Published : 05 Apr 2016 04:07 PM
Last Updated : 05 Apr 2016 04:07 PM

111 - மேட்டுப்பாளையம்

கோவை மாவட்டதில் நீலகிரி மாவட்டத்தின் நுழைவுவாயிலாக அமைந்துள்ளது இத்தொகுதி. அடர்ந்த காடுகளும், பவானி நதியும் தொகுதிக்கு மேற்கு, வடமேற்கு, தென்மேற்கு எல்லைகளாக உள்ளது.

மேட்டுப்பாளையம் நகராட்சி, சிறுமுகை, காரமடை, வீரபாண்டி, கூடலூர் ஆகிய நான்கு பேரூராட்சிகள், மற்றும் நூற்றுக்கணக்கான கிராமங்களை உள்ளடக்கிய பதினேழு ஊராட்சிகள் கொண்டது. கன்னட மொழியை தாய் மொழியாக கொண்ட ஒக்கலிக்க கவுடர் சமுதாய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.

விவசாயமே இங்குள்ள மக்களின் பிரதான வாழ்வாதார தொழில். வாழை, கரும்பு, தென்னை, பாக்கு, பலவகை மலர்கள், காய்கறிகள், கறிவேப்பிலை பயிரிடப்பட்டு பிற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்டுகின்றன.

இதற்கு அடுத்தபடியாக கைத்தறி நெசவு தொழில் உள்ளது. இங்குள்ள பதினெட்டு அரசு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் சங்கங்கள் மற்றும் தனியார் கைத்தறிகள் என சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கைத்தறி தொழிலையே நம்பியுள்ளன. இங்கு முற்றிலும் மனித உழைப்பால் தயாராகும், கலைநயம்மிக்க பட்டு சேலைகள் சர்வதேச அளவில் பிரபலமானவை. இங்கு ஆண்டுக்கு ரூ. 50 கோடி மதிப்பினாலான கைத்தறி பட்டு ரகங்கள் தயாரிக்கப்படுகிறது.

அரசு சார்பில் நெசவாளர்களுக்கு 280-க்கும் மேற்பட்ட பசுமை வீடுகள் கட்டி தரபட்டுள்ளதோடு மானியத்துடன் குறைந்த வட்டியில் கடன், இலவச கைத்தறி உபகரணங்கள், உள்ளிட்ட சலுகைகளும் வழங்கபடுகிறது. இது தவிர ஆங்காங்கே சிறு சிறு இரும்பு வார்ப்பு தொழிற்சாலைகள் பட்டறைகள் உண்டு. வேறு பெரிய தொழிற்சாலைகள் மற்றும் வேலை வாய்புகள் ஏதுமில்லை.

இங்குள்ள காகித அட்டை தயாரிப்பு மற்றும் துணி தயாரிப்பு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள் மற்றும் நகராட்சியின் ஒட்டு மொத்த கழிவுகளும் நேரிடையாக ஆற்றில் கலக்க விட படுவதால் பவானி நதி கடுமையாக மாசடைந்து வருவது. இதனால் குடிநீர், பாசன ஆதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

விவசாயத்தையும் விவசாயிகளின் உயிரையும் கேள்விக்குறியாக்கும் காட்டு யானைகளின் தொடர் தாக்குதல்கள் உள்ளன. தமிழகத்திலேயே மிக அதிக விபத்துக்கள் ஏற்படும் நெடுஞ்சாலையாக கோவை – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. நான்கு வழி சாலை திட்டம் 5 ஆண்டுகளாக பாதியில் நிற்கிறது.

இது வரை அரசு கல்லூரிகள் தொகுதியில் எதுவும் இல்லாதது. வேலை வாய்ப்புகளை தரும் தொழிற்சாலைகள் இல்லாதது போன்றவை உடனடியாக அரசு கவனத்தில் கொண்டு தீர்க்கவேண்டிய மக்கள் கோரிக்கையாக உள்ளது.

1957 முதல் நடைபெற்ற தேர்தல்களில் ஏழு முறை அதிமுகவும், இரண்டு முறை திமுகவும், நான்குமுறை காங்கிரஸூம் வென்ற தொகுதி இது. 2006, 2011 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் அதிமுக ஓ.கே.சின்னராஜ் வெற்றி பெற்றுள்ளார்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

ஒ.கே.சின்னராஜ்

அதிமுக

2

எஸ்.சுரேந்திரன்

திமுக

3

டி.ஆர்.சண்முகசுந்தரம்

தமாகா

4

கே.மூர்த்தி

பாமக

5.

