

1. ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படும்.
2. குடகனாற்றின் குறுக்கே லட்சுமணப்பட்டியில் அணைகட்டி வேடசந்தூரில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நீர்ப் பாசன வசதி செய்து தரப்படும்.
3. பழனி மண்டலம் வரதமாநதி நீர்ப் பாசனத் திட்டம் மேம்படுத்தப்படும்.
4. ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குத் தனி குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும்.
5. ஒட்டன்சத்திரம் பழனி இடையே சத்திரப்பட்டி, ஆயக்குடி, தாழையூத்து ஆகிய இடங்களில் இரண்டு இரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும்.
6. ஒட்டன்சத்திரம் பாச்சலூர் வழி கொடைக்கானல் செல்லும் சாலை தரம் உயர்த்தப்படும்.
7. வேடசந்தூரில் நீர் வரத்து வாய்க்கால்கள் அனைத்தும் தூர்வாரப்படும்.
8. வேடசந்தூர், வடமதுரை, குஜிலியம்பாறை ஆகிய பகுதிகள் பயன்பெறும் வகையில் குடகனாற்றில் பெரிய அணை கட்டப்படும்.
9. காவிரிக் கூட்டு குடிநீர் 54 கிராம பஞ்சாயத்துகளுக்கும் 5 பேரூராட்சிகளுக்கும் முழுமையாகக் கிடைக்க வழி செய்யப்படும்.
10. வேடசந்தூர் தொகுதியில் அனைத்து ஊர்களிலும் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும்.
11. பழனி தொகுதியில் பச்சையாறு அணை அமைக்க நடவடிக்கை எடுத்து பழனி, தொப்பம்பட்டி ஒன்றிய பகுதிகள் பயன்பெற வாய்க்கால்கள் அமைக்கப்படும்.
12. பழனி வையாபுரிகுளம், சிறுநாயக்கன்குளம் ஆகிய கண்மாய்கள் தூர்வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டு, பாசன வசதி மேம்படுத்தப்படும்.
13. பழனி - ஆயக்குடியில் பழங்கள் சேமித்து வைக்கும் குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்படும்.
14. பழனியையும் கொடைக்கானலையும் இணைக்க மாற்றுப்பாதைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
15. கொடைக்கானல் மக்களின் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க குண்டாறு குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்படும்.
16. வடமதுரை பகுதியில், புத்தூர் ஊராட்சிக்குட்பட்ட முடிமலையில் பெரிய அணைகட்டி அதனைச் சுற்றியுள்ள பல ஆயிரக்கணக்கான ஏக்கர்
நிலங்களுக்கு நீர்ப் பாசன வசதி செய்து தரப்படும்.
17. வடமதுரை இரயில் நிலையம் தொடர்ந்து செயல்பட மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
18. வடமதுரை புறவழிச்சாலையில் மேம்பாலம் அமைக்கப்படும்.
19. வடமதுரை மற்றும் அய்யலூரில் பாதாள சாக்கடை அமைக்கப்படும்.
20. ஒட்டன்சத்திரம் தொகுதியில் பழனிபாலாறு - பொருந்தலாறு இடது பிரதானக் கால்வாய் சீரமைக்கப்பட்டு சிலாப் லையனிங் செய்து மடைகள் அனைத்தும் செப்பனிடப்பட்டு பாசன வசதி செய்து தரப்படும்.
21. ஒட்டன்சத்திரம் தொகுதி வடகாடு ஊராட்சிப் பகுதியில் உள்ள பரப்பலாறு அணை மற்றும் குளங்கள் தூர்வாரப்பட்டு பாசன வசதி மேம்படுத்தப்படும்.
22. நிலக்கோட்டை வட்டம் எழுவனம்பட்டி பகுதியின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய மஞ்சலாறு அணையிலிருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
23. நிலக்கோட்டை அரசுப் பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டு தரம் உயர்த்தப்படும்.
24. சின்னாளப்பட்டியில் சாயப்பட்டறை கழிவுகளைச் சுத்திகரிக்க, சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். மேலும் ஜவுளிப் பூங்காவும் உருவாக்கப்படும்.
25. பழனியில் வேளாண்மைக் கல்லூரி தொடங்கப்படும்.
26. திண்டுக்கல், ஒட்டன் சத்திரம், ஆயக்குடி, வத்தலகுண்டு ஆகிய இடங்களில் குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கப்படும்.
27. காவிரி குடிநீர்த் திட்டம் ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம் தொகுதிக்குட்பட்ட ஒட்டன் சத்திரம், தொப்பம்பட்டி ஒன்றியங்கள், வேடசந்தூர் தொகுதி ஆகியவற்றிற்கு விரிவாக்கம் செய்யப்படும்.
28. நத்தத்தில் பழங்கள், காய்கறிகள் சேமித்து வைக்கக் குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்படும்.
29. ஒட்டன்சத்திரத்தில் சார்பு நீதிமன்றம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட உரிமையியல், குற்றவியல் நீதிமன்றங்களைச் சேர்த்து ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படும்.