

1. ஜெயங்கொண்டத்தில் முந்திரி ஆராய்ச்சிப் பண்ணை அமைக்கப்படும்.
2. முந்திரிப் பழங்கள் வீணாவதைத் தடுக்க, முந்திரிப் பழச்சாறு தயாரிக்கும் தொழிற்சாலை செந்துறையில் தொடங்கப்படும்.
3. ஜெயங்கொண்டம் அனல்மின் நிலைய நிலக்கரிச் சுரங்கத் திட்டத்தைச் செயல்படுத்த முயற்சி எடுக்கப்படும்.
4. அரியலூரில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் அமைக்கப்படும்.
5. அரியலூரில் உள்ள அரசுப் பொது மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்.
6. அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படும்.
7. ஆண்டிமடம் தனி வருவாய் வட்டமாகத் தரம் உயர்த்தப்படும்.
8. செந்துறை ஒன்றியத்தில் முந்தைய கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கூட்டுக் குடிநீர்த் திட்டம் சீரமைக்கப்பட்டு, மக்களுக்குத் தரமான குடிநீர் கிடைக்க ஆவன செய்யப்படும்.
9. நதியனூர் கூட்டுக்குடிநீர்த் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.
10. அரியலூர் மாவட்டத்தில் அரசு மகளிர் கல்லூரியும் , அரசு மாணவர் விடுதியும் கட்டித்தரப்படும்.
11. அரியலூர் மாவட்டத்தில் ஆணை வாரி நீர்த்தேக்கம் அமைத்துத் தரப்படும்.
12. அரியலூர் மாவட்டத்தில் பொன்னேரி பகுதியில் மீத்தேன் வாயு எடுப்பது தடுத்து நிறுத்தப்படும்.
13. அரியலூர் ரயில்வே கேட்டிற்கு ஒரு மேம்பாலம் அமைத்துத் தரப்படும்.
14. செந்துறை – கோட்டைக்காடு சாலையிலுள்ள வெள்ளாற்றில் மேம்பாலம் அமைத்துத் தரப்படும்.
15. செந்துறையில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் அமைத்துத் தரப்படும்.
16. முந்திரி விவசாயிகளுக்கு மானிய விலையில் வீரிய ரக ஒட்டுக் கன்றுகள் மற்றும் உரங்கள் வழங்கப்படும்.