

திமுக ஆட்சியில் கொண்டு வரப் பட்ட திட்டங்கள் என்பதாலேயே சேது சமுத்திரத் திட்டம் மற்றும் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டங்களை தமிழக அரசு திட்டமிட்டே முடக்கி வைத்துள்ளது என திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் கூறினார்.
திருவள்ளூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து, திமுக பொதுச் செயலாளர் செங்குன்றத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது, தமிழகத்தில் நாளுக்கு நாள் மின்வெட்டு அதிகரித்து வருகிறது. விவசாயத்துக்கான மின்கட்டணத்தை குறைக்க எம்ஜிஆர் மறுத்தார். ஆனால், கருணாநிதி அதை அறவே ரத்து செய்து இலவசமாக வழங்கினார்.
தமிழகத்தில் இன்றைக்கு பால் விலை, பேருந்துக் கட்டணம் ஆகியவை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. சொகுசுப் பேருந்துகளுக்கான கட்டணம் வசூலிக்கப்பட்டு, சாதாரண பேருந்துகளில் மக்கள் பயணம் செய்கின்றனர்.
திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் என்பதா லேயே சேது சமுத்திரத் திட்டம் மற்றும் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டங்களை தமிழக அரசு திட்டமிட்டே முடக்கி வைத்துள்ளது. சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறியிருந்தால் ஆண்டுக்கு ரூ. 2,000 கோடி வருவாய் கிடைத்திருக்கும்’’ இவ்வாறு அவர் பேசினார்.