Published : 23 Apr 2016 03:34 PM
Last Updated : 23 Apr 2016 03:34 PM

தஞ்சாவூர் மாவட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கை

1. பேராவூரணியில் நீதிமன்றம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

2. பட்டுக்கோட்டையில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும்.

3. பட்டுக்கோட்டை அரசுப் பொது மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்.

4. மாயனூர் புதிய கட்டளை உயர்மட்டக் கால்வாய் மற்றும் உய்யக்கொண்டான் விரிவாக்கக் கால்வாய் ஆகியவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

5. பட்டுக்கோட்டையில் தொடங்கப்பட்ட வணிக வளாகம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

6. கல்லணைக் கால்வாய், காவிரி ஆறு, வெண்ணாறு மறு சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்படும்.

7. பட்டுக்கோட்டை வட்டம் வேப்பங்குளத்தில் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் முழுநேர விவசாயிகள் பயிற்சி மையம் தொடங்கப்படும்.

8. பட்டுக்கோட்டை தென்னை வணிக வளாகத்தில் வர்ஜின் ஆயில் ஆலை தொடங்கப்படும்.

9. பட்டுக்கோட்டை தென்னை வணிக வளாகத்தில் தேங்காய் எண்ணெய் அரவை ஆலை அமைக்கப்படும்.

10. பேராவூரணி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் பட்டுக்கோட்டையும் சேர்க்கப்படும்.

11. அதிராம்பட்டினத்தில் உப்பு சார்ந்த காஸ்டிக் சோடா தொழிற்சாலை அமைக்கப்படும்.

12. தஞ்சையில் கோளரங்கத்துடன் கூடிய அறிவியல் மையம் அமைக்கப்படும்.

13. மதுக்கூர் பேரூராட்சியில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும்.

14. பட்டுக்கோட்டை வட்டம் கண்ணனாறு வடிகால் - வடவாறு நீட்டுவாய்க்கால் நீரேற்றுப் பாசனத் திட்டம் நிறைவேற்றப்படும்.

15. சேதுபாவாசத்திரத்தில் இறால் ஏற்றுமதி மையம் அமைக்கப்படும்.

16. மராட்டியர் காலத்தில் கட்டப்பட்ட மனோரா சீரமைக்கப்பட்டு, சுற்றுலா தலமாக அறிவிக்கப்படும்.

17. சேதுபாவாசத்திரத்தில் மீன் பிடி உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும்.

18. தஞ்சாவூரில் இயற்கை வேளாண்மை மையம் அமைக்கப்படும்.

19. சோளகம்பட்டி, அயனாபுரம் ஆகிய இடங்களில் இரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.

20. மல்லிப்பட்டிணத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும்.

21. கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் வசதி செய்து தரப்பட்டு தரம் உயர்த்தப்படும்.

22. கும்பகோணம் அருகில் அண்ணலக்ரகாரம் - மாத்தி இரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கப்படும்.

23. பாபநாசத்தில் புறவழிச்சாலை அமைக்கப்படும்.

24. உத்தமதானபுரத்திலுள்ள தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் அவர்களின் நினைவு இல்லம் புதுப்பிக்கப்பட்டு, காப்பாளர் நியமிக்கப்பட்டு பராமரிக்கப்படும்.

25. தஞ்சை மாவட்டத்தில் உள்ள சுமார் 350க்கும் மேற்பட்ட ஏரிகள் தூர்வாரப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x