Published : 05 Apr 2016 03:57 PM
Last Updated : 05 Apr 2016 03:57 PM

40 - காட்பாடி

வேலூர் மாவட்டத்தில் உள்ள விஐபி அந்தஸ்து தொகுதியாக காட்பாடி இருக்கிறது. காட்பாடி ரயில் சந்திப்பு நிலையம், தமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலை (டெல்), விஐடி பல்கலைக் கழகம், திருவள்ளுவர் பல்கலைக் கழகம், கிருபானந்த வாரியார் பிறந்த காங்கேயநல்லூரில் அமைந்துள்ள ஞானவளாகம் உள்ளிட்டவை தொகுதியின் அடையாளங்கள்.

தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு காட்பாடி தொகுதியின் பெரும்பகுதி பிரிக்கப்பட்டு கே.வி.குப்பம் (தனி) தொகுதி உருவாக்கப்பட்டது. காட்பாடி நகரத்துடன் ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மருதம்பாக்கம், ஏகாம்பரநல்லூர், சீக்கராஜபுரம், முகுந்தராயபுரம் உள்ளிட்ட பல ஊராட்சிகளை இணைந்து புதிய வாக்காளர்களுடன் கடந்த 2011-ல் தேர்தலை சந்தித்தது.

காட்பாடி தொகுதி மக்களின் தேவையாக இருப்பது காட்பாடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி மக்களுக்காக தாலுகா அளவிலான மருத்துவமனை, காட்பாடி ரயில் நிலையம் அருகே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூடுதலாக ஒரு ரயில்வே மேம்பாலம். சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக் கழகத்துக்கு பேருந்து வசதி. திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த வேண்டும்.

கடந்த 1962-ம் ஆண்டு காட்பாடி தொகுதி ஏற்படுத்தப்பட்டு முதல் எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜகோபால் நாயுடு வெற்றிபெற்றார். இதுவரை 12 சட்டப்பேரவை தேர்தலை சந்தித்துள்ள காட்பாடி தொகுதியில் திமுக 7, அதிமுக 3, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி தலா ஒரு முறை வெற்றிபெற்றுள்ளனர்.

1996 முதல் தொடர்ந்து நான்கு முறை எம்எல்ஏவாக திமுகவின் முன்னணி தலைவர் துரைமுருகன் இருக்கிறார். 2011 தேர்தலில் அதிமுக வேட்பாளர் எஸ்ஆர்கே அப்பு-விடம் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றிபெற்றார். நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளராக துரைமுருகன் போட்டியிட இருப்பதால் தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக துரைமுருகன் வெற்றிபெற அக்கட்சியினர் வீடு வீடாக வாக்கு சேகரிக்கும் பணியில் இப்போதே ஈடுபட்டுள்ளனர்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

எஸ்.ஆர்.கே.அப்பு

அதிமுக

2

துரைமுருகன்

திமுக

3

டி.வி.சிவானந்தம்

தமாகா

4

என்.டி.சண்முகம்

பாமக

5

கே.எல்.சண்முகம்

சமாஜ்வாதி கட்சி

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

காட்பாடி வட்டம் (பகுதி):

தெங்கால், பாலேகுப்பம், கொண்டாரெட்டிபள்ளி, பொன்னை, பரமசாத்து, மாதண்டகுப்பம், கீரைசாத்து, கொல்லபள்ளி, அம்மவாரிபள்ளி, மகிமண்டலம், பெருமாள்குப்பம், எருக்கம்பட்டு, வள்ளிமலை, மேல்பாடி, முத்தரசிகுப்பம், விண்ணம்பள்ளி, கொடுக்கந்தாங்கல், இளையநல்லூர், தேம்பள்ளி, வெப்பாலை, ஸ்ரீபாதநல்லூர், குகையநல்லூர், ஏராந்தாங்கல், சேர்க்காடு, ஒட்டந்தாங்கல், கரிகிரி, கண்டிபேடு, புதூர், செம்பராயநல்லூர், பிரம்மபுரம், சேவூர், அரும்பருத்தி, கார்ணம்பட்டு, அம்முண்டி, வண்டநந்தாங்கல், கரசமங்கலம், உண்ணாமலைசமுத்திரம், தலையாரம்பட்டு, தண்டலம்கிருஷ்ணாபுரம், விருதம்பட்டு, மற்றும் தாராபடவேடு கிராமங்கள்.

