Published : 10 Apr 2014 12:00 AM
Last Updated : 10 Apr 2014 12:00 AM
தமிழகம் புதுவையில் சுமார் 60 லட்சம் நோட்டா வாக்குகள் பதிவாகும் என தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம் கணிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த அமைப்பு சார்பில் ஸ்ரீபெரும்புதூரில் நோட்டா விழிப்புணர்வு பிரச்சாரம் புதன்கிழமை நடைபெற்றது. இது குறித்து இயக்கத்தின் மாநிலத் தலைவர் பூமொழி கூறியதாவது:
நோட்டா குறித்து பொதுமக்க ளிடம் இந்திய தேர்தல் ஆணையம் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை. இக்குறையை போக்கும் விதமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமைந் துள்ள 40 மக்களவைத் தொகுதிகளி லும் நோட்டா விழிப்புணர்வு பிரச்சாரத்தை சேலத்தில் தொடங்கினோம். காஞ்சிபுரம், பெரும்புதூர் உள்ளிட்ட 37 தொகுதிகளில் எங்கள் பிரச்சாரத்தை நிறைவு செய்திருக்கிறோம். ஏப்ரல் 12-ம் தேதி சென்னையில் உள்ள மாநில தலைமைத் தேர்தல் அலுவலகம் முன்பு எங்கள் பிர்சசாரத்தை நிறைவு செய்ய இருக்கிறோம்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 60 லட்சம் நோட்டா வாக்குகள் பதிவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் நோட்டா வாக்குகள் அதிகமாக பதிவாகும் பட்சத்தில், வரும் காலங்களில் அரசியல் கட்சியினர் நல்ல வேட்பாளர்களை நிறுத்தும் வாய்ப்புகள் உள்ளது. எங்கள் நோக்கம் 100 சதவீதம் வாக்கு பதிவாக வேண்டும் என்பதே. ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தில் எங்கள் இயக்க உறுப்பினர்கள், பயணிகள் கல்லூரி மாணவிகள் எழுத படிக்கத் தெரியாத முதியோர்கள் ஆகியோரிடம் நோட்டா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். என்றார் அவர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகே நோட்டா விழிப்புணர்வு பிரச்சாரம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு, அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் பூமொழி தலைமை தாங்கினார். காவிரி, முல்லைப் பெரியாறு போன்ற நதிநீர்ப் பிரச்சினைகள், மாணவ சமுதாயத்துக்கு எதிராக வியாபாரமாக்கப்பட்ட கல்வி, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் திட்டங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் மக்கள் பாதிக்கப்பட்டு, வெறுப்படைந்துள்ளனர்.
வாக்காளர்கள் தங்களின் எதிர்ப்பை சட்டப்படி பதிவு செய்ய நோட்டாவை பயன்படுத்த வேண் டும் என அவர்கள், பிரச்சாரத்தின் போது வலியுறுத்தினர். மேலும், இதுதொடர்பாக, அவர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரம் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT