Published : 05 Apr 2016 03:57 PM
Last Updated : 05 Apr 2016 03:57 PM

36 - உத்திரமேரூர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளில் ஒன்று உத்திரமேரூர் தொகுதி. மாவட்டத்தின் மூன்றாவது மிகப்பெரிய ஏரியை உள்ளடக்கியது. இத்தொகுதியில், உத்திரமேரூர், வாலாஜாபாத் பேரூராட்சிகள், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கியுள்ளது.

மாகரல், ஐயம்பேட்டை, ஆற்பாக்கம், காவாந்தண்டலம், ஓரிக்கை, வளத்தோட்டம், உள்ளாவூர், பூசிவாக்கம், ஊத்துக்காடு, வாரணவாசி ஆகிய உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து காஞ்சிபுரம் வருவதற்கான பிரதான நுழைவு வாயிலாக உத்திரமேரூர் விளங்குகிறது. இங்கு அரச கலைக்கல்லூரி மற்றும் தனியார் கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகள் அமைந்துள்ளது. தனியார் பள்ளிகளும் உள்ளது. சங்க காலத்திலேயே தேர்தல் நடைமுறையில் இருந்தன என்பதை உணர்த்தும் வகையில், உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே குடவோலை முறையை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் கல்வெட்டுகள் அமைந்த கோயில் உள்ளது. உத்திரமேரூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தலித் மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.

மேலும், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், பிற மாநிலத்தவர்கள் என பல்வேறு சமூகத்தினர் வாழ்கிறார்கள். அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் குறிப்பாக விவசாய பொருட்கள் வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியது.

தொகுதியில் நீண்ட கால பிரச்சினைகளுக்குக் குறைவில்லை. உத்திரமேரூர் தொகுதியில் உள்ள ஏரி மற்றும் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளதே தொகுதியின் முதன்மையான பிரச்னையாக கருதப்படுகிறது. உத்திரமேரூர்-காஞ்சிபுரம் செல்லும் சாலையின் குறுக்கே அமைந்துள்ள செய்யாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைப்பது என்பன பிரதான கோரிக்கையாக பொதுமக்கள் முன்வைக்கிறார்கள்.

கடந்த 1967 முதல் 2011 வரை நடைபெற்ற 11 சட்டப்பேரவை தேர்தல்களில், 6 முறை அதிமுகவும், 5 முறை திமுகவும் வெற்றிபெற்றுள்ளன. கடந்த 2006 சட்டப்பேரவை தேர்தலில் திமுக உறுப்பினர் க. சுந்தர், கடைசியாக

2011-ல் நடந்த தேர்தலில் அதிமுக உறுப்பினர் கணேசன் வெற்றிபெற்றனர்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

பா.கணேசன்

அதிமுக

2

க.சுந்தர்

திமுக

3

மு.இராஜேந்திரன்

தேமுதிக

4

பொன்.கங்காதரன்

பாமக

5

வே.புருஷோத்தமன்

பாஜக

6

இரா.சூசைராஜ்

நாம் தமிழர்தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

உத்திரமேரூர் வட்டம்

காஞ்சிபுரம் வட்டம் (பகுதி)