தாராபடவேடு, (பேரூராட்சி), கழிஞ்சூர் (பேரூராட்சி), காட்பாடி (பேரூராட்சி), காங்கேயநல்லூர் (சென்சஸ் டவுன்), காந்திநகர் (காட்பாடி விரிவாக்கம்) (பேரூராட்சி) திருவலம் (பேரூராட்சி) மற்றும் சேனூர் (சென்சஸ் டவுன்),

வேலூர் வட்டம் (பகுதி)

செம்பாக்கம் (பேரூராட்சி)

வாலாஜா வட்டம் (பகுதி)

வசூர், பல்லேரி, கொண்டகுப்பம், மருதம்பாக்கம், ஏகாம்பரநல்லூர், சீக்கராஜபுரம், முகுந்தராயபுரம், கத்தாரிகுப்பம் மற்றும் லாலாப்பேட்டை கிராமங்கள்.

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,11,896

பெண்

1,17,571

மூன்றாம் பாலினத்தவர்

15

மொத்த வாக்காளர்கள்

2,29,482

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1962 - 2011 )

1962

பி.ராஜகோபால்நாயுடு

காங்கிரஸ்

1967

ஜி.நடராஜன்

திமுக

ஆண்டு

வெற்றிபெற்றவர்

கட்சி

1971

துரைமுருகன்

திமுக

1977

M.A.ஜெயவேலு

அதிமுக

1980

N.A.பூங்காவனம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

1984

G.ரகுபதி

அதிமுக

1989

துரைமுருகன்

திமுக

1991

K.M.கலைச்செல்வி

அதிமுக

1996

துரைமுருகன்

திமுக

2001

துரைமுருகன்

திமுக

2006

துரைமுருகன்

திமுக

2011

துரைமுருகன்

திமுக

2006 சட்டமன்ற தேர்தல்

40. காட்பாடி

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

துரைமுருகன்

தி.மு.க

86824

2

B. நாராயணன்

அ.தி.மு.க

51677

3

S. ராதாகிருஷ்ணன்

தே.மு.தி.க

8492

4

V.R. சுரேஷ்

பிஜேபி

1543

5

K. ஜெகன்நாதன்

எஸ்.பி.

779

6

V.K.ஸ்டீபன்

சுயேச்சை

550

7

V.முரளி

சுயேச்சை

487

8

M. முத்தையாள்

சுயேச்சை

360

9

A. பேரின்பம்

சுயேச்சை

144

10

P. பாண்டுரங்கன்

சுயேச்சை

96

11

K. பஞ்சவர்ணம்

சுயேச்சை

93

12

K.A. கண்ணன்

சுயேச்சை

85

151130

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்றதேர்தல்

40. காட்பாடி

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

துரைமுருகன்

தி.மு.க

75064

2

அப்பு (எ) ராதாகிருஷ்ணன்

அ.தி.மு.க

72091

3

வரதராஜன்

பி.ஜே.பி

1539

4

ஸ்ரீராம்

சுயேச்சை

1067

5

ஜெயகொடி

சுயேச்சை

646

6

சாமுவேல் வில்சன்

ஐ.ஜே.கே

519

7

பெல் குமார்

சுயேச்சை

136

8

அஸ்கர் அலி

சுயேச்சை

129

9

பழனி

சுயேச்சை

113

10

அப்பாசாமி

சுயேச்சை

97

11

பஞ்சாசரம்

சுயேச்சை

97

151498


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x