

ஊத்தங்கரை சட்டசபை தொகுதியில் இருந்து கடந்த 1977ம் ஆண்டு புதிய தொகுதியாக பர்கூர் சட்டசபை தொகுதி உதயமானது. மாம்பழ சாகுபடியில் முன்னணி வகிக்கும் இந்த தொகுதியின் தலைநகரான பர்கூர் குட்டி சூரத் என்று அழைக்கப்படும் அளவிற்கு ஜவுளி தொழிலில் சிறந்து விளங்குகிறது. இங்குள்ள ஜவுளி மார்க்கெட்டில் ஒரே இடத்தில் 1000க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் உள்ளது. விவசாயமும், தொழிலும் நிறைந்து விளங்குகிறது.
இந்த தொகுதியில் மூன்றில் 2 பங்கு மா விவசாயம், ஒரு பங்கு தென்னை விவசாயம். பணை மரங்களும் அதிகம் உள்ளது. பெரிய ஆறுகள் ஏதும் இத்தொதிக்குள் வராத காரணத்தாலும், ஆந்திரா மாநில வனப்பகுதியில கட்டப்பட்ட தடுப்பணைகளால், இத்தொகுதி எப்பொழுதும் வறண்டு காணப்படும்.வறட்சி காலங்களில் குடிநீருக்கு தட்டுபாடு ஏற்படும்.
இந்த தொகுதியில் தமிழ், தெலுங்கு மொழி பேசுபவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். கடந்த 1991ம் ஆண்டு இந்த தொதியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து தொகுதியில் வளர்ச்சி நோக்கி சென்றது. அதனை தொடர்ந்து 1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் இ.ஜி.சுகவனத்திடம், ஜெயலலிதா தோல்வியை தழுவினார். அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
2011ம் ஆண்டு தொகுதியில் மறுசீரமைப்பின் போது, காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி தொகுதியில் இருந்து புதிய ஊராட்சிகள் இணைக்கப்பட்டது. இதனால் தொகுதி முழுவதும் வன்னியர் சமூகத்தினர் அதிகம் உள்ளனர். சிந்தகம்பள்ளி, தொகரப்பள்ளி, மங்கலபட்டி, கிட்டனூர், நக்கல்பட்டி, ஐகுந்தம்புதூர், ஐகுந்தம் உள்ளிட்ட பகுதிகளில் கொங்குவேளாள கவுண்டர் சமூகத்தினர் பரவலாக உள்ளனர். பர்கூர், பி.ஆர்.ஜி.மாதேப்பள்ளி, பெருகோபனபள்ளி, சத்தலப்பள்ளி, வரட்டனப்பள்ளி ஆகிய இடங்களில் 24 மனை தெலுங்கு செட்டி சமூகத்தினரும், குருவிநாயனபள்ளி, சின்னமட்டாரபள்ளி, காரகுப்பம் ஆகிய பகுதிகளில் பல்ஜிநாயுடு சமூகத்தினரும், போச்சம்பள்ளி பகுதிகளில் வால்மீகி நாயுடு இனத்தவர்கள் அதிக அளவில் உள்ளனர். தொகுதி முழுவதும் ஆதிதிராவிடர் சமூகத்தினர் பரவலாக உள்ளனர்.
போச்சம்பள்ளி வட்டம், புதியதாக உருவாக்கப்பட்ட பர்கூர் வட்டம், ஜெகதேவி பகுதியில் உள்ள கிரானைட் மெருகூட்டும் நிலையங்கள், பர்கூர் சிப்காட், போச்சம்பள்ளி சிப்காட் மற்றும் சிறு, குறு நிறுவனங்களும் தன்னகத்தே கொண்டு உள்ளது. பர்கூர் தொகுதியில் செல்லும் கிருஷ்ணகிரி & திண்டிவனம் சாலை சீர் செய்யப்படும் என தெரிவித்து, அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தமிழகத்தின் மிகப்பெரிய சந்தையான போச்சம்பள்ளி சந்தை மேம்படுத்தப்படவில்லை.இதே போல் பர்கூர், வேலம்பட்டி, சந்தூர் உள்ளிட்ட பல கிராமங்களில் நடக்கும் சந்தைகளும் ஆக்கிரமிப்பு காரணங்களால் சுருங்கி வருவதால் பாதிக்கப்பட்டு வருவதாக சிறுவியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதே போல், 34 ஊராட்சிகள், பேரூராட்சி பகுதிகளில் பெரும்பாலான இடங்களுக்கு ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் வரவில்லை. விவசாயத்திற்கும் போதிய தண்ணீர் இல்லாமல் சிரமத்துடன் இருப்பதாக கூறுகின்றனர் விவசாயிகள்.
