Published : 05 Apr 2016 03:58 PM
Last Updated : 05 Apr 2016 03:58 PM

155 - கடலூர்

சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் நடைபெற்ற போது அதாவது 1952ம் ஆண்டு கடலூர் நகரம் சட்டப்பேரவை அந்தஸ்தை பெற்றது. கடலூர் நகராட்சி மற்றும் கடலூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 31 ஊராட்சிகளை உள்ளடக்கியது இந்த தொகுதி. 2 லட்சத்து 28 ஆயிரத்து 541 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து494 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 25 பெண் வாங்காளர்களும், 22 திருநங்கைகள் உள்ளனர். கடந்த சட்ட மன்ற தேர்தலின் போது மறுசீரமைப்பில் கரையேற்றிவிட்ட குப்பம், எஸ்.புதூர், வடுகபாளையம், அரிசிபெரியாங்குப்பம், மணக்குப்பம், சொத்திக்குப்பம், சான்றோர்பாளையம், காந்திநகர், குடிகாடு, சேடப்பாளையம், செம்பங்குப்பம் உள்ளிட்ட பகுதிகள் குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு சென்றுவிட்டடது. இந்த தொகுதியில் வன்னியர், ஆதிதிராவிடர் அதிகமாக உள்ளனர். மீனவர்கள், முஸ்ஸிம்கள், ரெட்டியார், செட்டியார், நாயுடு, முதலியார், பிள்ளை, நாடார் உள்ளிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களும் பரவலாக உள்ளனர். கடலூர் நகர வியாபாரமும், கிராமபுறங்களில் விவசாயமும் பிரதான தொழிலாக உள்ளது.

1952ம் ஆண்டு தேர்தலில்(இரட்டை உறுப்பினர்கள்) டிடிபி கட்சி சோந்த எஸ்எஸ். ராமசாமிபடையாட்சி, ரத்தினம் ஆகியோர் பெற்றனர். 1957ம் ஆண்டு காங்கிரஸ் வேட்பாளர் பிஆர் .சீனுவாசன் 21 ஆயிரத்து 100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சுயேட்சை வேட்பாளர் சம்பந்தம் 17 ஆயிரத்து 44 வாக்குகள் பெற்றார். 1962ம் ஆண்டு காங்கிரஸ் வேட்பாளர் பிஆர். சீனுவாசன் 27 ஆயிரத்து 567 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சாம்பசிவம்(திமுக) 21 ஆயிரத்து 147 வாக்குகள் பெற்றார். 1967ம் ஆண்டு திமுக வேட்பாளர் இளம்வழுதி 35 ஆயிரத்து93 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பிஆர்.சீனிவாசன்(காங்) 27 ஆயிரத்து845 வாக்குகள் பெற்றார். 1971ம் ஆண்டு திமுக வேட்பாளர் கோவிந்தராஜ்35 ஆயிரத்து219 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பிஆர். சீனிவாசன் 30 ஆயிரத்து 909 வாக்குகள் பெற்றார். 1977ம் ஆண்டு அதிமுக வேட்பாளர் அப்துல்லதீப் என்கிற ஹீலால் 24 ஆயிரத்து 107 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கோவிந்தராஜ்(திமுக) 22 ஆயிரத்து 250 வாக்குகள் பெற்றார். 1980ம் ஆண்டு திமுக வேட்பாளர் கோவிந்தராஜ் 40 ஆயிரத்து539 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ரகுபதி(அதிமுக) 37 ஆயிரத்து 398 வாக்குகள் பெற்றார். 1984ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி வேட்பாளர் செல்லப்பா 53 ஆயிரத்து 759 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கிருஷ்ணமூர்த்தி(திமுக) 37 ஆயிரத்து 83 வாக்குகள் பெற்றார்.1989ம் ஆண்டு திமுக வேட்பாளர் இளபுகழேந்தி 42 ஆயிரத்து 790 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ராதாகிருஷ்ணன்(காங்) 22 ஆயிரத்து 408 வாக்குகள் பெற்றார். 1991ம் ஆண்டு காங்கிரஸ் வேட்பாளர் பிஆர்எஸ்.வெங்கடேசன் 51 ஆயிரத்து 459 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இளபுகழேந்தி 36 ஆயிரத்து 284 வாக்குகள் பெற்றார். 1996ம் ஆண்டு திமுக வேட்பாளர் இளபுகழேந்தி 74 ஆயிரத்து 480 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ராஜேந்திரன்(காங்) 25 ஆயிரத்து853 வாக்குகள் பெற்றார். 2001ம் ஆண்டு திமுக வேட்பாளர் இளபுகழேந்தி 54 ஆயிரத்து671 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பிஆர்எஸ். வெங்கடேசன்(தமாகா) 54 ஆயிரத்து 637 வாக்குகள் பெற்றார். 2006ம் ஆண்டு திமுக வேட்பாளர் ஐயப்பன் 67 ஆயிரத்து 3வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். குமார்(அதிமுக) 60 ஆயிரத்து 737 வாக்குகள் பெற்றார். 2011ம் ஆண்டு அதிமுக வேட்பாளர் சம்பத் 85 ஆயிரத்து 953 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இளபுகழேந்தி(திமுக) 52 ஆயிரத்து 275 வாக்குகள் பெற்றார்.

பாதாள சாக்கடை திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரவில்லை, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழி சாலை திட்டம் கொண்டு வரப்படவில்லை, பேருந்து நிலையம் மற்றும் துறைமுகத்தை விரிவு படுத்தவில்லை, சிப்காட் தொழிற்சாலையால் ஏற்படும் மாசுபடுதலை கட்டுப்படுத்திட அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நகரில் ஒருங்கிணைந்த வடிகால் வசதி செய்து தராதது, கம்மியம்பேட்டை தடுப்பணை பகுதியில் சர்க்கரை ஆலையின் கழிவுநீர் கலப்பதால் நிலத்தடிநீர் மாசு படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை, இந்த தொகுதியில் குறிப்பிடும் படியாக எந்த சிறப்பு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்ற குறைகள் உள்ளது.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம் (155)

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

எம்.சி.சம்பத்

அதிமுக

2

இள.புகழேந்தி

திமுக

3

ஏ.எஸ். சந்திரசேகரன்

தமாகா

4

பழ.தாமரைக்கண்ணன்

பாமக

5

பி. செல்வம்

ஐஜேகே

6.

எஸ். சீமான்

நாம் தமிழர்



தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

கடலூர் வட்டம் (பகுதி) கடலூர் துறைமுகம், மேலக்குப்பம், நல்லாத்தூர், தூக்கணாம்பாக்கம், தென்னம்பாக்கம். செல்லஞ்சேரி, புதுக்கடை, வடபுரம், கீழ்பாதி, கிளிஞ்சிக்குப்பட்ம், சிங்கிரிக்குடி, மதலப்பட்டு, கீழ் அழிஞ்சிப்பட்டு, நாகப்பனூர், மேல் அழிஞ்சிப்பட்டு, ஓடலப்பட்டு, கீழ்குமாரமங்கலம், காரணப்பட்டு, பள்ளிப்பட்டு, மலைபெருமாள் அகரம், உள்ளேரிப்பட்டு, கரைமேடு, திருப்பணாம்பாக்கம், களையூர், அழகியநத்தம், இரண்டாயிரவிளாகம், வெள்ளப்பாக்கம். மருதாடு, நத்தப்பட்டு, வெளிச்செம்மண்டலம், சின்னகங்கனாங்குப்பம், சுப உப்பலவாடி, குண்டு உப்பலவாடி, உச்சிமேடு, பெரியகங்கனாங்குப்பம், கோண்டூர், தோட்டப்பட்டு, செஞ்சிகுமாரபுரம், வரக்கால்பட்டு மற்றும் காராமணிக்குப்பம் கிராமங்கள். கடலூர் (நகராட்சி) மற்றும் பாதிரிக்குப்பம் (சென்சஸ் டவுன்)

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,12,113

பெண்

1,18,990

மூன்றாம் பாலினத்தவர்

28

மொத்த வாக்காளர்கள்

2,31,131

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )

ஆண்டு

வெற்றிபெற்றவர்

கட்சி

1952

சிவ சிதம்பர ராமசாமி படையாச்சி > மற்றும் ரத்தினம்

தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி

1957

சீனிவாச படையாச்சி

இந்திய தேசிய காங்கிரஸ்

1962

சீனிவாச படையாச்சி

இந்திய தேசிய காங்கிரஸ்

1967

இளம் வழுதி

திமுக

1971

கோவிந்தராஜ்

திமுக

1977

அப்துல் லத்தீப்

அதிமுக

1980

பாபு கோவிந்தராஜன்

திமுக

1984

செல்லப்பா

இந்திய தேசிய காங்கிரஸ்

1989

இள.புகழேந்தி

திமுக

1991

வெங்கடேசன்

இந்திய தேசிய காங்கிரஸ்

1996

இள.புகழேந்தி

திமுக

2001

இள.புகழேந்தி

திமுக

2006

ஐயப்பன்

திமுக

2011

எம..சி.சம்பத்

அதிமுக

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

ஐய்யப்பன்.G

திமுக

67003

2

குமார்.G

அதிமுக

60737

3

ஜெயகுமார்.G.V

தேமுதிக

7866

4

சிவகுமார்.P

பாஜக

1803

5

ஸ்ரீஇராமுலு.S

சுயேச்சை

797

6

ஸ்ரீவத்சன்.J

சுயேச்சை

776

7

அமுதன்.A

பகுஜன் சமாஜ் கட்சி

666

8

ஸ்ரீதர்.G

சுயேச்சை

426

9

ஆறுமுகம்.M

அனைத்திந்திய பார்வார்டு பிளாக்

212

140286

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

சம்பத்.M.C

அதிமுக

85953

2

புகழேந்தி.E

திமுக

52275

3

குணசேகரன்.R

பாஜக

1579

4

ராஜன்.S.V

சுயேச்சை

892

5

சித்ரகலா.T.E

எல்எஸ்பி

774

6

சக்திதாசன்.S

சுயேச்சை

457

141930

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x