188 - மேலூர்

188 - மேலூர்
Updated on
1 min read

கிரானைட்டுக்கு பெயர் போன தொகுதி மேலூர். இங்குள்ள நூற்றுக்கணக்கான குவாரிகளில் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு உலகின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மதுரை மாவட்டத்திலேயே அதிக மலை பகுதிகளை உள்ளடக்கிய தொகுதி. பெரியாறு, வைகை தண்ணீர் மூலம் ஏராளமான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. எளிமையின் அடையாளமாக திகழ்ந்த முன்னாள் அமைச்சர் கக்கன் இந்த தொகுதியை சேர்ந்தவர். மதுரை மாவட்டத்தின் ஒரே அரசு கலை கல்லூரி மேலூரில் இயங்கி வருகிறது. மேலூர் ஒன்றியம், மேலூர் நகராட்சி, கொட்டாம்பட்டி ஒன்றியம், அ.வல்லாளபட்டி பேரூராட்சி ஆகியவை இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. விவசாயிகள், குவாரி கூலி தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

கடைமடை பாசன பகுதி வரை தண்ணீர் கொண்டு செல்வது, தடை செய்யப்பட்ட கிரானைட் தொழிலை மீண்டும் முறையாக நடத்துவது, கூட்டுறவு நூற்பாலை திறப்பது உள்ளிட்ட பிரதான பிரச்சனைகள் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ளன.

1951-ம் ஆண்டு முதல் இதுவரை 14 தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 7 முறையும், தி.மு.க. 2 முறையும், அ.தி.மு.க. 4 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன.

கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க உறுப்பினர் ஆர்.சாமி 2001-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 முறை இதே தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

மேலூர் தாலுகா

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,14,871

பெண்

1,17,283

மூன்றாம் பாலினத்தவர்

-

மொத்த வாக்காளர்கள்

2,32,154

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு (%)

2011

R. சாமி

அதிமுக

55.74

2006

R. சாமி

அதிமுக

47.32

2001

R. சாமி

அதிமுக

46.32

1996

K.V.V.இராஜமாணிக்கம்

த.மா.கா

62.21

1991

K.V.V.இராஜமாணிக்கம்

இ.தே.கா

72.33

1989

K.V.V.இராஜமாணிக்கம்

இ.தே.கா

36.41

1984

D.V.வீரனம்பலம்

இ.தே.கா

60.11

1980

D.V.வீரனம்பலம்

இ.தே.கா

54.6

1977

A.M.பரமசிவம்

அதிமுக

36.07

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

சாமி.R

அதிமுக

64013

2

ரவிச்சந்திரன்.K.V.V

காங்கிரஸ்

60840

3

ராஜாராம்.C.T

தேமுதிக

5269

4

பன்னீர்செல்வம்.M

பகுஜன் சமாஜ் கட்சி

1292

5

வைரவன்.R

சுயேச்சை

1143

6

சுப்பிரமணியன்.O

அனைத்திந்திய பார்வார்டு பிளாக்

1018

7

புரோஷோதமன்.S

ஜனதா கட்சி

550

8

செங்கைமுனி.R

சுயேச்சை

468

9

பெரியசாமி.C

சுயேச்சை

281

10

செல்வகணேஷ்.K

சுயேச்சை

211

11

கண்ணன்.M

சுயேச்சை

198

135283

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

சாமி.R

அதிமுக

85869

2

ராணி.R

திமுக

61407

3

தர்மலிங்கம்.P.V

பாஜக

1608

4

சரசுகுமார் வைர

பகுஜன் சமாஜ் கட்சி

1080

5

கோபாலகிருஷ்ணன்.M

இராச்டிரிய ஜனதா தளம்

856

6

வெற்றிவேல்.G

சுயேச்சை

836

7

அழகர்.L

சுயேச்சை

769

8

முத்து.P

சுயேச்சை

589

9

பிச்சை.R

சுயேச்சை

385

10

சுப்பிரமணி.V

சுயேச்சை

340

11

கண்ணன்.C

சுயேச்சை

311

154050

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in