Published : 05 Apr 2016 03:57 PM
Last Updated : 05 Apr 2016 03:57 PM

33 - திருப்போரூர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளில் திருப்போரூர் தொகுதியும் ஒன்று. சர்வதேச சுற்றுலாத்தலமாக விளங்கும் மாமல்லபுரத்தை உள்ளடக்கியது. இத்தொகுதியில், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி மற்றும் திருப்போரூர், திருக்கழுக்குன்றம் ஆகிய ஊராட்சி ஒன்றியத்தை உள்ளடக்கியது. கோவளம், முட்டுக்காடு, தாழம்பூர், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காயார், பட்டிபுலம், சிறுசேரி, மேலகோட்டையூர், காரணை, திருவிடந்தை, செம்மஞ்சேரி, மாம்பாக்கம், கோவளம், கேளம்பாக்கம், முட்டுக்காடு ஆகிய உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.

அரசு கலைக்கல்லூரி, சிற்பக் கல்லூரி மற்றும் ஏராளமான தனியார் பொறியியல் கல்லூரிகளும் அமைந்துள்ளது. தனியார் பள்ளிகளும் உள்ளது. ஐடி தொழிற்சாலைகளை உள்ளடக்கிய தொழிற்பூங்கா அமைந்துள்ளது. திருப்போரூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். மேலும், இந்துக்கள், முஸ்லிம்கள், பிற மாநிலத்தவர்கள் எனபல்வேறு சமூகத்தினர் வாழ்கிறார்கள். தகவல் தொழில்நுட்பம், வாகன உதிரிபாக பணியாளர்கள், வியாபாரிகள், சுற்றுலாவாசிகள் என அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியது.

தலைநகர் சென்னையை, தென்மாவட்டங்களுடன் இணைக்கும் முக்கிய சாலையான கிழக்கு கடற்கரை சாலையும் அமைந்துள்ளது தொகுதியில் நீண்ட கால பிரச்சினைகளுக்குக் குறைவில்லை.

நகரப்பகுதியை ஒட்டியுள்ள போதிலும் பாதாளாசாக்கடை வசதியில்லாததே முதன்மையான பிரச்னையாக கருதப்படுகிறது. நகரப்பகுதியின் உள்ளே அமைந்துள்ள கிழக்கு கடற்கரை சாலையில் காலையும், மாலையும் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் மீனவமக்கள் அதிகம் வசிக்கும் குப்பங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் கடற்கரையில் வசிக்கும் மீனவ மக்களின் குடிசைகளை பாதுகாக்கும் வகையிலான தூண்டில் வளைவு ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும் என்பதே தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

கடந்த 1967 முதல் 2011 வரை நடைபெற்ற 11 சட்டப்பேரவை தேர்தல்களில் திமுக 6 முறையும், அதிமுக 4 முறை வெற்றிபெற்றுள்ளன. பாமக ஒருமுறை வென்றுள்ளது. கடந்த 2006 சட்டப்பேரவை தேர்தலில் பாமக உறுப்பினர் மூர்த்தி, கடைசியாக 2011-ல் நடந்த தேர்தலில் அதிமுக உறுப்பினர் தண்டரை மனோகரன் வெற்றிபெற்றனர்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

மு.கோதண்டபாணி

அதிமுக

2

வெ.விஸ்வநாதன்

திமுக

3

சி.ஏ.சத்யா

மதிமுக

4

கி.வாசு

பாமக

5

வ.கோ.ரங்கசாமி

பாஜக

6

இ.எல்லாளன் யூசுப்

நாம் தமிழர்தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

செங்கல்பட்டு வட்டம் (பகுதி)

பொன்மார், காரணை, தாழம்பூர், நாவலூர், கன்னத்தூர்ரெட்டிகுப்பம், முட்டுக்காடு, ஏகாட்டூர், கழிப்பட்டூர், சிறுசேரி, போலச்சேரி, சோனலூர், மாம்பாக்கம், கீழகொட்டியூர், மேலகொட்டியூர், புதுப்பாக்கம், படூர், குன்னக்காடு, கோவளம் செம்மஞ்சேரி, கேளம்பாக்கம், சாத்தான்குப்பம், வெளிச்சை, கொளத்தூர், பனங்காட்டுப்பக்கம், காய்ர், தையூர், திருவிடந்தை, வடநெமிலி, நெமிலி, செங்காடு, இல்லலூர், வெம்பேடு, நெல்லிக்குப்பம், அகரம், கொண்டங்கி, மருதேரி, அனுமந்தபுரம், மேலையூர் (ஆர்.எப்), கீழூர், காட்டூர், கிருஷ்ணன்கரணை, தண்டலம், கொட்டமேடு, வெங்கூர், சிறுங்குன்றம், தாசரிகுப்பம், பெருந்தண்டலம், பூஇலுப்பை, கரும்பாக்கம், விரால்பாக்கம், மயிலை, செம்பாக்கம், செட்டிபட்டுராயமன்குப்பம், மடையாத்தூர், வெங்கலேரி, ஆலத்தூர், பட்டிபுலம், கருங்குழிபள்ளம், சிறுதாவூர், அச்சரவாக்கம், பூண்டி, ஏடர்குன்றம், ராயல்பட்டு, முள்ளிப்பாக்கம், அதிகமாநல்லூர், சாலவன்குப்பம், பையனூர், பஞ்சந்திருத்தி, குன்னப்பட்டு, தட்சிணாவர்த்தி, சந்தானம்பட்டு, ஆமையாம்பட்டு, மேல்கனகம்பட்டு, திருநிலை, பெரியவிப்பேடு, சின்னவிப்பேடு, கட்டக்கழனி, அமிர்தபள்ளம், சின்ன இரும்பேடு, ஒரத்தூர், தண்டரை, ஓரகடம், கழனிப்பாக்கம், அருங்குன்றம், மன்னவேடு, தேவதானம், வளவந்தாங்கல், காரணை, பெரியபுத்தேரி மற்றும் திருவடிசூலம் கிராமங்கள்,