வள்ளுவப்பாக்கம், பூசிவாக்கம், ஊத்துக்காடு, கட்டவாக்கம், விளாகம், தாழயம்பட்டு, அளவூர், வாரணவாசி, வெம்பாக்கம், சின்னமதுரப்பாக்கம், ஆரம்பாக்கம், தொள்ளாழி, கோசப்பட்டு, தேவரியம்பாக்கம், தோணங்குளம், உள்ளாவூர், பழையசீவரம், நத்தநல்லூர், புளியம்பாக்கம், வெங்குடி, கீழ் ஒட்டிவாக்கம், சீயமங்கலம், திம்மராஜம்பேட்டை, பாவாசாகிப்பேட்டை, தாங்கி, ஏகனம்பேட்டை, நாயக்கன்பேட்டை, வில்லிவலம், கோயம்பாக்கம், ஏரிவாய், திம்மைய்யன்பேட்டை, முத்தியால்பேட்டை, படப்பம், சின்னய்யங்குளம், கோட்டக்காவல், ஓரிக்கை, கோளிவாக்கம், அய்யங்கார்குளம், புஞ்சரசந்தாங்கல், வளத்தோட்டம், கமுகம்பள்ளம், குருவிமலை, விச்சந்தாங்கல், காலூர், ஆசூர், அவளூர், அங்கம்பாக்கம், தம்மனூர், மேல்புத்தூர், கொளத்தூர், பெருமாநல்லூர், வேடல், களக்காட்டூர், தலையில்லாப்பெரும்பாக்கம், ஆர்ப்பாக்கம், மாகரல், காவாந்தண்டலம், நெல்வேலி, கீழ்புத்தூர், கம்பராஜபுரம், இளையணார்வேலூர், சித்தாத்தூர், மஞ்சமேடு, சூரமேனிக்குப்பம், அயிமிச்சேரி, கோவளமேடு, நாவட்டிக்குளம், திருவங்கரணை, குண்ணவாக்கம், அகரம், தென்னேரி, மடவிளாகம், சிறுபாகல், ஒட்டந்தாங்கல், நாயக்கன்குப்பம், சின்னிவாக்கம், வடவேரிப்பட்டு, மருதம் மற்றும் புத்தகரம் கிராமங்கள் தேனம்பாக்கம் (சென்சஸ் டவுன்), ஐயம்பேட்டை (சென்சஸ் டவுன்), மற்றும் வாலாஜாபாத் (பேரூராட்சி).

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,16, 073

பெண்

1,23,328

மூன்றாம் பாலினத்தவர்

11

மொத்த வாக்காளர்கள்

2,39,412

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள்

தேர்தல் ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

1952

ராமசாமி முதலியார்

காங்

1957

ராமசாமி முதலியார்

சுயே

1962

சீனிவாச ரெட்டியார்

காங்

1967

ராசகோபால்

திமுக

1977

பாகூர் சுப்பிரமணியன்

அதிமுக

1980

ஜெகத்ரட்சகன்

அதிமுக

1984

நரசிம்ம பல்லவன்

அதிமுக

1989

சுந்தர்

திமுக

1991

காஞ்சி பன்னீர்செல்வம்

அதிமுக

1996

சுந்தர்

திமுக

2001

சோமசுந்தரம்

அதிமுக

2006

சுந்தர்

திமுக

2011

கணேசன்

அதிமுக

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்2

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

K.சுந்தர்

திமுக

70488

2

சோமசுந்தரம்

அதிமுக

58472

3

முருகேசன்

தேமுதிக

10335

4

வெங்கடேசன்

சுயேச்சை

2070

5

லக்ஷ்மி நரசிம்மன்

சுயேச்சை

1043

6

ராஜவேலு

பிஜேபி

1010

7

ஞானசேகரன்

எஸ் பி

256

8

நாகப்பன்

எல்ஜே பி

217

9

ராமநாதன் நாயக்கர்

வி எ கே

200

10

ராஜேந்திரன்

சுயேச்சை

186

11

சண்முகம்

சுயேச்சை

166

12

கார்த்திகேயன்

சுயேச்சை

153

1445962016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்ற தேர்தல்

36. உத்திரமேரூர்

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

P. கணேசன்

அ.தி.மு.க

86912

2

பொன்குமார்

தி.மு.க

73146

3

M. மோகனவேலு

சுயேட்சை

1917

4

K. குருமூர்த்தி

பி.ஜே.பி

1407

5

M.J. ஆரோக்கியசாமி

சுயேட்சை

1133

6

V. தெய்வசிகாமணி

சுயேட்சை

1063

7

V.D. ராஜன்

பி.எஸ்.பி

803

8

R. முத்துகுமார்

சுயேட்சை

352

9

K. சரவணன்

சுயேட்சை

346

10

K. எத்தியப்பன்

பி.பி

260

11

G. மோகனசுந்தரம்

ஐ.ஜே.கே

214

12

A. கலிங்கம்

சுயேட்சை

121

13

E. தனம்

எ.ஐ.ஜே.எம்.கே

106

14

L. கருணகரன்

சுயேட்சை

92

15

S. இளங்கோவன்

சுயேட்சை

74

167946


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x