Published : 24 Apr 2014 08:02 AM
Last Updated : 24 Apr 2014 08:02 AM
யாருக்கும் வாக்களிக்க விருப்பமில் லாத வாக்காளர்களுக்காக, இந்த முறை நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாக “நோட்டா” என்னும் வசதி அறிமுகம் செய்யப்படுகிறது.
தங்களது தொகுதியில் போட்டி யிடும் எந்த வேட்பாளருக்கு, வாக்களிக்க விருப்பமில்லை என்ற தங்களது கருத்தை வாக்காளர்கள் வெளிப்படுத்த ஏற்படுத்தப்பட்டுள்ள வசதி தான் நோட்டா. நோட்டா என்பதற்கு ஆங்கிலத்தில் (NOTA- None Of The Above) மேல் குறிப்பிட்டுள்ள எந்த நபரும் இல்லை என்று பொருள்.
இதற்கு முன்பு, யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள், 49 O என்ற படிவத்தை பூர்த்தி செய்து வாக்களிக்கும் நாளில் வாக்குச்சாவடி அதிகாரியிடம் கொடுத்து விட்டு வர வேண்டும். அப்படி செய்யும் வாக்காளர் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்கவில்லை என்பது அந்த வாக்குச் சாவடியில் உள்ள அனைவருக்கும் தெரிய வரும்.
ஆனால், தற்போது வாக்குப் பதிவு இயந்திரத்திலேயே இந்த வசதி தரப்பட்டுள்ளது. போட்டி யிடும் அனைத்து வேட்பாளர்களின் பெயர்களுக்கும் கீழே கடைசி பட்ட னாக நோட்டா இருக்கும். மற்ற வாக்காளர்களைப் போல நோட்டா வாக்காளர்களும் அந்த பட்டனை அழுத்தினால், நோட்டாவில் அவரது வாக்கு பதிவாகும். அவர் எந்த பட்டனில் வாக்களித்தார் என்பது ரகசியமாகவே இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT