Published : 05 Apr 2016 03:56 PM
Last Updated : 05 Apr 2016 03:56 PM

11 - டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்

முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதி என்பதால் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்), தமிழகம் அறிந்த நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது.

தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, புதிய வண்ணாரப்பேட்டை, கொடுங்கையூர், தண்டையார்பேட்டை, ராயபுரம் ஆகிய பகுதிகள் இந்த தொகுதியில் அடங்கியுள்ளன. இவை அனைத்தும் சென்னை மாநகரின் பின்தங்கிய பகுதிகளாகும்.

1977-ல் ஆர்.கே.நகர் தொகுதி உருவானது முதல் 2011 வரை நடைபெற்ற 9 தேர்தல்களில் அதிமுக 5 முறையும், திமுக, காங்கிரஸ் தலா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

1977-ல் அதிமுக வேட்பாளர் ஐசரி வேலன் 28,416 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் 1991-ல் இங்கு 66,710 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட பி.கே. சேகர்பாபு 2001-ல் 74,888, 2006-ல் 84,462 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தற்போது திமுக துணைப் பொதுச்செயலாளராக இருக்கும் எஸ்.பி.சற்குணபாண்டியன் 1989-ல் 54,216, 1996-ல் 75,125 வாக்குகள் பெற்று பெற்றுள்ளார்.

கடந்த 2011 தேர்தலில் வெற்றிவேல் (அதிமுக) 83,777 வாக்குகள் பெற்றி பெற்றார். பி.கே.சேகர்பாபு (திமுக) – 52,522, கே.ஆர்.விநாயகம் (பாஜக) 1,300 வாக்குளையும் பெற்றனர். திமுகவின் கோட்டையாக இருந்த சென்னையில் அதிமுகவுக்கு முதல் வெற்றியைத் தந்த தொகுதி ஆர்.கே.நகர் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

தமிழகத்தின் மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகமான காசிமேடு துறைமுகம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி), சென்னை துறைமுக நிர்வாகத்தில் உள்ள விளையாட்டு மைதானம் ஆகியவை தொகுதியின் முக்கியமான இடங்கள். சென்னையின் மிகப் பழமையான பகுதி என்பதால் அனைத்து சமூகத்தினரும் இங்கு வசிக்கின்றனர். ஆனாலும் தலித்கள், மீனவர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். மக்களில் பெரும் பகுதியினர் தினக் கூலிகள்.

மக்கள் மிக நெருக்கமாக வசிக்கும் பகுதி என்பதால் போக்குவரத்து நெரிசலும், சுகாதார சீர்கேடுகளும் தொகுதியின் முக்கியப் பிரச்சினைகளாக உள்ளன. 300 ஏக்கர் பரப்பளவில் கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கு இந்த தொகுதிக்குள் வருகிறது. இங்கு தினமும் 3 ஆயிரத்து 500 டன் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். இது இத்தொகுதிக்கு மட்டுமல்ல, வட சென்னை மக்களுக்கே மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது.

ஆர்.கே.நகரில் தற்போது 1 லட்சத்து 25 ஆயிரத்து 881 ஆண்கள், 1 லட்சத்து 29 ஆயிரத்து 229 பெண்கள், திருநங்கைகள் 88 பேர் என மொத்தம் 2 லட்சத்து 55 ஆயிரத்து 198 வாக்காளர்கள் உள்ளனர்.

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,24,505

பெண்

1,29,889

மூன்றாம் பாலினத்தவர்

103

மொத்த வாக்காளர்கள்

2,54,497

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் கடந்து வந்த தேர்தல்கள் (1977 – 2011 )

சட்டமன்ற தேர்தல் ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு (%)

இடைத்தேர்தல் 2015

ஜெ ஜெயலலிதா

அதிமுக

88.43

2011

பி. வெற்றிவேல்

அதிமுக

59.3

2006

P.K.சேகர் பாபு

அதிமுக

50.36

2001

P.K.சேகர் பாபு

அதிமுக

58.43

1996

எஸ். பி. சற்குண பாண்டியன்

திமுக

62.12

1991

இ. மதுசூதனன்

அதிமுக

60.3

1989

எஸ். பி. சற்குண பாண்டியன்

திமுக

45.31

1984

S.வேணுகோபால்

இ.தே.காங்கிரஸ்

50.71

1980

V.இராஜசேகர்

இ.தே.காங்கிரஸ்

48.62

1977

ஐசரி வேலன்

அதிமுக

35.57

2006 - தேர்தல் ஒரு பார்வை

வ எண்

வேட்பாளர்

கட்சி

பதிவான வாக்குகள்

1

பி.கே சேகர்பாபு

அதிமுக

84462

2

மனோகர்

காங்கிரஸ்

66399

3

முகமது ஜான்

தேமுதிக

11716

4

பிரேம் ஆனந்த்

பாஜக

1858

5

ராஜேந்திரன்

சுயேச்சை

1030

6

சசிகுமார்

சுயேச்சை

574

7

கங்காதுரை

சுயேச்சை

480

8

மனோகரன்

சுயேச்சை

354

9

மாரிமுத்து

சுயேச்சை

269

10

பி.மாரிமுத்து

சுயேச்சை

168

11

காஜா மொய்தீன்

சுயேச்சை

167

12

துரைவேலு

சுயேச்சை

166

13

சந்தோஷ்குமார்

சுயேச்சை

87

167730

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

P.வெற்றிவேல்

அதிமுக

83777

2

பி.கே சேகர்பாபு

திமுக

52522

3

விநாயகம்

பிஜேபி

1300

4

ஆரோக்கியம்

ஐ ஜே கே

678

5

பிரகாஷ்

சுயேச்சை

529

6

மாரிமுத்து

சுயேச்சை

481

7

டேனியல்

சுயேச்சை

379

8

பெருமாள்

பி எஸ் பி

252

9

மது

எம் எம் கே எ

204

10

சந்திரன்

சுயேச்சை

184

11

வேணுகோபால்

சுயேச்சை

180

12

சசிகுமார்

சுயேச்சை

174

13

மதன்

சுயேச்சை

122

14

வின்சென்ட்

சுயேச்சை

97

15

பிரசன்னகுமார்

சுயேச்சை

90

16

முத்துசரவணன்

சுயேச்சை

89

17

சேகர்

சுயேச்சை

77

18

K.சேகர்

சுயேச்சை

72

19

சதீஷ்

சுயேச்சை

72

20

விஜயராஜ்

சுயேச்சை

66

21

வீரபத்ரன்

சுயேச்சை

64

22

இளங்கோவன்

சுயேச்சை

61

23

ராஜா

சுயேச்சை

58

24

கிரிஜா

சுயேச்சை

54

25

ரவி

சுயேச்சை

52

26

கோகுல்

சுயேச்சை

50

27

ராஜேந்திரன்

சுயேச்சை

49

28

லோகநாதன்

சுயேச்சை

46

29

ரவீந்தர்பாபு

சுயேச்சை

42

30

கோகுலகிருஷ்ணன்

சுயேச்சை

42

31

லல்லி

சுயேச்சை

41

141904

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x