Published : 17 Apr 2014 11:58 AM
Last Updated : 17 Apr 2014 11:58 AM

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் திமுகவை சேர்க்க மாட்டோம்: திருவள்ளுரில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு

திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விக்டரி ஜெயக் குமாரை ஆதரித்து, அக்கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் புதன்கிழமை ஆவடியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது:

நரேந்திர மோடி ஒரு தொகுதி யில் நின்றால் ஜெயிக்க முடி யாது என்றுதான் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அக்கட்சியின் தமிழகத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ராம தாஸ், விஜயகாந்த் ஆகியோர் கண்டிப்பாக தோற்கடிக்கப்படு வார்கள். அதிமுகவும் சரி, திமுக வும் சரி எப்போது வேண்டு மானாலும் பாஜகவுக்கு ஜால்ரா தட்டுவார்கள். கருணாநிதி கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் நரேந்திர மோடி வல்லவர். திறமை யானவர் என்று கூறினார். தற் போது, தேர்தலில் வெற்றி பெற்று மதச்சார்பற்ற ஆட்சி அமைத்தால் காங்கிரஸை ஆதரிப்போம் என்கிறார். 15 நாட்களில் அவருக்கு ஏன் இந்த மனமாற்றம்?

காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் செல்லும் இடமெல்லாம் சேரும் கூட்டத்தைப் பார்த்து, கருணாநிதி இப்போது மதச்சார்பற்ற ஆட்சியை காங்கிரஸ் அமைத்தால் ஆதரிப் போம் என்கிறார். காங்கிரஸ் எப்போது மதச்சார்புள்ள ஆட் சியை அமைத்தது?

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தா லும், திமுக அதனுடன் ஒட்டிக் கொண்டு அமைச்சர் பதவி களை வாங்கி பணத்தைக் கொள்ளை யடிப்பதுதானே எண்ணம். கண்டிப்பாக, இந்த முறை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களை சேர்க்கமாட்டோம். உங்களால் நாங் கள் பட்டது போதும். உங்களால் கிடைத்த கெட்ட பெயரும் போதும்.

காங்கிரஸ் கட்சியை நாட்டை விட்டே தூக்கி எறிய வேண்டும் என ஜெயலலிதா கூறுகிறார். கூடங்குளத்தில் மின்சார உற்ப த்தியை ஆரம்பத்திலேயே துவங்கி இருந்தால் இரண்டாயிம் மெகா வாட் மின்சாரம் கிடைத் திருக்கும். ஆனால், அதை எதிர்த்து போராடி யவர்களுக்கு ஆதரவு அளித்தவர் ஜெயலலிதா.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்ததற்கு மத்திய அரசுதான் காரணம் என, ஜெயலலிதா கூறுகி றார். சர்வதேச சந்தை நிலவரத் துக்கு ஏற்ப அதன் விலை நிர்ண யிக்கப்படுகிறது. அதேசமயம் இன்றைக்கு பெட்ரோல் விலை 80 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன. அதற்கு மத்திய அரசை அவர் பாராட்டுவாரா? கம்யூனிஸ்ட் கட்சியை கடைசிவரை நம்ப வைத்து இறுதியில் கழுத்தை அறுத்தார். அது எவ்வளவு பெரிய அரசியல் துரோகம். இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x