Published : 23 Apr 2016 03:49 PM
Last Updated : 23 Apr 2016 03:49 PM

திருப்பூர் மாவட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கை

1. காங்கேயத்தில் சுற்றுச் சாலை அமைக்கப்படும்.

2. காங்கேயத்தில் அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் வசதி செய்து தரம் உயர்த்தப்படும்.

3. பவானி சாகர் அணையிலிருந்து டுக்ஷஞ வாய்க்காலுக்கு கடை மடை வரை தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

4. திருப்பூரில் பெண் மற்றும் ஆண் தொழிலாளர்களுக்குத் தனித்தனியாகத் தங்கும் விடுதிகள் கட்டித்தரப்படும்.

5. திருப்பூர் அரசுப் பொது மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்.

6. காங்கேயம் தொகுதி நாகமநாயக்கன்பட்டி - உத்தமபாளையம் வட்டமலைக்கரை அணைக்குப் பரம்பிகுளம் ஆழியாறு உபரி நீரையும் அமராவதி ஆற்றின் உபரி நீரையும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

7. திருப்பூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டித்தரப்படும்

8. உடுமலைப்பேட்டையில் காய்கறிப் பொருட்களுக்கான குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்படும்.

9. பரம்பிக்குளம் - ஆழியாறு வாய்க்கால்கள் அனைத்தும் தூர்வாரப்படும்.

10. திண்டுக்கல் முதல் கோவை வரை உள்ள இரு வழிச்சாலை நான்கு வழிச்சாலையாகத் தரம் உயர்த்தப்படும்.

11. தாராபுரத்தில் குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்ப்பதற்குத் திருமூர்த்தி அணை கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்படும்.

12. தாராபுரம் அரசுப் பொது மருத்தவமனையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் வசதி செய்து தரம் உயர்த்தப்படும்.

13. திருப்பூர் மாநகரத்தில் மகளிர் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

14. பல்லடத்தில் கறிக்கோழி ஆராய்ச்சி மையம் தொடங்கப்படும்.

15. திருப்பூரில் தென் மாவட்டம் செல்லும் பேருந்துகளுக்கு வசதியாக ஒரு புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்.

16. திருப்பூரில் ஒருங்கிணைந்த உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்.

17. திருப்பூரில் நுளுஐ மருத்துவமனை கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

18. திருப்பூரில் சுற்றுச் சாலை மற்றும் பறக்கும் உயர்மட்ட சாலை அமைக்கப்படும்.

19. திருப்பூரில் பின்னலாடை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.

20. நொய்யல் - உப்பாறு திட்டம் நிறைவேற்றப்படும்.

21. வெள்ளக்கோவில் மற்றும் பல்லடம் சுற்றுச் சாலை அமைக்கப்படும்.

22. அமராவதி ஆற்றில் தடுப்பணைகள் கட்டப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x