உள்ளது. தொழிலை நசிவடையச் செய்யும் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். பல்லடம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் காடாத்துணிகளை விற்பதற்கு, தனிச்சந்தை உருவாக்க வேண்டும். பண்ணைகளில் கறிக்கோழிகளை வளர்க்க இலவச மின்சாரம் வழங்க வேண்டும். வெயில்காலங்களில், கறிக்கோழி பண்ணைகளின் தேவைகளை நிறைவேற்றித்தர ஏற்பாடு செய்ய வேண்டும். அரசு, மானியத்தில் தீவனங்கள் வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள் இங்குள்ள விசைத்தறி மற்றும் கறிக்கோழி தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள்.

தொகுதியின் முதல் சட்டப்பேரவை உறுப்பினராக பிரஜா சோசியலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சின்னதுரை என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 15ஆண்டுகளாக அதிமுக வேட்பாளரே தொடர்ந்து வெற்றிபெற்று வரும் தொகுதி இது. பிரஜா சோசியலிஸ்ட் கட்சி 3முறையும், திமுக 2முறையும், அதிமுக 7முறையும், காங்கிரஸ் 1முறையும் வெற்றிபெற்றுள்ளது.

தற்போது, பல்லடத்தின் 13-வது சட்டப்பேரவை உறுப்பினராக அதிமுக கே. பரமசிவம் உள்ளார்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

அ. நடராஜன்

அதிமுக

2

சு.கிருஷ்ணமூர்த்தி

திமுக

3

க.முத்துரத்தினம்

மதிமுக

4

எஸ்.குமார்

பாமக

5

சு.தங்கராஜ்

பாஜக

6

த.வேலுச்சாமி

நாம் தமிழர்



தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

திருப்பூர் வட்டம் (பகுதி)

முதலிபாளையம், நாச்சிபாளையம், பெருந்தொழுவு, முத்தணம்பாளையம், இடுவாய், உகயனூர், தொங்குட்டிபாளையம், வடக்கு அவிநாசிபாளையம், அழகுமலை, கண்டியன்கோவில், தெற்கு அவிநாசிபாளையம், பொங்கலூர், மடப்பூர், காட்டூர், வி.கள்ளிபாளையம், எலவந்தி, கேத்தனூர், வாவிபாளையம் மற்றும் வி.வடமலைபாளையம் கிராமங்கள், ஆண்டிபாளையம் (சென்சஸ் டவுன்), மங்கலம்(சென்சஸ் டவுன்), முருகன்பாளையம் (சென்சஸ் டவுன்) மற்றும் வீரபாண்டி (சென்சஸ் டவுன்),

பல்லடம் தாலுக்கா (பகுதி) பூமலூர், வேலம்பாளையம், நாரணபுரம், கரைபுதூர், கணபதிபாளையம், பல்லடம், கக்கம்பாளையம், இச்சிப்பட்டி, கோடங்கிபாளையம், பணிக்கம்பட்டி, வடுகபாளையம், சிட்டம்பலம், அனுப்பட்டி,கஸ்பா, அய்யம்பாளையம், கரடிபாவி, பருவை, மல்லேகவுண்டன்பாளையம், புளியம்பட்டி மற்றும் கே.கிருஷ்ணபுரம் கிராமங்கள், செம்மிபாலையம் (சென்சஸ் டவுன்) மற்றும் பல்லடம் (நகராட்சி)



29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:



ஆண்

1,67,755

பெண்

1,64,178

மூன்றாம் பாலினத்தவர்

29

மொத்த வாக்காளர்கள்

3,319,62



தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1957 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

வாக்குகள்

1957

பி. எஸ். சின்னதுரை

பிரஜா சோசலிச கட்சி

27111

1962

செங்காளியப்பன்

காங்கிரஸ்

33437

1967

கே. என். கே. கவுண்டர்

பிரஜா சோசலிச கட்சி

31977

1971

கே. என். குமாரசாமி

பிரஜா சோசலிச கட்சி

34876

1977

பி. ஜி. கிட்டு

அதிமுக

27172

1980

பரமசிவ கவுண்டர்

அதிமுக

40305

1984

பரமசிவ கவுண்டர்

அதிமுக

51083

1989

மு. கண்ணப்பன்

திமுக

45395

1991

கே. எஸ். துரைமுருகன்

அதிமுக

69803

1996

எஸ். எஸ். பொன்முடி

திமுக

73901

2001

எஸ். எம். வேலுசாமி

அதிமுக

82592

2006

எஸ். எம். வேலுசாமி

அதிமுக

73059

ஆண்டு

2ம் இடம் பிடித்தவர்

கட்சி

வாக்குகள்

1957

குமாரசாமி கவுண்டர்

காங்கிரஸ்

17515

1962

பி. எஸ். சின்னதுரை

பிரஜா சோசலிச கட்சி

14736

1967

செங்காளியப்பன்

காங்கிரஸ்

24421

1971

செங்காளியப்பன்

ஸ்தாபன காங்கிரஸ்

21070

1977

கே. என். குமாரசாமி

காங்கிரஸ்

20175

1980

கே. என். குமாரசாமி

காங்கிரஸ்

32345

1984

சிவசாமி

சுயேச்சை

40510

1989

கே. சிவராஜ்

அதிமுக (ஜெ)

31819

1991

மு. கண்ணப்பன்

திமுக

37079

1996

கே. எஸ். துரைமுருகன்

அதிமுக

41361

2001

எஸ். எஸ். பொன்முடி

திமுக

50118

2006

எஸ். எஸ். பொன்முடி

திமுக

67542

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

வேலுசாமி.S.M

அதிமுக

73059

2

பொன்முடி.S.S

திமுக

67542

3

சுப்ரமணியம்.G

தேமுதிக

19697

4

திருமூர்த்தி.P.M

பாஜக

3492

5

மயில்சாமி..S.P

பகுஜன் சமாஜ் கட்சி

1226

6

ராஜேந்திரன்.A.S

சுயேச்சை

927

7

முருகேசன்.K.P

சுயேச்சை

630

8

சுப்பிரமணியன்.M

சுயேச்சை

507

167080

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

பரமசிவம்.K.P

அதிமுக

118140

2

பாலசுப்ரமணியன்.K

கொங்கு நாடு முன்னேற்றக் கழகம்

48364

3

சண்முகசுந்தரம்.M

பாஜக

4423

4

அண்ணாதுரை.A

சுயேச்சை

2693

5

அண்ணாதுரை.R

சுயேச்சை

1819

6

செந்தில்முருகன்.M

சுயேச்சை

1471

176910

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

சட்டப்பேரவைத் தேர்தல்தமிழக தேர்தல் களம்பல்லடம் தொகுதி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

தவறவிடாதீர்

தேர்தல் 2016
copy

பொது copy

தேர்தல் 2016

More From this Author