

தமிழகத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்படும் 398 வாக்குச்சாவடிகளில் பெண்களுக்கு தனி வரிசை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயல கத்தில் நிருபர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
தமிழகத்தில் 60 ஆயிரத்து 418 வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு நடத்த முடிவு செய்யப்பட் டிருந்தது. ஆனால், புதிய வாக்கா ளர் பட்டியல் தயாரிக்கப்பட்ட பிறகு, பல வாக்குச்சாவடிகளில் நிர்ணயிக்கப்பட்ட 1500 என்ற எண்ணிக்கையைக் காட்டிலும் வாக்காளர்கள் சற்று கூடுதலாக இருப்பது தெரியவந்துள்ளது. அதற்கேற்ப வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 60 ஆயிரத்து 816 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிதாக அமைக்கப்படும் 398 வாக்குச்சாவடிகளில் மட்டும் பெண்களுக்கு தனி வரிசை ஏற்ப டுத்தப்படும். அதாவது, பெரிய வாக்குச்சாவடிகளை இரண்டாகப் பிரித்து, அருகிலேயே பெண்க ளுக்கு தனிவரிசை அமைக்கப் படும். வேட்பாளர்கள் தங்கள் செல வுக் கணக்கை தேர்தலுக்கு முன்பு 3 முறை தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் முடிந்தபிறகு, ஒரு மாதத் துக்குள் முழுமையான செலவுக் கணக்கை தாக்கல் செய்ய வேண் டும். அதை செலவுக் கணக்கு பார்வையாளர் சரிபார்ப்பார்.
தேர்தல் விதிமீறல் வழக்குக ளில் கைதாகி நீதிமன்றத்தால் இரண்டாண்டு தண்டனை விதிக் கப் பெற்றவர்கள், தேர்தலில் வாக்களிக்க முடியாது. சென்னை ராயப்பேட்டையில் அதிமுகவி னர் பணம் விநியோகிக்கப்பட்ட தாக வந்த புகாரைத் தொடர்ந்து, அந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த கே.ராமன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ் வாறு பிரவீண்குமார் தெரிவித்தார்.