162 - பூம்புகார்

162 - பூம்புகார்
Updated on
2 min read

தரங்கம்பாடி வட்டம் முழுமையும் சீர்காழி தாலுக்காவின் கீழையூர், மேலலயூர், மற்றும் வாணகிரி கிராமங்களையும் உள்ளடக்கியதான இந்த தொகுதியில் தொகுதி சீரமைப்பில் கலைக்கப்பட்ட குத்தாலம் தொகுதியில் இருந்து அசிக்காடு, தொழுதலங்குடி, துளசேந்திரபுரம், மேலையூர், சென்னிய்நல்லூர், இனாம் சென்னியநல்லூர், மேக்கிரிமங்கலம், மாதிரிமங்கலம், திருவாலங்காடு, கோமல் - கிழக்கு, கோமல் - மேற்கு, பேராவூர், கருப்பூர், காஞ்சிவாய், பாலையூர், ஸ்ரீ கண்டபுரம், கொத்தங்குடி, கங்காதரபுரம், பொரும்பூர், எழமகளுர், நக்கம்பாடி, மாந்தை, கிழபருத்திகுடி, மேலபருத்திகுடி, நல்லாவூர், கோடிமங்கலம், மேலகலங்கன், கோனேரிராஜபுரம், 1பிட், சிவனாரகரம் மற்றும் கோனேரிராஜபுரம் உட்பட ஐம்பது ஊராட்சிகள் இணைந்துள்ளன.

புகழ்பெற்ற பரிகாலத் தலமான திருக்கடையூர், கேது தலமான கீழப்பெரும்பள்ளம், காந்திஜியோடு தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட வள்ளியம்மை பிறந்த தில்லையாடி உள்ளிட்ட முக்கியமான இடங்களும், பூம்புகார், தரங்கம்பாடி, பொறையார், உள்ளிட்ட பல முக்கிய நகரங்களும் இத்தொகுதியில் உள்ளன. தரங்க்மபாடி மட்டுமே பேரூராட்சி பகுதி, மீதமுள்ளவை ஊராட்சிகள்.

விவசாயமும், மீன்பிடித் தொழிலும் முக்கிய தொழில்களான விளங்குகின்றன. ஆனால் அவற்றிற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப் படவில்லை. தரங்கம்பாடியில் மீன்பிடி துறைமுகம் அமைத்துத் தரவேண்டும் என்ற மீனவ மக்களின் கோரிக்கை இன்னமும் ஏற்கப் படவேயில்லை. பூம்புகாரில் மட்டும் வேலைகள் தொடங்கியுள்ளது. விவசாய உற்பத்திப் பொருட்களைக் கொண்டு தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கவனிக்கப் படாமலே உள்ளது. தொகுதியின் தலைநகரம் உட்பட எங்குமே தலைமை மருத்துவமனைகள் இல்லை. இருப்பவை எல்லாம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமே. ஆறு ஆறுகள் கடலில் கலக்கும் இப்பகுதியில் கடல்நீர் உட்புகாவண்ணம் தடுப்பணைகள் எதுவும் கட்டப் படாமல் நிலத்தடி நீர் மட்டம் உப்புநீராக மாறிக் கொண்டிருக்கிறது.

இதுவரை நடந்த தேர்தல்களில் ஐந்துமுறை அதிமுகவும், மூன்று முறை திமுகவும் ஒருமுறை பா.ம.கவும் வெற்றி பெற்றுள்ளன.

2016 தேர்தலில் கலம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

எஸ்.பவுன்ராஜ்

அதிமுக

2

ஏ.எம்.ஷாஜஹான்

திமுக (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்)

3

எம்.சங்கர்

தமாகா

4

ஆர்.அன்பழகன்

பாமக

5

எஸ்.கலியபெருமாள்

நாம் தமிழர்

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

தரங்கம்பாடி தாலுகா

சீர்காழி தாலுகா (பகுதி)

கீழையூர், மேலலயூர், மற்றும் வாணகிரி கிராமங்கள்,

மயிலாடுதுறை தாலுகா (பகுதி)

அசிக்காடு, தொழுதலங்குடி, துளசேந்திரபுரம், மேலையூர், சென்னிய்நல்லூர், இனாம் சென்னியநல்லூர், மேக்கிரிமங்கலம், மாதிரிமங்கலம், திருவாலங்காடு, இனாம் திருவாலங்காடு, திருவாடுதுறை, பழைய கடலூர், கொக்கூர், மருதூர், பெருமாள்கோயில், கீழையூர், செங்குடி, வழுவூர், திருநள்கொண்டசேரி, அரிவாளுர், பெருஞ்சேரி, கழனிவாசல், தத்தங்குடி, பண்டாரவாடை, மங்கநல்லூர், கப்பூர், கொழையூர், அனந்தநல்லூர், கோமல் - கிழக்கு, கோமல் - மேற்கு, பேராவூர், கருப்பூர், காஞ்சிவாய், பாலையூர், ஸ்ரீ கண்டபுரம், கொத்தங்குடி, கங்காதரபுரம், பொரும்பூர், எழமகளுர், நக்கம்பாடி, மாந்தை, கிழபருத்திகுடி, மேலபருத்திகுடி, நல்லாவூர், கோடிமங்கலம், மேலகலங்கன், கோனேரிராஜபுரம், 1பிட், சிவனாரகரம் மற்றும் கோனேரிராஜபுரம் கிராமங்கள்

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,27,013

பெண்

1,27,759

மூன்றாம் பாலினத்தவர்

2

மொத்த வாக்காளர்கள்

2,54,774

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் (1977 - 2011 )

ஆண்டு

வெற்றிபெற்றவர்

கட்சி

2011

எஸ்.பவுன்ராஜ்

அதிமுக

2006

பெரியசாமி

பாமக

2001

N.ரங்கநாதன்

அதிமுக

1996

G.மோகனதாசன்

திமுக

1991

M.பூராசாமி

அதிமுக

1989

M.முகம்மதுசித்தீக்

திமுக

1984

N.விஜயபாலன்

அதிமுக

1980

N.விஜயபாலன்

அதிமுக

1977

S.கணேசன்

திமுக

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

பெரியசாமி.K

பாமக

55375

2

பவுண்ராஜ்.S

அதிமுக

54411

3

மாயா வெங்கடேசன்.M

சமாஜ்வாதி கட்சி

3328

4

பிரபாகரன்.V.R

தேமுதிக

2395

5

கிருஷ்ணமூர்த்தி.K.A

பாஜக

1062

6

வெங்கடேசன் மாரி

சுயேச்சை

852

7

பாலகிருஷ்ணன்.K

சுயேச்சை

803

8

கருணாநிதி.A

இந்தியன் ஜஸ்டிஸ் பார்ட்டி

626

9

சக்கரவர்த்தி.K

சுயேச்சை

439

10

சரஸ்வதி.M

பகுஜன் சமாஜ் கட்சி

379

11

மலர்விழி.D

சுயேச்சை

345

120015

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

பவுன்ராஜ்.S

அதிமுக

85839

2

அகோரம்

பாமக

74466

3

முஹம்மத் தாரிக்.M.Y

எஸ்டிபிஐ

2984

4

பாலசுப்ரமணியன்.R

பாஜக

2091

5

தட்சினாமூர்த்தி.M

சுயேச்சை

1326

6

ராமகிருஷ்ணன்.S

இந்திய ஜனநாயக கட்சி

1237

7

இளஞ்செழியன்.T

பகுஜன் சமாஜ் கட்சி

763

8

நன்மாறன்.T

அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி

751

169457

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in