பி.ஜெகந்நாதன்

பாஜக

6.

ஏ.அப்துல் வகாப்

நாம் தமிழர்தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

மேட்டுப்பாளையம் வட்டம்

கோயம்புத்தூர் வடக்கு வட்டம் (பகுதி)

பிலிச்சி கிராமம், வீரபாண்டி (பேரூராட்சி) மற்றும் கூடலூர் (பேரூராட்சி).

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,37,381

பெண்

1,41,599

மூன்றாம் பாலினத்தவர்

25

மொத்த வாக்காளர்கள்

2,79,005

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1951 - 2011 )ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

வாக்குகள்

விழுக்காடு

1951

கெம்பி கவுண்டர்

சுயேச்சை

30687

58.09

1957

டி. இரகுபதி தேவி

காங்கிரஸ்

20690

49.37

1962

என். சண்முகசுந்தரம்

காங்கிரஸ்

25398

46.9

1967

டி. டி. எஸ். திப்பையா

காங்கிரஸ்

29709

45.42

1971

எம். சி. தூயமணி

திமுக

39013

56.08

1977

எஸ். பழனிசாமி

அதிமுக

26029

32.37

1980

எஸ். பழனிசாமி

அதிமுக

48266

58.96

1984

எம். சின்னராசு

அதிமுக

61951

59.6

1989

வி. கோபாலகிருஷ்ணன்

காங்கிரஸ்

34194

28.21

1991

எல். சுலோச்சனா

அதிமுக

72912

60.82

1996

பி. அருண்குமார்

திமுக

71954

55.6

2001

எ. கே. செல்வராசு

அதிமுக

85578

60.02

2006

ஒ. கே. சின்னராசு

அதிமுக

67445

---

2011

ஒ. கே. சின்னராசு

அதிமுக

93700

---

ஆண்டு

2ம் இடம் பிடித்தவர்

கட்சி

வாக்குகள்

விழுக்காடு

1951

அப்துல் சலாம் ஆசாத்

காங்கிரஸ்

17946

33.97

1957

மாதண்ணன்

சுயேச்சை

19587

46.74

1962

கே. வெள்ளியங்கிரி

திமுக

19145

35.36

1967

தூயமணி

திமுக

26736

40.87

1971

இராமசாமி

சுயேச்சை

30553

43.92

1977

டி. டி. எஸ். திப்பையா

ஜனதா கட்சி

20717

25.76

1980

கே. விஜயன்

காங்கிரஸ்

32311

39.47

1984

எம். மாதையன்

திமுக

41527

39.95

1989

பொள்ளாச்சி ஜெயராமன்

அதிமுக (ஜெ)

27034

22.3

1991

பி. அருண்குமார்

திமுக

31173

26.01

1996

கே. துரைசாமி

அதிமுக

41202

31.84

2001

பி. அருண்குமார்

திமுக

44500

31.21

2006

பி. அருண்குமார்

திமுக

67303

---

2011

பி. அருண்குமார்

திமுக

67925

---

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

சின்னராசு.O.K

அதிமுக

67445

2

அருண்குமார்.B

திமுக

67303

3

சரஸ்வதி.V

தேமுதிக

10877

4

ஜெகநாதன்.P

பிஜேபி

3187

5

பிரேம்நாத்.R

சுயேச்சை

1346

6

பாப்பண்ணன்.T.K

சுயேச்சை

692

7

வீரகுமார்.N

ஐக்கிய ஜனதா தளம்

369

8

சின்னராஜ்.P.S

சுயேச்சை

327

151546

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

சின்னராஜ்.O.K

அதிமுக

93700

2

அருண்குமார்.B

திமுக

67925

3

நந்தகுமார்.K.R

பிஜேபி

5647

4

ஜானகி ராமன்.R

கம்யூனிஸ்ட் (மார்க்சிய )

1433

5

ரவிச்சந்திரன்.B

சுயேச்சை

1382

6

குமார்.P

சுயேச்சை

708

7

காந்தி குமார்.S

யுஎம்கெ (உழைப்பாளி மக்கள் கட்சி)

647

8

ராஜேந்திரன்.S

ஐஜேகே

394

171836

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x