

1. கரூரில் சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.
2. வேலாயுதம்பாளையத்தில் வெற்றிலையைச் சேமித்து வைக்கக் குளிர் பதனக் கிடங்கும், வெற்றிலை விற்பனை மண்டியும் அமைக்கப்படும்.
3. சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, அனுமதி பெறாமல் இருக்கும் சாய மற்றும் சலவைப் பட்டரைகளுக்கு உடனடியாக அனுமதி வழங்கப்படும்.
4. கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்.
5. கரூரில் பழங்கள், காய்கறிகள் சேமித்து வைக்கக் குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்படும்.
6. அரவக்குறிச்சி அரசு மருத்துவமனை 24 மணிநேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
7. கடவூர் ஒன்றியம் மயிலம்பட்டியில் இயங்கிவரும் ஆரம்ப சுகாதார நிலையம் அரசுப் பொது மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்படும்.
8. கடவூரில் மகளிர் காவல் நிலையமும் பஞ்சப்பட்டியில் ஒரு காவல் நிலையமும் தொடங்கப்படும்.
9. காவிரியில் குளித்தலை அருகே தடுப்பணை கட்டி அப்பகுதியில் நடைபெறும் மணல் மற்றும் நீர் எடுப்புப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படும்.
10. அமராவதி பாசனத் திட்டம் நிறைவேற்றித் தரப்படும்.
11. பஞ்சப்பட்டி, தாதம்பாளையம் ஏரிகளைத் தூர்வாரி, பஞ்சப்பட்டி ஏரிக்குக் காவிரியில் இருந்தும், தாதம்பாளையம் ஏரிக்கு அமராவதியில் இருந்தும் உபரி நீரைக் கொண்டு செல்ல கால்வாய்கள் அமைக்கப்படும்.
12. உப்பிடமங்கலம், வீராக்கியம் ஏரிகள் தூர்வாரப்படும்.