ஆ.ராசா ஒரு லட்சம் வாக்குகளில் படுதோல்வி; நோட்டாவுக்கு 3-ம் இடம்

ஆ.ராசா ஒரு லட்சம் வாக்குகளில் படுதோல்வி; நோட்டாவுக்கு 3-ம் இடம்
Updated on
1 min read

நீலகிரி (தனி) மக்களவைத் தொகுதியில், திமுக வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தார்.

இந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் 4,63,270 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தோல்வியைத் தழுவிய ஆ.ராசா 3,57,274 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார்.

அதேவேளையில், யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற நோட்டா பட்டனுக்கு 42,199 வாக்குகள் கிடைத்துள்ளது.

நோட்டாவுக்கு கிடைத்துள்ள வாக்குகளும், ஆ.ராசா தோல்வியுற்ற வாக்குகளின் வித்தியாசமும் நீலகிரி தொகுதியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in