

புதுச்சேரியில் முதல் 3 லட்சம் வாக்கு எண்ணிக்கை வரை முன்னிலை பெற்றிருந்த நாராயணசாமி, அதன்பின்னர் பின்தங்க தொடங்கினார்.
மாலை 3.05 நிலவரப்படி 6 லட்சத்து 69 ஆயிரத்து 673 வாக்குகள் எண்ணப்பட்டிருந்தன. அதில் ராதாகிருஷ்ணன் (என்.ஆர்.காங்கிரஸ்) 2 லட்சத்து 20 ஆயிரத்து 465 வாக்குகள் பெற்றிருந்தார்.
காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி 1 லட்சத்து 85 ஆயிரத்து 903 வாக்குகள் எடுத்திருந்தார். இருவருக்கும் இடையில் 34562 வாக்குகள் வித்தியாசம் இருந்தது.
மாலை 3 மணிக்கு தபால் வாக்குகள் முடிவுகளை தேர்தல் துறை புதுச்சேரியில் வெளியிட்டது.
பதிவான 303 வாக்குகளில் 99 வாக்குகளை காங்கிரஸும், 94 வாக்குகளை என்.ஆர்.காங்கிரஸும் பெற்றிருந்தன. 36 வாக்குகள் செல்லாதவை.