Published : 05 Apr 2016 03:58 PM
Last Updated : 05 Apr 2016 03:58 PM

148 - குன்னம்

பெரம்பலூர் மற்றும் அரியலூர் வருவாய் மாவட்டங்களில் விரவி இருப்பது குன்னம் சட்டமன்ற தொகுதி. பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம் வட்டத்தின் ஒரு பகுதி, அரியலூர் மாவட்டத்தின் செந்துறை வட்டம் என அதிக கிராமங்களை உள்ளடக்கியது இத்தொகுதி. வரகூர் தனித்தொகுதியாக இருந்தது மறுசீரமைப்பில் குன்னம் பொதுத் தொகுதியானதில் வன்னியர், தலித் மற்றும் உடையார் சமூக மக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர்.

நிலத்தடியில் சிமென்டுக்கான மூலப்பொருட்கள் அதிகமிருப்பதால், கனிம சுரங்கங்கள் இத்தொகுதியில் அதிகளவு ஆக்கிரமித்துள்ளன. இவற்றால் இங்கு வாழும் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதோடு, விவசாயத்திற்கு சவாலாக இந்த சுரங்கங்கள் மாறி வருகின்றன. ஒரு காலத்தில் கடலாக இருந்து நிலப்பரப்பாக மாறியதன் காரணமாக உலகளவில் தொல்லுயிர் படிம எச்சங்களின் அடையாளங்கள் இங்கு அதிகம். கொளக்காநத்தம் அருகேயுள்ள சாத்தனூர் கல்மரம் சுற்றுலா தலத்தை தவிர்த்து, அப்பெருமையை அடுத்த தலைமுறைக்கு சொல்லும் ஏற்பாடுகள் இல்லை. சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு திருமாந்துறை உள்ளிட்ட கிராமங்களில் கையகப்படுத்தப்பட்ட சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலமும், எதிர்பார்க்கப்பட்ட தொழில் வாய்ப்புகளும் அடுத்து வந்த ஆட்சியாளர்களின் அரசியல் காழ்ப்பினால் கிடப்பில் கிடக்கின்றன. இதேபோல சாலை விபத்துக்கள் அதிகம் நடைபெறும் இப்பகுதிக்கு வரப்பிரசாதமாக அறிவிக்கப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும், அதற்காக ஒதியத்தில் ஆ.ராசா ஒதுக்கிய நிலமும் காத்திருக்கின்றன. சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் இந்த தொகுதியில் இன்னமும் சவாலாகவே இருக்கிறது. பெருவாரியான வாக்காளர்கள் விவசாயிகள் மற்றும் அதன் தொழிலாளர்கள். விவசாயத்திற்காக ஏரிகளை அதிகம் நம்பியிருக்கும் இத்தொகுதியில், ஆக்கிரமிப்புகளாலும் தூர்வாராததாலும் விவசாய வாழ்வாதாரம் நலிந்திருக்கிறது. இந்த ஏரிகளுக்கு உயிர்கொடுக்க வெள்ளாற்றில் தடுப்பணைகள் வேண்டும் என்பதும் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை.

தொகுதியின் முதல் எம்.எல்.ஏவாக இருப்பவர் திமுகவின் எஸ்.எஸ்.சிவசங்கர். சட்டமன்ற செயல்பாடுகள், சமூக ஊடக பதிவுகள் வாயிலாக மாநில அளவில் அறியப்பட்டவர். கட்சி நிலைப்பாட்டில் சட்டமன்ற புறக்கணிப்புகளை அதிகம் மேற்கொண்டதில் தொகுதியின் எதிர்பார்ப்புகள் பதிவாகவில்லை. எனினும் தனது தனிப்பட்ட முயற்சிகளால் பல கிராமங்களுக்கு சத்தமின்றி உதவிகளை செய்திருக்கிறார் இவர். தொகுதி வளர்ச்சிக்கு வழிசெய்யும் புதிய சட்டமன்ற உறுப்பினருக்காக தொகுதி வாக்காளர்கள் அதிக எதிர்ப்பார்ப்புகளுடன் காத்திருக்கிறார்கள்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

