Published : 22 Apr 2014 08:32 AM
Last Updated : 22 Apr 2014 08:32 AM

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அறிமுகப்படுத்தியதே பாஜகதான்: ஜி.ராமகிருஷ்ணன் புகார்

1999-ல் வாஜ்பாய் அரசுதான் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அறிமுகப்படுத்தியது. அதைத்தான் மன்மோகன் அரசு இப்போது விரிவுபடுத்தியுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

தஞ்சையில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:

“பாஜக 6 ஆண்டுகள் நாட்டை ஆண்ட காலத்தில்தான் 84,235 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். மொத்தமாக காங்கிரஸ், பாஜக ஆட்சியில் 1999 முதல் 2014 வரை 2.84 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

பொருளாதாரக் கொள்கையில் காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளுக் கும் வேறுபாடில்லை. இப்போ தைய மின்சார பற்றாக்குறைக்கு 2003-ல் வாஜ்பாய் அரசு கொண்டு வந்த மின்சார ஒழுங்குமுறை சட்டமே காரணம். மின் உற்பத் தியை தனியாரிடம் தாரை வார்க் கும் இந்தச் சட்டத்தை ஆதரித்த காங்கிரஸ், திமுக, அதிமுக, மதிமுக, பாமகவும் இதற்குப் பொறுப்பு.

பாஜக தேர்தல் அறிக்கையில் பழங்குடிகள், தலித்துகள், பிற் படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு குறித்தும், மிகவும் பின் தங்கியுள்ள சிறுபான்மையினருக் கான சச்சார், ரெங்கநாத் மிஸ்ரா குழு அறிக்கைகள் குறித்தும் வாய் திறக்கவில்லை. அனைவருக்கும் சமமான வாய்ப்பு அளிப்போம் என்று மட்டும் கூறப்பட்டுள்ளது. சமமான வாய்ப்பு இல்லாததால் தான் இடஒதுக்கீடே கொண்டுவரப் பட்டது. இதுகுறித்து திமுக, அதிமுக கட்சிகள் பேச மறுக் கின்றன.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து பேசும் கருணாநிதியும், 2 ஜி ஊழல் பற்றி பேசும் ஜெயலலிதாவும் செல்வ கணபதிக்கு அளிக்கப்பட்ட தண் டனை குறித்து பேச மறுக்கின்றனர். ஊழலில் காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுகவுக்கு எந்த வித்தியாசமுமில்லை.

வறட்சி நிவாரணம் கேட்டும், மீத்தேன் திட்டத்தை முதன் முதலில் எதிர்த்தும் போராடியவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர்தான்” என்றார் ராமகிருஷ்ணன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x