Published : 23 Apr 2016 03:26 PM
Last Updated : 23 Apr 2016 03:26 PM

காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கை

1. திருப்பெரும்புதூரில் காய்கறிகள் சேமித்து வைப்பதற்காகக் குளிரூட்டும் வசதியுடன் கூடிய சேமிப்புக் கிடங்கு அமைக்கப்படும்.

2. திருப்பெரும்புதூரில் உள்ள அரசு மருத்துவமனை, 24 மணிநேர அவசர சிகிச்சைப் பிரிவுடன் தரம் உயர்த்தப்படும்.

3. திருப்பெரும்புதூர் - கோடம்பாக்கம் சாலையில் குன்றத்தூர், சிறுகளத்தூர் அருகே மேம்பாலம் அமைக்கப்படும்.

4. பெருங்களத்தூர், பீர்க்கன்கரணை, மாடம்பாக்கம், சிட்லபாக்கம் திருநீர்மலை, குன்றத்தூர், மாங்காடு, கூடுவாஞ்சேரி, நந்திவரம் ஆகிய பேரூராட்சிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும்.

5. மதுராந்தகத்தில் முந்தைய கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிநீர் மேம்பாட்டுத் திட்டம் நிறைவேற்றப்படும். பாதாள சாக்கடைத் திட்டமும் நிறைவேற்றப்படும்.

6. காஞ்சிபுரத்தில் புறவழிச்சாலை அமைக்கப்படும்.

7. தற்போது மூடப்பட்டுள்ள காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கூட்டுறவு நூற்பாலை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

8. ழுளுகூ நெடுஞ்சாலையில் கூடுவாஞ்சேரி சிக்னல் அருகே நெல்லிக்குப்பம் சாலை சந்திப்பு, சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் திருப்பெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவகம் அருகே இந்திரா காந்தி சிலை சந்திப்பு, கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலையில் கோவளம் அருகே கேளம்பாக்கம் சந்திப்பு ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

9. குன்றத்தூர் அருகே அடையாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் மேம்பாலமாக மாற்றி அமைக்கப்படும்.

10. மாமல்லபுரத்தில் 24 மணிநேரமும் செயல்படும் அவசர சிகிச்சைப் பிரிவுடன் கூடிய மருத்துவமனை அமைக்கப்படும்.

11. பெங்களூரு நெடுஞ்சாலை – காஞ்சிபுரம் திருப்பம் சந்திப்புக்குள் ஒரு புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்.

12. பரந்தூர் ஆரம்ப சுகாதார நிலையம், 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக விரிவுபடுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

13. திருப்புட்குழி ஊராட்சி பாலுசெட்டிசத்திரத்தில் மகளிர் மேல்நிலைப்பள்ளி தொடங்கப்படும்.

14. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மேம்படுத்தப்பட்டு, சர்வதேச சுற்றுலாத் தலமாக ஆக்கப்படும். பறவைகள் ஆய்வு மையம் அமைக்கப்படும்.

15. நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் நவீன வசதிகளுடன் தரம் உயர்த்தப்படும்.

16. நெம்மேலியில் மீன்கள் பதப்படுத்தி சேமித்து வைப்பதற்காகக் குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்படும்.

17. செங்கல்பட்டு நகரில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும்.

18. அனகாபுத்தூரில் செம்பரம்பாக்கம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்படும்.

19. அனகாபுத்தூரில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும்.

20. முந்தைய கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட அனகாபுத்தூர் - தரப்பாக்கம் இடையே அடையாற்றில் மேம்பாலம் கட்டும் பணி மீண்டும் தொடங்கப்பட்டு கட்டி முடிக்கப்படும்.

21. அனகாபுத்தூரில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்கப்படும்.

22. கவுல்பஜார் ஊராட்சிக்கு அருகில் அடையாறில் உள்ள தரைப்பாலம் மேம்பாலமாக கட்டப்படும்.

23. மறைமலைநகரில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும்.

24. துரைப்பாக்கம் - பல்லாவரம் ரேடியல் சாலையில், மேடவாக்கம் சந்திப்பில் கோவிலம்பாக்கத்தில் மேம்பாலம் கட்டப்படும்.

25. வேளச்சேரி தாம்பரம் முக்கிய சாலையில், மேடவாக்கம் மவுண்ட் சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

26. முடிச்சூர், பொழிச்சலூர் ஊராட்சிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும்.

27. சென்னை மாநகராட்சிப் பகுதிகளாகத் தற்போது இணைக்கப்பட்டுள்ள திருவொற்றியூர், மாதவரம், அம்பத்தூர், ஆலந்தூர், சோழிங்கநல்லூர், மதுரவாயல் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்குட்பட்ட ஊர்கள், சென்னை மாநகர பாதாளச் சாக்கடைத் திட்டத்திலும், குடிநீர்த் திட்டத்திலும் இணைக்கப்படும்.

28. மாங்காடு பேரூராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும்.

29. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து மாங்காடு பேரூராட்சிக்குக் குடிநீர் வழங்கப்படும்.

30. உத்திரமேரூர் ஒன்றியம் இரண்டாகப் பிரிக்கப்படும்..

31. வண்டலூர் அருகே துணை நகரம் அமைக்கப்படும்.

32. பரனூர் தொழுநோயாளி மறுவாழ்வு மையம் சீரமைக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x