ஆர்.டி.ராமச்சந்திரன்

அதிமுக

2

த.துரைராஜ்

திமுக

3

ஜெ.முகமது ஷானவாஸ்

விசிக

4

க.வைத்திலிங்கம்

பாமக

5

ஏ.வி.ஆர்.ரகுபதி

ஐஜேகே

6

ப.அருள்

நாம் தமிழர்தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

• செந்துறை தாலுக்கா

• குன்னம் தாலுக்கா (பகுதி)

திருமாந்துறை, பெண்ணக்கோணம் (தெற்கு), அத்தியூர் (தெற்கு), அகரம்சீகூர், வசிஷ்டபுரம், கீழப்பெரம்பலூர், வயலப்பாடி, கிழுமத்தூர்(தெற்கு), கிழுமத்தூர் (வடக்கு), வடக்கலூர், பெருமத்தூர் (வடக்கு), சிறுமத்தூர், கீழப்புலியூர் (வடக்கு), கீழப்புலியூர் (தெற்கு), பெருமத்தூர் (தெற்கு) ஆண்டிகுரும்பலூர், நன்னை (மேற்கு), நன்னை (கிழக்கு), ஓலைப்பாடி (மேற்கு), துங்கபுரம் (வடக்கு), துங்கபுரம் (தெற்கு), பரவாய் (கிழக்கு), பரவாய் (மேற்கு), மலைராயநல்லூர், எழுமூர் (கிழக்கு), எழுமுர் (மேற்கு), அசூர், சித்தளி (கிழக்கு), சித்தளி (மேற்கு), பேரளி(வடக்கு), பேரளி (தெற்கு), ஒதியம், பெரியம்மாபாளையம், குன்னம், வரகூர், கொளப்பாடி, புதுவேட்டைக்குடி, காடூர் (வடக்கு), காடூர் (தெற்கு)பெரியவெண்மணி (கிழக்கு), பெரியவெண்மணி (மேற்கு), மேலமாத்தூர், அழகிரிப்பாளையம், தொண்டப்பாடி, கூத்தூர், ஆதனூர் (தெற்கு), ஆதனூர் (வடக்கு), கொட்டரை, சாத்தனூர், சிறுகன்பூர் (கிழக்கு), சிறுகன்பூர் (மேற்கு), வரகுபாடி, காரை (கிழக்கு), காரை (மேற்கு), தெரணி, ஆயினாபுரம், கொளக்காநத்தம், கொளத்தூர் (மேற்கு) கொளத்தூர் (கிழக்கு) திம்மூர், கூடலூர், புஜங்கராயநல்லூர், நொச்சிக்குளம், ஆத்தூர்,சில்லக்குடி (வடக்கு) மற்றும் சில்லக்குடி (தெற்கு) கிராமங்கள்.

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,27,061

பெண்

1,28,654

மூன்றாம் பாலினத்தவர்

11

மொத்த வாக்காளர்கள்

2,55,726

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

சிவசங்கர்.S.S

திமுக

81723

2

துரை காமராஜ்

தேமுதிக

58766

3

ஜெயசீலன்.P

இந்திய ஜனநாயக கட்சி

13735

4

பொன்னிவளவன்.P

சுயேச்சை

8395

5

பாஸ்கரன்.T

பாஜக

2509

6

ரமேஷ்.B

சுயேச்சை

2264

7

ராஜேந்திரன்.K

பகுஜன் சமாஜ் கட்சி

1526

8

மருததுரை.G

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா

1433

9

குமார்.M

சுயேச்சை

1411

10

தங்கவேல்.M

இராஷ்டிரிய ஜனதா தளம்

1070

11

சாமிநாதன்.P

சுயேச்சை

901

12

தேத்தி.M

லோக ஜனசக்தி கட்சி

561

174294

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x