

1. தனுஷ்கோடி – புதுரோடு தென்கடல் பகுதியில் கல்தூண்டி வளைவு அமைக்கப்படும்.
2. நடராஜபுரம் இராமகிருஷ்ணாபுரம் புதுரோடு கரையூர் பகுதி ஏழை மீனவர்களுக்குப் பயன்படும் வகையில் சமூகக் கூடங்கள் கட்டித்தரப்படும்.
3. பார்த்திபனூர் மதகு அணைக்குக் கீழ் வைகை இடது மற்றும் வலது கால்வாய்கள் சிமெண்ட் தளம் அமைத்துச் செப்பனிடப்படும்.
4. இராமநாதபுரத்திலும் பரமக்குடியிலும் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும்.
5. இராமநாதபுரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் இராமநாதபுரம் - தூத்துக்குடி சாலை ஆகியன நான்கு வழிச்சாலைகளாக மாற்றப்படும்.
6. கமுதி அருகே மலட்டாற்றில் அணை கட்டப்படும்.
7. முதுகுளத்தூர் தொகுதியில் பொறியியல் கல்லூரி அமைக்கப்படும்.
8. முதுகுளத்தூர் – சாயல்குடி சாலையில் முதுகுளத்தூர் பேரூராட்சியில் புறவழிச்சாலை அமைக்கப்படும்.
9. சிக்கல் பகுதியைச் சுற்றி 50 கிராமங்கள் உள்ளதால் சிக்கலில் பேருந்து நிலையம் அமைக்கப்படும்.
10. முதுகுளத்தூர் தொகுதியில் உழவர் சந்தை அமைக்கப்படும்.
11. ஏர்வாடியில் அரசு மனநலக் காப்பகம் அமைக்கப்படும்.
12. கீழக்கரை நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும்.
13. தொண்டியில் அரசுப் போக்குவரத்துப் பணிமனை அமைக்கப்படும்.
14. தேவிப்பட்டினம் சுற்றுலா தலம் மேம்படுத்தப்படும்.