அமைச்சர் செந்தூர்பாண்டியன் மீது பிரவீண்குமாரிடம் திமுக புகார்: புளியங்குடியில் ரூ.1 கோடி பறிமுதல் விவகாரம்

அமைச்சர் செந்தூர்பாண்டியன் மீது பிரவீண்குமாரிடம் திமுக புகார்: புளியங்குடியில் ரூ.1 கோடி பறிமுதல் விவகாரம்
Updated on
1 min read

புளியங்குடியில் ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக அமைச்சர் பி.செந்தூர்பாண்டியன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி தேர்தல் துறையிடம் திமுக புகார் அளித்துள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரிடம் திமுக வழக்கறிஞர் ஐ.பரந்தாமன் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:

தென்காசி தொகுதியில் புளியங்குடி காவல்நிலைய காவலர்கள் கடந்த திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு புளியங்குடி நகர அதிமுக செயலாளர் சங்கரபாண்டியனிடம் இருந்து ரூ.1 கோடியை பறிமுதல் செய்தனர். வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக இப்பணத்தை சங்கரபாண்டியனிடம் அமைச்சர் செந்தூர்பாண்டியன் கொடுத்துள் ளார். வாக்காளர்களுக்கு கொடுக்க இந்தப் பணம் பயன்படுத்தப்பட லாம்.ஆனால், புளியங்குடி காவல் நிலைய காவலர்கள் உண்மையை மறைத்து, இதை திருட்டு வழக்காக மாற்றியுள்ளனர். பறிமுதல் செய்யப் பட்ட ரூ.1 கோடிக்கான எந்த கணக் கையும் சங்கரபாண்டியன் சமர்ப் பிக்கவில்லை. போலியான கணக்கை சமர்ப்பிக்கவும் அவர் முயற்சித்து வருகிறார்.

வருவாய்த் துறை அதிகாரிகளி டம் அவர் சமர்ப்பித்துள்ள கணக்கு களுக்கும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் எடுக்கப்பட்டதாக கூறப்படும் வங்கி தொடர்பான தகவலும் முரண் பாடாக உள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து தென்காசி தொகுதி தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் பார்வையாளரிடம் புகார் அளித்துள் ளோம். எனவே அமைச்சர் செந்தூர் பாண்டியன், தென்காசி தொகுதி அதிமுக வேட்பாளர் வசந்தி முருகேசன், புளியங்குடி நகர அதிமுக செயலாளர் சங்கரபாண்டி யன் ஆகியோர் மீது தேர்தல் குற்ற வழக்குகள் பதிவு செய்யும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தாங்கள் அறிவுறுத்த வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in