கடந்த கால தேர்தல்களை பொறுத்தவரை அதிமுக அதிக முறை வெற்றி பெற்ற தொகுதியாகவே பர்கூர் தொகுதி திகழ்கிறது. கடந்த 1971ம் ஆண்டு முதன்முதலாக தொகுதி உருவாக்கப்பட்ட போதும், 1996 மற்றும் 2009ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் திமுக வெற்றி பெற்றது. அதிமுக வேட்பாளர்கள் 1977, 1980, 1984, 1989, 1991, 2001, 2006, 2011 ஆகிய தேர்தலில் வெற்றி பெற்று உள்ளனர். 2006ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக உறுப்பினர் தம்பித்துரை, 2009ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் திமுக உறுப்பினர் கே.ஆர்.கே நரசிம்மன், 2011ம் ஆண்டு தேர்தலில் அதிமுக உறுப்பினர் கே.இ.கிருஷ்ணமூர்த்தி வெற்றி பெற்றனர்
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | சி.வி.ராஜேந்திரன் | அதிமுக |
2 | இ.சி. கோவிந்தராசன் | திமுக |
3 | எம்.ஆர். ராஜேந்திரன் | தமாகா |
4 | அ.குமார் | பாமக |
5 | ஆர்.மணிவண்ணன் | பாஜக |
6 | பெ. ஈஸ்வரன் | நாம் தமிழர் |
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,13,920 |
பெண் | 1,13,630 |
மூன்றாம் பாலினத்தவர் | 14 |
மொத்த வாக்காளர்கள் | 2,27,564 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1971 - 2009 )
ஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி |
1971 | K.R.கிருஷ்ணன் | திராவிட முன்னேற்றக் கழகம் |
1977 | ஆறுமுகம் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
1980 | துரைசாமி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
1984 | T.M.வெங்கடாச்சலம் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
1989 | K.R.ராஜேந்திரன் | அதிமுக ஜெ |
1991 | ஜெ ஜெயலலிதா | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
1996 | E.G.சுகவனம் | திராவிட முன்னேற்றக் கழகம் |
2001 | M.தம்பிதுரை | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
2006 | M.தம்பிதுரை | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
2009 | K.R.K.நரசிம்மன் | திராவிட முன்னேற்றக் கழகம் |
2006 சட்டமன்ற தேர்தல் | 52. பர்கூர் | ||
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | M. தம்பிதுரை | அ.தி.மு.க | 61299 |
2 | V. வெற்றிசெல்வன் | தி.மு.க | 58091 |
3 | K.V. கோவிந்தராஜ் | தே.மு.தி.க | 11157 |
4 | C. நாராயணசாமி | சுயேட்சை | 5666 |
5 | R. மணி | என்.சி.பி | 2519 |
6 | K. வெங்கடேசன் | சுயேட்சை | 1460 |
7 | R. சரவணன் | சுயேட்சை | 987 |
8 | A. இளவரசன் | பி.எஸ்.பி | 765 |
9 | B. சுப்பிரமணியன் | பி.ஜே.பி | 679 |
10 | K. அசோகன் | சுயேட்சை | 567 |
11 | K. குணசேகரன் | சுயேட்சை | 473 |
143663 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 சட்டமன்ற தேர்தல் | 52. பர்கூர் | ||
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | K.E. கிருஷ்ணமூர்த்தி | அ.தி.மு.க | 88711 |
2 | T.K. ராஜா | பாமக | 59271 |
3 | K. அசோகன் | பி.ஜே.பி | 2314 |
4 | K. வெங்கடேசன் | யு.எம்.கே | 1611 |
5 | C. விஜயகுமார் | சுயேட்சை | 1512 |
6 | K. சக்திவேல் | சுயேட்சை | 1307 |
7 | C. கிருஷ்ணமூர்த்தி | சுயேட்சை | 1279 |
8 | R. கோவிந்தராஜ் | சுயேட்சை | 1106 |
9 | M. சரவணமூர்த்தி | சுயேட்சை | 656 |
10 | D. குப்புசாமி | சுயேட்சை | 596 |
158363 |