Published : 23 Apr 2016 03:47 PM
Last Updated : 23 Apr 2016 03:47 PM

திருநெல்வேலி மாவட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கை



1. நீர் ஆதாரங்களில் உள்ள நீரைத் தனியார் குளிர்பான நிறுவனங்கள் பயன்படுத்துவது மாற்றப்பட்டு, விவசாயிகளுக்கு மட்டுமே பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

2. திசையன்விளை பகுதிக்குத் தாமிரபரணி தண்ணீர் கொண்டுவரப்படும்.

3. திருநெல்வேலி மாவட்டத்தில் சேர்வலாறு – ஜம்புநதி நீர்த்தேக்கத் திட்டம் நிறைவேற்றப்படும்.

4. இராமாநதி மேல்மட்டக்கால்வாய் மற்றும் இரட்டைக்குளம் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்படும்.

5. மணிமுத்தாறு – தெற்கு மெயின் ரீச் கால்வாய் - திருக்குறுங்குடி நம்பியாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

6. ஆலங்குளத்தில் தாலுகா நீதிமன்றம் அமைக்கப்படும்.

7. குமரி மாவட்டம் பழையாற்றிலிருந்து, கடலில் வீணாகக் கலக்கும் தண்ணீரைச் சுசீந்திரம் அருகே மின் நீரேற்றும் நிலையம் அமைத்துக்குழாய் மூலம் ராதாபுரம் கால்வாய்க்குக் கொண்டுவரும் திட்டம் நிறைவேற்றப்படும்.

8. பாபநாசத்தில் புதிய குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்படும்.

9. குலவணிகபுரத்தில் இரயில்வே மேம்பாலம் கட்ட முயற்சி மேற்கொள்ளப்படும்.

10. கன்னடியன் கால்வாய் அணையில் கோதையாறு, காருகுறிச்சி, சேரன்மாதேவி, பத்தமடை ஆகிய நான்கு கதவணைகளும் சரிசெய்யப்பட்டுப் பராமரிக்கப்படும்.

11. அம்பாசமுத்திரம் - பாபநாசம் ஆகிய இரு கால்வாய்களும் கான்கிரீட் லையனிங் செய்து சீர்செய்யப்படும்.

12. அம்பாசமுத்திரம் புறவழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படும்.

13. கடையநல்லூர் வட்டம் சொக்கம்பட்டி கிராமம் புன்னையாபுரம் கால்வாயில் பாலம் அமைக்கப்படும்.

14. இராமாநதி, கடனாநதி நேரடி பாசனக் கால்வாய்கள் அனைத்தும் லையனிங் செய்தும், தூர்வாரியும் பராமரிக்கப்படும்.

15. கடையநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

16. வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தீப்பெட்டிகளுக்கு தற்போது மத்திய அரசு தரும் 7 சதவிகித ஊக்கத்தொகை 15 சதவிகிதமாக உயர்த்தித் தர முயற்சி செய்யப்படும்.

17. கூடங்குளம் அணுமின் நிலையம், மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றில், படித்த உள்ளுர் இளைஞர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

18. இராதாபுரம் - பணகுடி புறவழிச்சாலையில் இரண்டு மேம்பாலங்கள் கட்டப்படும்.

19. தென்காசி மற்றும் அம்பாசமுத்திரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள் அமைக்கப்படும்.

20. அம்பாசமுத்திரத்தில் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படும்.

21. திருநெல்வேலி – செங்கோட்டை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி துரிதப்படுத்தப்படும்.

22. சிவகிரி - செண்பகவல்லி அணைக்கட்டுத் திட்டம் நிறைவேற்றப்படும்.

23. குண்டாறு அணை உயர்த்தப்பட்டு அதிக அளவில் நீரைத் தேக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

24. தென்காசி மற்றும் சங்கரன்கோவிலில் உள்ள அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும்.

25. தென்காசி பகுதியில் பீடித் தொழிலாளர்கள் உரிய மருத்துவ வசதிகள் பெறுவதற்கு இ.எஸ்.ஐ மருத்துவமனை அமைத்துத் தரப்படும்.

26. மணிமுத்தாறு அணையில் இருந்து செல்லும் அனைத்துக் கால்வாய்களும் தூர்வாரப்படும்.

27. திருநெல்வேலி – கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் இரயில்வே மேம்பாலம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

28. மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் மாத ஊதியம் நிர்ணயம் பற்றிப் பரிசீலிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x