மோடி சர்வாதிகாரி; ராகுல் வம்சாவளிவாதி: ஆம் ஆத்மி தாக்கு

மோடி சர்வாதிகாரி; ராகுல் வம்சாவளிவாதி: ஆம் ஆத்மி தாக்கு
Updated on
1 min read

பாஜக கட்சியின் நரேந்திர மோடி சர்வாதிகாரி, காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி வம்சாவளி வாதி என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய பிரச்சாரக் குழுத் தலைவர் யோகேந்திரயாதவ் கூறியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அவர் பேசியதாவது:

இந்தத் தேர்தலில் நாட்டில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர நமக்கு வாய்ப்பு உள்ளது. காந்தி, நேரு, அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற பெருந்தலைவர்கள் வாழ்ந்த நம் நாட்டில் தற்போது ராகுல்காந்தியும், நரேந்திர மோடியும் தேர்தலில் முன்னிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் வம்சாவளிவாதி, மற்றொருவர் சர்வாதிகாரி. தமிழகத்தில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் எல்லாமே ஊழல்வாதிகள். ஆம் ஆத்மிக்கு பணபலம் இல்லை, மீடியாக்கள் ஆதரவும் இல்லை. கொள்கைக்காக பதவியையே தூக்கி எறிந்த ஒரே கட்சி ஆம் ஆத்மிதான் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in