Published : 05 Apr 2016 15:57 pm

Updated : 23 May 2016 15:50 pm

 

Published : 05 Apr 2016 03:57 PM
Last Updated : 23 May 2016 03:50 PM

32 - செங்கல்பட்டு

32

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளில் ஒன்று செங்கல்பட்டு. மாவட்டத்தில் மிகப்பெரிய இரண்டாவது தொழிற்பூங்காவை (சிப்காட்) உள்ளடக்கியது. இத்தொகுதியில், மறைமலைநகர், செங்கல்பட்டு நகராட்சி, நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சி மற்றும் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தை உள்ளடக்கியது. மண்ணிவாக்கம், நெடுங்குன்றம், கொளப்பாக்கம், ஊனமாஞ்சேரி, காரைணபுதுச்சேரி, கன்னிவாக்கம், வண்டலூர், ஊரப்பாக்கம், ராஜகுளிப்பேட்டை, தென்மேல்பாக்கம், குருவன்மேடு, செட்டி புண்ணியம், பரனூர், காயரம்பேடு ஆகிய உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு கலைக்கல்லூரி மற்றும் ஏராளமான தனியார் பொறியியல் கல்லூரிகளும் அமைந்துள்ளது. தனியார் பள்ளிகளை பெற்று கல்வி தொகுதியாக உள்ளது. புகழ்பெற்ற பன்னாட்டு கார் தொழிற்சாலைகளை உள்ளடக்கிய தொழிற்பூங்கா அமைந்துள்ளது. செங்கல்பட்டு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். மேலும், இந்துக்கள், முஸ்லிம்கள், பிற மாநிலத்தவர்கள் எனபல்வேறு சமூகத்தினர் வாழ்கிறார்கள். தகவல் தொழில்நுட்பம், வாகன உதிரிபாக பணியாளர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியது.


தலைநகர் சென்னையை, தென்மாவட்டங்களுடன் இணைக்கும் முக்கிய ரயில்நிலையமாக செங்கல்பட்டு ரயில் நிலையம் விளங்குவதால், தென்மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் செங்கல்பட்டு நகரப்பகுதிக்கு வராமல் சென்னைக்கு செல்ல முடியாது. மேலும், பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்வர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்.

தொகுதியில் நீண்ட கால பிரச்சினைகளுக்குக் குறைவில்லை. செங்கல்பட்டு நகராட்சியில் பாதாளாசாக்கடை வசதியில்லாததே முதன்மையான பிரச்னையாக கருதப்படுகிறது. நகரப்பகுதியின் உள்ளே அமைந்துள்ள ஜிஎஸ்டி சாலையில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் ரயில் நிலையம், பேருந்து நிலையத்தின் இணைப்பு பகுதியில் சுரங்கப்பாதை, 50 ஆண்டு காலமாக நகரப்பகுதி விரிவாக்கம் செய்யப்படாமல் உள்ளதால், நகரத்தை விரிவுபடுத்தி அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல், சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் ரவுண்டான ஏற்படுத்துவது தொடர்பான கோரிக்கைகளை பொதுமக்கள் முன்வைக்கின்றனர்.

கடந்த 1967 முதல் 2011 வரை நடைபெற்ற 11 சட்டப்பேரவை தேர்தல்களில், அதிமுகவும், திமுகவும் தலா 4 முறை வெற்றிபெற்றுள்ளன. பாமக இரண்டுமுறை வென்றுள்ளது. கடந்த 2006 சட்டப்பேரவை தேர்தலில் பாமக உறுப்பினர் ஆறுமுகம், கடைசியாக 2011-ல் நடந்த தேர்தலில் தேமுதிக உறுப்பினர் அனகை முருகேசன் வெற்றிபெற்றனர்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

ஆர்.கமலகண்ணன்

அதிமுக

2

ம.வரலட்சுமி

திமுக

3

டி.முருகேசன்

தேமுதிக

4

கி.ஆறுமுகம்

பாமக

5

எஸ்.முத்தமிழ்செல்வன்

ஐஜேகே



தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

செங்கல்பட்டு வட்டம் (பகுதி)

