Published : 05 Apr 2016 04:06 PM
Last Updated : 05 Apr 2016 04:06 PM

179 - விராலிமலை

“குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்” என்ற சொல்லுக்கு ஏற்ப மலை மீது அமைந்துள்ள முருகன் கோயில் விராலிமலை தொகுதிக்கு சிறப்பு மிக்கதாகும்.

அருணகிரிநாதரால் பாடல் பெற்ற இத்தலத்தில் ஆண்டுக்கு 2 முறை திருவிழா நடைபெறும். விராலிமலையானது தமிழகத்தில் மயில்கள் அதிகமுள்ள இடமென்ற வரலாறும் உள்ளது.

கொடும்பாளூரில் தொல்லியல் துறையின் கண்காணிப்பில் உள்ள பழமைமிக்க மூவர் கோவில் சிற்பக்கலைக்கு புகழ்பெற்றது. அன்னவாசல் அருகே உள்ள சித்தன்னவாசல் ஓவியக்கலைக்கு சான்று பகிர்கிறது. அங்கு சமணர் படுக்கைகள் உள்ளன.குடுமியான்மலையில் உள்ள சிவன்கோயிலில் இந்திவாயில் வேறெங்கும் இல்லாத வகையில் கர்நாடக சங்கீததுக்கான கல்வெட்டு உள்ளது.

விராலிமலை ஒன்றியத்தில் விராலிமலை, மாத்தூர், மண்டையூர் ஆகிய இடங்களில் 1975ம் ஆண்டு முதல் இந்திய அளவிலான பெரிய நிறுவனங்களின் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. குடுமியான்மலையில் உள்ள பண்ணையில் இருந்து தமிழக விவசாயிகளுக்கு தேவையான நுண்ணூட்டம் தயாரிக்கப்படுகிறது. இங்கு புதிதாக வேளாண் கல்லூரியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அன்னவாசல், குடுமியான்மலை, நார்த்தாமலை, பொம்மாடிமலை பகுதியில் உள்ள மலைகளில் இருந்து கிரானைட் வெட்டி எடுக்கப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள குளத்தூர் (தனி) தொகுதி மறுசீரமைக்கப்பட்டு விராலிமலை தொகுதியும் உருவாக்கப்பட்டது.

இரண்டாவது முறையாக சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் விராலிமலை தொகுதியில் முக்குலத்தோர், கவுண்டர், முத்தரையர், ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கின்றனர்.

இத்தொகுதியில் விராலிமலை தாலுதா, இலுப்பூர் தாலுகாவில் கோமங்கலம் தவிர மற்ற கிராமங்களும், குளத்தூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகாவில் சில கிராமங்களும் உள்ளன.

விராலிமலை முருகன் கோவிலையும், சித்தன்னவாசலையும் மத்திய, மாநில அரசுகள் சுற்றுலாத்தலமாக அறிவித்து, சுற்றுலாத்துறை வரைபடத்தில் இடம் பெற செய்ய வேண்டும்.

இங்கு ஒரு அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும். இந்த பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் தினக்கூலி அடிப்படையிலேயே இப்பகுதியை சேர்ந்தவர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்களை நிரந்தர பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். விராலிமலை பகுதியில் மயிலுக்கு சரணாலயம் அமைக்க வேண்டும்.

அன்னவாசல் பகுதியில் அரசு சார்பில் கிரானைட் தொழிற்சாலை அமைக்க வேண்டும். நலிவடைந்த வைர தொழிலுக்கு புத்துயிர் ஊட்ட வேண்டும் உள்ளிட்டவை முக்கிய கோரிக்கைகளாக உள்ளன.

விராலிமலை தொகுதியில் 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சி. விஜயபாஸ்கர் 77,285 வாக்குகளும், எஸ். ரகுபதி 37,976 வாக்குகளும் பெற்றனர். இதில், 39,309 வாக்குகள் வித்தியாசத்தில் சி.விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார். மேலும், மக்கள் நல்வாழ்வுத் துறைஅமைச்சராவும் பொறுப்பேற்றார்.

இத்தொகுதியில் 1,00,114 ஆண் வாக்காளர்கள், 98, 986 பெண் வாக்காளர்கள், இதர் 3 என மொத்தம் 1,99,103 வாக்காளர்கள் உள்ளனர்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

சி. விஜயபாஸ்கர்

அதிமுக

2

மு. பழனியப்பன்

திமுக

3

ஆர். கார்த்திகேயன்

தேமுதிக

4

ஜி. கனகராஜ்

பாமக

5

சி. முத்துக்குமார்

ஐஜேகே

6

கே. ஸ்ரீதர்

நாம் தமிழர்



தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

இலுப்பூர் தாலுகா (கோமங்கலம் கிராமம் தவிர)

குளத்தூர் தாலுகா (பகுதி)

குமாரமங்கலம், மாத்தூர், சிங்கத்தாக்குறிச்சி, செங்கலாக்குடி , மண்டையூர், லெட்சுமணபட்டி, மேட்டுபட்டி, சிவகாமிபுரம், தென்னதிராயன்பட்டி, பாலாண்டாம்பட்டி, களமாவூர், நீர்ப்பழனி, ஆம்பூர்பட்டி , மதயாணைப்பட்டி, சூரியூர், பேராம்பூர் , ஆலங்குடி, வெம்மணி, வடுகபட்டி, மேலப்புதுவயல், குளத்தூர் மற்றும் ஒடுக்கூர் கிராமங்கள்.

மணப்பாறை தாலுக்கா (பகுதி) (திருச்சிராப்பள்ளி மாவட்டம்) ** கவிநாரிப்பட்டி, புத்தாக்குடி, கப்பக்குடி கிராமங்கள். (**கவிநாரிப்பட்டி, புத்தாக்குடி, கப்பக்குடி, ஆகிய கிராமங்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தின் கீழ்வந்தாலும், கள மற்றும் பூகோள ரீதியாக விராலிமலை சட்டமன்ற தொகுதியின் எல்லைப்பரப்பிற்குள் வருகிறது)

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,01,450

பெண்

1,00,995

மூன்றாம் பாலினத்தவர்

3

மொத்த வாக்காளர்கள்

2,02,448

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

விஜயபாஸ்கர்.C

அதிமுக

77285

2

ரெகுபதி.S

திமுக

37976

3

பழனியப்பன்.M

சுயேச்சை

15397

4

சவரிமுத்து.Y

ஐஜேகே

2639

5

அழகு.P

சுயேச்சை

1404

6

ராஜா.P

சுயேச்சை

1403

7

பழனியப்பன் (எ) புரட்சிகவிதாசன்

சுயேச்சை

1144

8

ரமேஷ்.M

சுயேச்சை

774

138022

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x