Published : 05 Apr 2016 03:58 PM
Last Updated : 05 Apr 2016 03:58 PM

153 - நெய்வேலி

நெய்வேலி தொகுதி, தெகுதி சீரமைப்பிற்கு பிறகு புதியதாக உருவாக்கப்பட்டு இரண்டாவது முறையாக சட்ட மன்ற தேர்தலை சந்திக்கும் தொகுதி ஆகும். .தமிழகம் மட்டுமில்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி உட்பட தென் இந்தியாவிற்கே மின்சாரம் வழங்கி வரும் மத்திய அரசின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான என்எல்சி நிறுவனம் அமைந்துள்ள இந்த தொகுதி. இந்த நிறுவனத்தில் 14 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்கள், 13 ஆயிரம் ஓப்பந்த தொழிலாளர்கள், 5 ஆயிரம் பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் என மொத்தம் 32 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த தொகுதியில் கடந்த முறை அதிமுக சார்பில் போட்டியிட்ட சிவசுப்பிரமணியன் எம்எல்ஏவாக உள்ளார். இந்த தொகுதியில் பெரும்பான்மை மக்களாக வன்னியர்களும், அடுத்தப்படியாக ஆதிதிராவிடர்களும், மற்ற சிறிய அளவில் யாதவர், உடையார், நாயுடு, பிள்ளைமார், செட்டியார் மற்ற இனத்தவர்களும் வசித்து வருகின்றனர். தொகுதியில் என்எல்சி நிறுவனம் தவிர விவசாயம் முக்கிய தொழிலாகும். பெரும்பாலானவர்கள் முந்திரி விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த தொகுதியில் 2 லட்சத்து261 வாக்குகள் உள்ளனர். இதில் 1லட்சத்து ஆயிரத்து 485 வாக்களர்களும், 98 ஆயிரத்து 768 பெண் வாக்காளர்களும், 8 திருநங்கைகளும் உள்ளனர்.

நெய்வேலி நகரியம், மற்றும் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 38 ஊராட்சிகள் இந்த தொகுதியில் உள்ளது.

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சனை, விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்து முந்திரி ஏற்றுமதி மையம், இலங்கை தமிழர்கள் வசிக்கும் வட்டம் 7 மற்றும் 4 ஆகிய பகுதிகளில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை.நெய்வேலி டவுன் ஷிப் பகுதியில் குடிசை வாசி பகுதிகளான வட்டம் 21, 30 பகுதிகளில் சாலை வசதி, குடி நீர், மருத்துவ வசதி உட்பட அடிப்படை இல்லை ,சென்னை- கும்பகோணம் நெடுஞ்சாலையில் நெய்வேலி இந்திரா நகர் அருகில் கண்ணுதோப்பு பாலம் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த பாலம் மிக குறுகிய அளவில் உள்ளது. இதை பெரிய பாலமாக கட்ட நடவடிக்கை எடுக்க வில்லை என்ற குற்றசாட்டுகள் உள்ளது.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

ஆர்.ராஜசேகர்

அதிமுக

2

சபா.ராஜேந்திரன்

திமுக

3

டி. ஆறுமுகம்

மார்க்சிஸ்ட்

4

கோ.ஜெகன்

பாமக

5

சி.ஜி.எஸ்.சந்திரன்

ஐஜேகே

6.

சி.கலைச்செல்வன்

நாம் தமிழர்

7.

டி. வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமை கட்சி



தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

பண்ரூட்டி வட்டம் (பகுதி) பணிக்கன்குப்பம், மாளிகம்பட்டு, சிறுவத்தூர், எலந்தம்பட்டு, திருவாழூர், விசூர், கருக்கை, செம்மேடு, மேலிருப்பு, கீழிருப்பு, தாழம்பட்டு, காடாம்புலியூர், மேல்மாம்பட்டு, புறங்கனி, கீழ்மாம்பட்டு, அழகப்பசமுத்திரம், சிலம்பிநாதன்பேட்டை, புலியூர் (மேற்கு), கோரணப்பட்டு, மதனகோபாலபுரம், வேகாக்கொல்லை, மருங்கூர், வல்லம், நடுக்குப்பம், பேர்பெரியான்குப்பம், கீழ்காங்கேயன்குப்பம், மேல்காங்கேயன்குப்பம், வீரசிங்கன்குப்பம், காட்டுக்கூடலூர், சொரத்தூர், வெங்கடாம்பேட்டை, வானதிராயபுரம் மற்றும் தென்குத்து கிராமங்கள், நெய்வேலி (டவுன்ஷிப்).

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,01,514

பெண்

99,496

மூன்றாம் பாலினத்தவர்

8

மொத்த வாக்காளர்கள்

2,01,018

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

சிவசுப்பிரமணியன்.M.P.S

அதிமுக

69549

2

வேல்முருகன்.T

பாமக

61431

3

கற்பகம்.M

பாஜக

1406

4

பாண்டியன்.S

சுயேச்சை

1273

5

லில்லி.P

எல்எஸ்பி

1232

6

குமார்.P

இந்திய ஜனநாயக கட்சி

971

7

இளங்கோவன்.S

லோக் ஜனசக்தி கட்சி

576

8

சந்திரா.P

சோசியலிஸ்ட்

478

9

குமுரகுரு.V.K

சுயேச்சை

441

137357

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x