Published : 23 Apr 2016 03:54 PM
Last Updated : 23 Apr 2016 03:54 PM

தேனி மாவட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கை

1. வைகை அணை தூர்வாரப்படும்.

2. பெரியகுளம் கும்பக்கரை அருவிக்கு மேல் பாம்பாற்றின் குறுக்கே வவ்வால் துறை அணை கட்டப்படும்.

3. தேனியில் வேளாண் பொருள் குளிரூட்டு நிலையங்கள் அமைக்கப்படும்.

4. ஆண்டிபட்டி – தெப்பம்பட்டி – திப்பரேவு அணைத் திட்டம் செயல்படுத்தப்படும்.

5. ஆண்டிப்பட்டியில் பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் வைகை உயர் தொழில்நுட்ப விசைத்தறிப் பூங்கா மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

6. தேவாரம் - சாக்குலூத்துமெட்டு; கோம்பை – ராமகல்மெட்டு; குரங்கனி – டாப்ஸ்டேஷ்ன்; கடமலை – மயிலை - முத்தாளம்பாறை - மல்லப்புரம் -கல்லுப்பட்டி சாலை; கடமலை –மயிலை - காமராஜபுரம் - கிழவன்கோவில் சாலை; திண்டுக்கல் - குமுளி நான்கு வழிச்சாலை; தேனி - விருதுநகர் இணைப்புச் சாலை ஆகிய சாலைகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

7. கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள பல கிராமங்களில் நிலத்தடி நீராதாரம் வற்றிவிட்டதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையை மீட்டு

விவசாயத்தை மேம்படுத்தவும், முல்லைப் பெரியாறு ஆற்றுப் பாசன பயன்பட்டை அதிகப்படுத்தவும், தொட்டமாந்துறையிலிருந்தும் சின்னமனூர்

ஒன்றியத்திலுள்ள பரமத்தேவன் பட்டியிலிருந்து ஓடைப்பட்டி வரை புதிதாகக் கால்வாய் அமைத்து, அப்பகுதியில் நீர்ப் பாசன வசதி மேம்படுத்தவும்

நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

8. கம்பம் அரசுப் பொது மருத்துவமனையில் இரத்த வங்கி அவசர சிகிச்சை மருத்துவப் பிரிவு, காசநோய்ப் பிரிவு ஆகிய பிரிவுகள் தொடங்கப்படும்.

9. கம்பத்தில் நெல் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.

10. முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழிலகப் படையை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

11. முல்லைப் பெரியாறு அணையிலுள்ள பேபி அணையை வலுப்படுத்திடவும், அப்பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை நீக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

12. போடி நகரைச் சுற்றிப் புறவழிச்சாலை அமைக்கப்படும்.

13. லோயர் கேம்ப் வரை வெட்டப்பட்டுள்ள 18 ஆம் கால்வாய்த் திட்டத்தை, போடி கொட்டக்குடி ஆற்றுடன் இணைத்துத் தரிசு நிலங்களை

விளைநிலங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

14. அய்யம்பாளையம் பகுதியில் தென்னை விவசாயிகள் நலன்காக்க கொப்பரைத் தேங்காய் மார்க்கெட் அமைத்துத் தரப்படும்.

15. முந்தைய கழக ஆட்சியில் கோம்பை, சிறிய கோம்பையை இணைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. அ.தி.மு.க ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x