மண்ணிவாக்கம், நெடுங்குன்றம், புத்தூர், கொளப்பாக்கம், ஊனமாஞ்சேரி, ரத்தினமங்கலம், வேங்கடமங்களம், நல்லம்பாக்கம், அருங்கால், காரணைபுதுச்சேரி, கூடலூர்(ஆர்.எப்), காயரம்பேடு, பெருமாத்தநல்லூர், கீரப்பாக்கம், முருகமங்கலம், குமிழி, ஒத்திவாக்கம், கன்னிவாக்கம், பாண்டூர், ஆப்பூர் (ஆர்.எப்), சேந்தமங்கலம், ஆப்பூர், கால்வாய், அஸ்தினாபுரம், கருநிலம், கரம்பூர், கொளத்தூர், தாசரிகுன்னத்தூர், குருவன்மேடு, மேல்மணப்பாக்கம், பாலூர், வில்லியம்பாக்கம், சாஸ்திரம்பாக்கம், வெம்பாக்கம், வெங்கடாபுரம், செட்டிபுண்ணியம், கச்சாடிமங்கலம், கொண்டமங்கலம், அஞ்சூர், தென்மேல்பாக்கம், வீராபுரம், பரணூர், பரணூர்(ஆர்.எப்), காந்தளூர், ஆத்தூர், புலிப்பாக்கம், ராஜகுளிப்பேட்டை, அனுமந்தை, குன்னவாக்கம், ஈச்சங்கரணை, பட்டரவாக்கம், சென்னேரி, தேனூர், அம்மணம்பாக்கம் (கூடுவாஞ்சேரி உள்வட்டம்), பொருந்தவாக்கம், வல்லம், அம்மணம்பாக்கம் (செங்கல்பட்டு உள்வட்டம்), பழவேலி மற்றும் ஓழலூர் கிராமங்கள்,

வண்டலூர் (சென்சஸ் டவுன்), ஊரப்பாக்கம் (சென்சஸ் டவுண்), நந்திவரம் - கூடுவாஞ்சேரி (பேரூராட்சி), மறைமலர் நகர் (பேரூராட்சி), சிங்கபெருமாள் கோயில் (சென்சஸ் டவுன்), செங்கல்பட்டு (நகராட்சி), மேலமையூர் (சென்சஸ் டவுன்) மற்றும் ஆலப்பாக்கம் (சென்சஸ் டவுன்)

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,83,247

பெண்

1,87,768

மூன்றாம் பாலினத்தவர்

43

மொத்த வாக்காளர்கள்

3,71,058

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )

ஆண்டு

வெற்றிபெற்றவர்

கட்சி

1952

விநாயகம்

கிஷான் மஸ்தூர் பிரஜா

1957

முத்துசாமி நாயக்கர் மற்றும் அப்பாவு

இந்திய தேசிய காங்கிரஸ்

1962

விஸ்வநாதன்

திராவிட முன்னேற்றக் கழகம்

1967

விஸ்வநாதன்

திராவிட முன்னேற்றக் கழகம்

ஆண்டு

வெற்றிபெற்றவர்

கட்சி

1971

விஸ்வநாதன்

திமுக

1977

ஆனூர் ஜெகதீசன்

அதிமுக

1980

ஆனூர் ஜெகதீசன்

அதிமுக

1984

ஆனூர் ஜெகதீசன்

அதிமுக

1989

தமிழ்மணி

திமுக

1991

வரதராஜன்

அதிமுக

1996

தமிழ்மணி

திமுக

2001

ஆறுமுகம்

பாமக

2006

ஆறுமுகம்

பாமக

2011

டி.முருகேசன்

தேமுதிக

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

K.ஆறுமுகம்

பாமக

61664

2

S.ஆறுமுகம்

அதிமுக

51451

3

மஞ்சுளா

தேமுதிக

8852

4

ஜீவரத்தினம்

சுயேச்சை

1880

5

பிரகாஷ் பாபு

சுயேச்சை

871

6

ஸ்ரீராம்

பிஜேபி

736

7

ஆமூர் பீமா ராவ்

பி எஸ் பி

575

8

வேதபுரி

பி என் கே

315

9

துரைராஜ்

சுயேச்சை

261

10

பரமசிவம்

டி என் ஜே சி

179

11

துளசியம்மாள்

எஸ் பி

175

12

கோவிந்தன்

சுயேச்சை

142

13

அரசன்

சுயேச்சை

129

14

சிட்டி பாபு

சுயேச்சை

123

15

அருணகிரி

சுயேச்சை

122

127475

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

D. முருகேசன்

தேமுதிக

83297

2

V. G.ரங்கசாமி

பாமக

83006

3

பன்னீர்செல்வம்

எஜேஎம்கே

4124

4

ராகவன்

பிஜேபி

4073

5

முருகன்

சுயேச்சை

3597

6

முத்தமிழ்செல்வன்

ஐ ஜே கே

3265

7

துரைராஜ்

பி எஸ் பி

1167

8

சோமசுந்தரம்

பு பா

1040

9

வெங்கடேசன்

சுயேச்சை

902

10

அயனாரப்பன்

சுயேச்சை

641

11

குப்பன்

சுயேச்சை

419

12

மகாதேவன்

சுயேச்சை

321

13

கோபாலகிருஷ்ணன்

சுயேச்சை

283

14

கனகராஜ்

சுயேச்சை

271

15

சிட்டிபாபு

சுயேச்சை

271

16

சந்திரன்

சுயேச்சை

190

186867



சட்டப்பேரவைத் தேர்தல்தமிழக தேர்தல் களம்செங்கல்பட்டு தொகுதி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

தவறவிடாதீர்

தேர்தல் 2016
copy

பொது copy

தேர்தல் 2016

More From this Author

x