Published : 18 Apr 2014 09:29 am

Updated : 18 Apr 2014 13:18 pm

 

Published : 18 Apr 2014 09:29 AM
Last Updated : 18 Apr 2014 01:18 PM

திமுக, அதிமுக-வுடன்தான் கூட்டணி இல்லை என்று கூறினோம்: அன்புமணி ராமதாஸ் பேட்டி

பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் முன்னாள் மத்திய அமைச் சர் அன்புமணி ராமதாஸ் தருமபுரி தொகுதி பாமக வேட்பாளராக களத் தில் நிற்கிறார். பாமக தொகுதிக ளிலும் கூட்டணித் தோழர்களின் தொகுதிகளிலும் பிரச்சாரத்தில் பிஸியாக இருக்கும் அவர் ‘தி இந்து’ வுக்கு அளித்த சிறப்புப் பேட்டி.

முதன்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறீர்கள் மக்களிடம் வரவேற்பு எப்படி இருக்கிறது?


108 ஆம்புலன்ஸ், தருமபுரி மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட வசதிகளை கொண்டுவந்த நான் நிச்சயம் தருமபுரி தொகுதியை வளர்ச்சி, தொழில்வளம் நிறைந்த தாக மாற்றுவேன் என்ற நம்பிக் கையும், அமைதி தவழும் தொகுதி யாக தருமபுரியைப் பாதுகாப்பேன் என்ற நம்பிக்கையும் வாக்காளர் களிடம் தென்படுகிறது.

பாமக தலைமையில் அமைந்த அனைத்து சமுதாய பேரியக்கத் தில் பங்கு பெற்ற சில அமைப்பு களை உதறிவிட்டு கூட்டணி அமைத்திருப்பதாக விமர்சிக்கப் படுகிறதே?

பெண்கள் பாதுகாப்பு, பெண் கல்வி உள்ளிட்ட நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட அனைத்து சமுதாய பேரியக்கம் ஒரு அரசியல் சாராத அமைப்பு. அதில் உள்ள எல்லா அமைப்புகளுக்கும் சூழல் காரணமாக தேர்தலில் சீட் பெற் றுத்தர முடியவில்லை. ஆனால், அனைவரின் ஆதரவும் எங்களுக்கு உள்ளது.

தேசிய, திராவிட கட்சிகளுடன் இனி கூட்டு இல்லை என்று கூறிவிட்டு தற்போது பாமக அந்த இரண்டையும் மீறிவிட்டதே?

தமிழகத்தின் வளர்ச்சியை தடுத்த திமுக, அதிமுக இந்த இரண்டு திராவிட கட்சிகளுடன் கூட்டு சேருவதில்லை என்றுதான் கூறினோம், அதைத்தான் செய்துள் ளோம். மத்தியில் நிலையான, வலிமைமிக்க, நிர்வாக திறமை கொண்ட ஆட்சியை உருவாக்க பாஜக-வுடன் கூட்டணி சேர்ந் துள்ளோம்.

மதவாத முத்திரை கொண்ட பாஜக-வுடன் கூட்டணி அமைத்திருப்பது பாமக-வுக்கு சரியாக படுகிறதா?

தமிழக வாக்காளர்கள் பாஜக-வை அப்படி பார்ப்பதாக தெரியவில்லை. சாதி, மத பாகு பாடுகள் இல்லாத நிறைவான ஒரு ஆட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமை வழங்கும் என நம்புகிறோம்.

மருத்துவர் ராமதாஸின் முழு ஒப்பு தலுக்கு முன்பே நீங்கள் கூட்ட ணியை இறுதி செய்ததாகவும் அந்த வருத்தம் அவரிடம் இன்னும் நீங்க வில்லை என்றும் கூறப்படுகிறதே?

விருப்பமான தொகுதிகள் கிடைக்காதபோது சில வருத்தங் கள் எழுவது இயல்பு. தனித்து போட்டியிடவும்கூட அவர் எண்ணி னார். ஆனால், தனித்து செல்வதன் மூலம் எதிரிகளுக்கு சாதகமான சூழல் உருவாகும் என்ற நியா யத்தை இறுதியில் அவர் ஏற்றுக் கொண்டுவிட்டார்.

அவருக்கு இன்னும் வருத்தம் இருப் பதால்தான் தருமபுரி, கிருஷ்ணகிரி தவிர வேறு எங்கும் பிரச்சாரத்துக்கு செல்லவில்லை என்கிறார்களே?

அய்யா 8 மாதங்களுக்கு முன்பு தான் பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். எல்லா தொகுதி களிலும் அலைய அவர் உடல்நிலை ஒத்துழைக்காது. இருப்பினும் மீத முள்ள நாட்களில் மற்ற தொகுதி களிலும் பிரச்சாரம் மேற்கொள்வார்.

பிரச்சாரத்தின்போது உங்களுக்கு திவ்யாவின் தாய் தேன்மொழி ஆரத்தி எடுத்துள்ளார். திவ்யா-இள வரசன் காதலை பாமகதான் பிரிக்க பார்த்தது என்ற விமர்சனத்துக்கு இது வலுசேர்ப்பதாக உள்ளதே?

கிராமங்களில் எத்தனையோ சகோதரிகள் என்னை வரவேற்று ஆரத்தி எடுக்கிறார்கள். அதில் தேன்மொழி யார் என்று எனக்கு எப்படி தெரியும்? தவறான பாதை யில் ஒருபோதும் பாமக அரசியல் நடத்தாது. இவையெல்லாம் நாங் கள் வெற்றி அடைவதை தடுக்க நினைப்பவர்களின் குற்றச் சாட்டுகள்.அன்புமணி ராமதாஸ் பேட்டிநாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம்அன்புமணி ராமதாஸ்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x