Published : 05 Apr 2016 16:09 pm

Updated : 07 May 2016 16:31 pm

 

Published : 05 Apr 2016 04:09 PM
Last Updated : 07 May 2016 04:31 PM

197 - உசிலம்பட்டி

197

பார்வர்டு பிளாக் கட்சிக்கும், சிங்கம் சின்னத்துக்கும் பெருமை சேர்க்கும் தொகுதி உசிலம்பட்டி. 1957-ல் உருவான இத்தொகுதி மதுரை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் அதிக பரப்பளவு கொண்டது. பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவர் பி.கே.மூக்கையாத்தேவரை தொடர்ந்து 5 முறை தேர்வு செய்த தொகுதி. குற்றம்பரம்பரை சட்டத்தை எதிர்த்து ஆங்கிலேயருக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் 1920-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் நாள் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுக்கு 17 பேர் பலியான பெருங்காமநல்லூர் கிராமம் இந்த தொகுதியில் உள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி இந்த தொகுதியில் அமைந்துள்ளது.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

இத்தொகுதியில் உசிலம்பட்டி ஒன்றியம், நகராட்சி, செல்லம்பட்டி, சேடபட்டி ஒன்றியங்கள், எழுமலை பேரூராட்சி ஆகிய பகுதிகள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. விவசாயம், செங்கல் சூளை தொழில்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் பரவலாக உள்ளனர். போதிய வேலை வாய்ப்பு இல்லாததால் இந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் முறுக்கு, இட்லி வியாபாரத்துக்காக வடமாநிலங்களுக்கு சென்று பணியாற்றி வருகின்றனர். பெண் கருக்கொலை, கொத்தடிமை தொழிலாளர்கள் சர்ச்சைக்கு பெயர் போன தொகுதி.

58 கால்வாய் திட்டம் இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. முக்கிய தொழிற்கூடங்கள் இல்லாதது பெரும் குறையாக நீடிக்கிறது. 1957-ம் ஆண்டு முதல் இதுவரை 13 சட்டமன்ற தேர்தல்களை சந்தித்துள்ளது. இந்த தொகுதியில் பார்வர்டு பிளாக் கட்சி 8 முறையும், தி.மு.க. ஒருமுறையும், அ.தி.மு.க. 2 முறையும், சுயேட்சை வேட்பாளர்கள் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.

2006-ம் ஆண்டு தேர்தலில் மகேந்திரன்(அதிமுக) வென்றார். 2011-ம் ஆண்டு தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பி.வி. கதிரவன் வெற்றி பெற்றார்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

உசிலம்பட்டி வட்டம்

பேரையூர் வட்டம் (பகுதி)

அயோத்திபட்டி, ஏழுமலை (ஆர்.எப்.), பேரையம்பட்டி, உத்தப்புரம், இ.கோட்டைபட்டி, தாடையம்பட்டி, மாணிபமேட்டுபட்டி, வண்ணான்குளம்,பெருங்காமநல்லுர், காளப்பன்பட்டி, செம்பரணி, குப்பல்நத்தம், சின்னக்கட்டளை, பெரிய கட்டளை, அதிகாரிபட்டி, திருமாணிக்கம், மேல திருமதிக்குன்னம், சூலப்புரம், சீலிநாயக்கன்பட்டி, மள்ளப்புரம், துள்ளுக்குட்டிநாயக்கனூர், பாப்பிநாயக்கன்பட்டி, குடிபட்டி, கேத்துவார்பட்டி, ஜம்பலபுரம், ஆவல்சேரி, சேடபட்டி, நாகையாபுரம், மங்கல்ரேவு, குடிசேரி, அத்திப்பட்டி, வண்டாரி, விட்டல்பட்டி, சாப்டூர் (ஆர்.எப்.) மற்றும் சாப்டூர் கிராமங்கள்.

ஏழுமலை (பேரூராட்சி)

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,33,617

பெண்

1,32,901

மூன்றாம் பாலினத்தவர்

3

மொத்த வாக்காளர்கள்

2,66,521

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1957 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு

2011

கதிரவன்

பார்வர்டு பிளாக்

2006

I.மகேந்திரன்

அதிமுக

42.17

2001

L.சந்தானம்

பார்வர்டு பிளாக்

43.32

1996

P.N.வல்லரசு

பார்வர்டு பிளாக்

76.18

1991

R.பாண்டியம்மாள்

அதிமுக

50.3

1989

P.N.வல்லரசு

திமுக

33.74

1984

P.K.M.முத்துராமலிங்கம்

சுயேட்சை

60.9

1980

S.ஆண்டித்தேவர்

பார்வர்டு பிளாக்

47.67

1977

P.K.மூக்கைய்யாத்தேவர்

பார்வர்டு பிளாக்

61.95

1971

P.K.மூக்கைய்யாத்தேவர்

பார்வர்டு பிளாக்

1967

P.K.மூக்கைய்யாத்தேவர்

பார்வர்டு பிளாக்

1962

P.K.மூக்கைய்யாத்தேவர்

பார்வர்டு பிளாக்

1957

P.K.மூக்கைய்யாத்தேவர்

சுயேட்சை

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

மகேந்திரன்.I

அதிமுக

39009

2

கதிரவன்.P.V

திமுக

35964

3

ராஜா.K.T

தேமுதிக

9672

4

சுரேந்திரன்.K

எம் ஏ ஜி

3874

5

பன்னீர் செல்வம்.V

பாஜக

1516

6

முத்தையா பசும்பொன்.K

அனைத்திந்திய பார்வர்டு பிளாக்

840

7

திருமூர்த்தி.A

சுயேச்சை

658

8

சுர்யதேவ்.M

பகுஜன் சமாஜ் கட்சி

526

9

இளையரசு.P.P

சுயேச்சை

228

10

தனலட்சுமி.P

ஐக்கிய ஜனதா தளம்

216

92503

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

கதிரவன்.P.V

பார்வர்டு பிளாக்கு

88253

2

ராமசாமி.O

திமுக

72933

3

கண்ணன்.C

சுயேச்சை

3354

4

வெங்கடேசன்.R

பகுஜன் சமாஜ் கட்சி

2235

5

மதுரன்.R

பாஜக

1919

6

பாண்டி.K

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா

1558

7

ராஜீவ்.K

சுயேச்சை

771

8

நாகராஜன்.N

சுயேச்சை

498

9

முத்தையா.P

சுயேச்சை

437

10

மணிகண்டன்.D

சுயேச்சை

335

172293

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

உசிலம்பட்டி தொகுதிதமிழக தேர்தல் களம்சட்டப்பேரவைத் தேர்தல்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

தவறவிடாதீர்

தேர்தல் 2016
copy

பொது copy

தேர்தல் 2016

More From this Author