Published : 23 Apr 2016 04:13 PM
Last Updated : 23 Apr 2016 04:13 PM

விழுப்புரம் மாவட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கை



1. திருக்கோயிலூர் – விழுப்புரம் சாலையில் அணுகுச் சாலை அமைத்துத் தரப்படும்.

2. கள்ளக்குறிச்சி – சங்கராபுரம் புறவழிச்சாலை அமைக்கப்படும்.

3. திருநாவலூர் ஒன்றியம் ஆத்தூர் பகுதியில் உள்ள புத்த நந்தல் அணையைப் புதுப்பித்துப் பாசன வசதி மேம்படுத்தப்படும்.

4. தென் பெண்ணையாறு, கெடிலம் நதி ஆகிய இரண்டையும் இணைத்து அப்பகுதியில் பாசன வசதியைப் பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

5. வராக நதிக் கால்வாயைச் செஞ்சிப் பகுதியில் ஓடும் சங்கராபரணி தொண்டையாற்றில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

6. பனமலை ஊராட்சி இசா ஏரிக்கு வரும் நீர் வரத்தான நந்தன் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும்.

7. கள்ளக்குறிச்சி அரசுப் பொது மருத்துவமனைக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் வசதி செய்து தரப்படும்.

8. கல்வராயன் மலை சுற்றுலா தலமாக அறிவிக்கப்படும்.

9. கானை ஊராட்சிப் பகுதியில் குடிநீர் வழங்குவதற்காகத் தென்பெண்ணை ஆற்றிலிருந்து கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும்.

10. விழுப்புரம் நகரில் பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

11. விழுப்புரம் திருவண்ணாமலை சாலையில் விழுப்புரம் சென்னை புறவழிச்சாலையின் குறுக்கே அயினம்பாளைம் அருகே மேம்பாலம் அமைக்கப்படும்.

12. வாக்கூர் வி.மாத்தூர் வாதானூர் மூங்கில்பட்டு ஏரிகளுக்கு நீரைக் கொண்டு வரும் வாதானூரன் தலைமைக்கால்வாய் செப்பனிடப்பட்டு சிமெண்ட் வாய்க்காலாக அமைக்கப்படும்.

13. மரக்காணத்தில் மீன்பிடித்துறைமுகம் அமைக்கப்படும்.

14. விழுப்புரம் மாவட்டம் கூட்டுரோட்டிற்கு வடக்கே என்.எச். 45 ரோட்டை கடக்கும் மலட்டாற்றில் மேற்குப் பக்கம் தற்காலிகமாக மணலால் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவரை அகற்றிவிட்டுப் புதிதாகக் கான்கீரிட் சுவர்கள் அமைக்கப்படும்.

15. தென்பெண்ணையாற்றில் அமைந்துள்ள திருக்கோவிலூர் அணைக்கட்டிலிருந்து கூரானுர் கிராமம் வரை மலட்டாற்றின் குறுக்கே 5 இடங்களில் போடப்பட்டுள்ள பைப் பாலங்களை அகற்றி விட்டுப் புதிதாகக் கான்கீரிட் பாலங்கள் அமைக்கப்படும்.

16. முந்தைய கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு தற்போதைய அதிமுக அரசால் முடக்கப்பட்டுள்ள (சிப்காட்) தொழிற்பேட்டை மீண்டும் திண்டிவனம் நகரில் தொடங்கப்படும்.

17. ராகவன் வாய்க்கால் தூர்வாரப்படும்.

18. உளுந்தூர் பேட்டை வட்டத்திலுள்ள செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை நவீனப்படுத்தபட்டு இந்த ஆலை தொடர்பான விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும்.

19. திண்டிவனத்தில் உள்ள அரசுப் பேருந்து நிலையம் மற்றும் அரசுப் பொது மருத்துவமனை தரம் உயர்த்தித் தரப்படும்.

20. மட்டப்பாறையில் உள்ள ஆற்றில் தடுப்பணை கட்டிப் பாப்பக்கால் ஒடையில் இணைத்து பரிகம் ஏரி, ஆலத்தூர் ஏரி மூலம் பாசன வசதிகள் மேம்படுத்தப்படும்.

21. வீடுர் அணையை ஆழப்படுத்தி நீர் கொள்ளளவு அதிகப்படுத்தப்படும்.

22. தகடி முதல் திருக்கோவிலூர் வரை செல்லும் சாலையில் உள்ள முடியனூர் ஓடையில் முன்புள்ள தரைப்பாலம் மாற்றப்பட்டு, உயர்மட்ட பாலம் அமைத்துத் தரப்படும்.

23. விழுப்புரம் மாவட்டம் நீர் ஆதாரத்தைப் பெருக்க தென்பெண்ணை – மலட்டாற்றை இணைக்கவும் ஆற்றின் தடுப்பணைகள் அமைக்கவும், வாய்க்கால்களைச் சீர் செய்யவும் முயற்சி செய்யப்படும்.

24. சங்கராபுரம் தாலுகாவில் கொடியனூரில் உள்ள நீர் விழ்ச்சியின் தண்ணீர் வீணாகாமல் தடுக்க புதிய அணை கட்டப்பட்டு நீர்ப் பாசன வசதி மேம்படுத்தப்படும்.

25. முந்தைய தி.மு.க ஆட்சியில் கள்ளக்குறிச்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு அ.தி.மு.க ஆட்சியில் பணி நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டி முடிக்கப்படும்.

26. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த "செஞ்சிக் கோட்டை" சுற்றுலா தலமாக அறிவிக்கப்படும்.

27. வராகநதி அணை செல்லும் வழியில் செவலபுரை அருகில் தரைப்பாலத்தையும், செஞ்சி மேல்களவாய் சாலையில் உள்ள தரைப்பாலத்தையும் மேம்பாலமாக்கி, சுற்றியுள்ள 50 கிராமங்கள் பயனடைய வழிவகை செய்யப்படும்.

28. கூட்டேரிப்பட்டு புறவழிச்சாலையில் மேம்பாலம் அமைக்கப்படும்.

29. விழுப்புரம் நகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள கிராமப் பகுதிகளுக்கும் சிமெண்ட் சாலை வசதி செய்து தரப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x