

கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தொகுதி மறு சீரமைப்பின்போது உருவாக்கப்பட்ட தொகுதி இது. முன்பிருந்த மொரப்பூர் தொகுதியை நீக்கிவிட்டு புதிதாக இந்த தொகுதி உருவாக்கப்பட்டது. தருமபுரி வட்டத்தின் சில பகுதிகள், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தின் சில பகுதிகள் ஆகியவை இணைந்தது இந்த தொகுதி. பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர் ஆகிய 2 ஊராட்சி ஒன்றியங்கள் இந்த தொகுதியில் உள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட இந்த தொகுதியில் 2011-ல் நடந்த முதல் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர் பழனியப்பன். இவர் தமிழகத்தின் உயர்கல்வித் துறை அமைச்சராகவும் தேர்வானார்.
இந்த தொகுதியில் கொங்கு வேளாளர், வன்னியர், ஆதி திராவிடர் ஆகிய இன மக்கள் கணிசமாகவும், பழங்குடியினர் உள்ளிட்ட இதர இனத்தவர்களும் வசிக்கின்றனர். இதுதவிர இஸ்லாமியர், கிறித்தவர்களும் உள்ளனர். இந்த தொகுதியில் தான் தருமபுரி மாவட்டத்திலேயே பெரிய அணையான வாணியாறு அணை அமைந்துள்ளது. இது சேர்வராயன் மலையின் ஒரு சரிவை ஒட்டி அமைந்துள்ளது.
பிரச்சினைகள்:
வாணியாறு அணையில் இருந்து பாசன வசதி கேட்டு கால்வாய் நீட்டிப்பு செய்துதருமாறு சில கிராம விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் இருந்து பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள மஞ்சவாடி கணவாய், அரூர் வழியாக சென்னை செல்லும் சாலை அமைந்துள்ளது. மஞ்சவாடி பகுதியில் சவால் மிகுந்த சாலையாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதை தரமான, விபத்தற்ற சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என்பது வாகன துறையை சேர்ந்தவர்களின் எதிர்பார்ப்பு.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | பி.பழனியப்பன் | அதிமுக |
2 | எம்.பிரபு ராஜசேகர் | திமுக |
3 | ஏ.பாஸ்கர் | தேமுதிக |
4 | ஏ.சத்தியமூர்த்தி | பாமக |
5 | எம்.சுந்தரமூர்த்தி | ஐஜேகே |
6 | எம்.மூவேந்தன் | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தர்மபுரி தாலுக்கா (பகுதி)
கே.நடுஅள்ளி, நல்லன்ஹள்ளி, கோணங்கிநாய்க்கன்ஹள்ளி, வெள்ளானபட்டி, ஆண்டிஹள்ளி, கிருஷ்ணாபுரம், புழதிகரை, கொண்டம்பட்டி, குப்பூர், அனேதர்மபுரி, செட்டிகரை, நாயக்கனஹள்ளி, அக்கமனஹள்ளி, மூக்கனூர், வெள்ளோலை, உங்கரானஹள்ளி, நூலஹள்ளி, முக்கல்நாய்க்கனஹள்ளி, வத்தலமலை, திப்பிரெட்டிஹள்ளி, வேப்பிலைமுத்தம்பட்டி, கொண்டகரஹள்ளி, மற்றும் குக்கல்மலை கிராமங்கள்,
பாப்பிரெட்டிப்பட்டி தாலுக்கா (பகுதி)
மணியம்பாடி, சிங்கிரிஹள்ளி, கெரகோடஹள்ளி, சிந்தல்பாடி, லிங்கிநாயக்கனஹள்ளி, போசிநாய்க்கனஹள்ளி, நல்லசூட்லஹள்ளி, கெடகாரஹள்ளி, கடத்தூர், மடதஹள்ளி, புட்டிரெட்டிப்பட்டி, பசுவாபுரம், குருபரஹள்ளி, தின்னஹள்ளி, பாலசமுத்திரம், பெத்தூர், சிக்கம்பட்டி, கோபிசெட்டிபாளையம், பாப்பிசெட்டிப்பட்டி, அண்ணாமலைபட்டி, அல்லாலபட்டி, தென்கரைக்கோட்டை, துரிஞ்சிஹள்ளி, ராமேயனஹள்ளி, பெத்தசமுத்திரம், தாதனூர், பபுனிநாய்க்காஹள்ளி, உனிசேனஹள்ளி, பத்தலமலை, ரேகடஹள்ளி, மேக்கலநாய்க்கனஹள்ளி, பாப்பம்பாடி, புதுப்பட்டி, ஆலாபுரம், மெணசி, பூதிநத்தம், குண்டமைடுவு, கதிரிபுரம், கும்பாரஹள்ளி, பொம்மிடி, வெள்ளாளபட்டி, பி.பள்ளிபட்டி, ஜங்கலஹள்ளி, பைரநத்தம், தேவராஜபாளையம், மொனையானுர், வெங்கடசமுத்திரம், கோழிமேக்கவூர், அதிகாரப்பட்டி, தாதம்பட்டி, கவுண்டம்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி, இருளப்பட்டி, ஏ.பள்ளிப்பட்டி, நாரணாபுரம், கோபாலபுரம், மாங்கடை, போதக்காடு, சேம்பியானூர், அஜ்ஜம்பட்டி மற்றும் கதரணம்பட்டி கிராமங்கள்.கடத்தூர் (பேரூராட்சி), பொ.மல்லாபுரம் (பேரூராட்சி) மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி (பேரூராட்சி).[1]
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,22,933 |
பெண் | 1,20,209 |
மூன்றாம் பாலினத்தவர் | 4 |
மொத்த வாக்காளர்கள் | 2,43,146 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 சட்டமன்ற தேர்தல் | 60. பாப்பிரெட்டிப்பட்டி | ||
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | P. பழனியப்பன் | அ.தி.மு.க | 76582 |
2 | V. முல்லைவேந்தன் | தி.மு.க | 66093 |
3 | M. வேலு | சுயேச்சை | 18710 |
4 | P. சங்கர் | சுயேச்சை | 2130 |
5 | P. மூர்த்தி | சுயேச்சை | 1270 |
6 | P. வைகுண்டன் | பி.எஸ்.பி | 1037 |
7 | S. ஜெயாகுமார் | பி.ஜே.பி | 707 |
8 | C. பொன்மணி | சுயேச்சை | 415 |
9 | A. அம்சவேணி | ஐ.ஜே.கே | 338 |
10 | K. சின்னசாமி | சுயேச்சை | 334 |
11 | V. குமாரன் | சுயேச்சை | 308 |
12 | S. சரவணன் | சுயேச்சை | 286 |
13 | K. ராஜன் | பி.பி. | 281 |
14 | K. அண்ணாதுரை | யு.எம்.கே | 240 |
168731 |