திருப்போரூர் (பேரூராட்சி),

திருக்கழுக்குன்றம் வட்டம் (பகுதி)

நெமிலி, நெமிலி (ஆர்.எப்), புல்லேரி, துஞ்சம், கிழவேடு, மேலேரிப்பாக்கம், திருமணி, திருமணி (ஆர்.எப்), ஜானகிபுரம், அழகுசமுத்திரம், கீரப்பாக்கம், மேலப்பட்டு, நெல்வாய், குழிப்பாந்தண்டலம், வடகடும்பாடி, பெருமாளேரி, கடும்பாடி, நல்லான்பெற்றாள், மேல்குப்பம், எச்சூர், புலிக்குன்றம், இரும்புலி, தாழம்பேடு, காங்கேயம்குப்பம், சோகண்டி, அடவிளாகம், ஊசிவாக்கம், புதுப்பாக்கம், மணப்பாக்கம், ஒத்திவாக்கம், பி.வி.களத்தூர், வீரக்குப்பம், எடையூர், கொத்திமங்கலம், புலியூர், ஈகை, அச்சரவாக்கம், பட்டிக்காடு, நல்லூர், மணமை, கொக்கிலமேடு, குன்னத்தூர், ஆமைப்பாக்கம், நரசாங்குப்பம், நத்தம்கரியஞ்சேரி, முல்லகொளத்தூர், ஈச்சங்காரணை, சூரக்குப்பம், அம்மணம்பாக்கம், தத்தளூர்,நரப்பாக்கம், சாலூர் (ஆர்.எப்), சாலூர், பொன்பதிர்க்கூடம், வெண்பாக்கம், உதயம்பாக்கம், புன்னப்பட்டு, ஆனூர், கூர்ப்பட்டு, மாம்பாக்கம், முடையூர், குருமுகி, எலுமிச்சம்பட்டு, நெய்க்குப்பி, கல்பாக்கம், மெய்யூர், சதுரங்கப்பட்டினம் மற்றும் கருமாரப்பாக்கம் கிராமங்கள்,

திருக்கழுக்குன்றம் (பேரூராட்சி) மற்றும் மாமல்லபுரம் (பேரூராட்சி)[1].

1952ம் ஆண்டு திருப்போரூர் தொகுதி உருவானது. ஆனால் அடுத்த 1957, 1962 ஆகிய இரண்டு தேர்தல்களில் இந்தத் தொகுதி இல்லை. அதன்பிறகு 1967ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் திருப்போரூர் தொகுதி உருவாகியது.

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,25,749

பெண்

1,28,533

மூன்றாம் பாலினத்தவர்

18

மொத்த வாக்காளர்கள்

2,54,300

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள்

ஆண்டு

வெற்றிபெற்றவர்

கட்சி

1952

ராமசந்திரன்

காங்கிரஸ்

1967

முனுஆதி

திமுக1971

முனுஆதி

திமுக

1977

சொக்கலிங்கம்

திமுக

1980

சொக்கலிங்கம்

திமுக

1984

தமிழ்மணி

அதிமுக

1989

டாக்டர் திருமூர்த்தி

திமுக

1991

தனபால்

அதிமுக

1996

சொக்கலிங்கம்

திமுக

2001

கனிதா சம்பத்

அதிமுக

2006

மூர்த்தி

பாமக

2006 தேர்தல் ஒரு பார்வை (2006-ல் தனி தொகுதியாக இருந்தது)

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

D.மூர்த்தி

பாமக

73328

2

தனபால்

அதிமுக

63164

3

கண்ணப்பன்

தேமுதிக

19227

4

பொன்வரதராஜன்

பிஜேபி

1979

5

ஸ்ரீநிவாசன்

பி எஸ் பி

1177

6

ராணியப்பன்

சி பி ஐ (L)

955

7

ஜெகதீசன்

சுயேச்சை

926

8

பாலு

எல் ஜே பி

602

9

பற்குணன்

சுயேச்சை

536

10

சந்தியப்பன்

சுயேச்சை

448

11

K .S.தனபாலன்

சுயேச்சை

366

162708

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

K. மனோகரன்

அதிமுக

84169

2

ஆறுமுகம்

பாமக

65881

3

சிவலிங்கம்

பு பா

1598

4

கோபாலகிருஷ்ணன்

பிஜேபி

1579

5

ராஜமுத்து

சுயேச்சை

1367

6

ஆனந்தபாபு

சுயேச்சை

902

7

சரவணன்

பி எஸ் பி

807

8

செல்வம்

சுயேச்சை

603

9

பக்கிரி அம்பேத்கார்

ஜேஎம்எம்-யு

352

10

பிரபாகரன்

சுயேச்சை

334

11

பாலு

எல்ஜேபி

242

12

தேவராஜ்

சுயேச்சை

230

13

குணசேகரன்

சுயேச்சை

214

14

ராஜேஷ்

சுயேச்சை

202

15

ஹரி

சுயேச்சை

159

158639


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x