

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் புதுவையில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சி மக்கள் விரோத கொள்கைகளைக் கடைபிடித்து வருகிறது. மக்களைப் பிளவுப்படுத்தும் மதவாதக் கொள்கையை பாஜக பின்பற்றுகிறது.
அடித்தட்டு மக்களுக்காக என்றும் போராடி வரும் கட்சிகள் இடதுசாரி இயக்கங்கள்தான். தற்போதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்திக்கின்றன. இது மிகவும் சிறப்பான நிகழ்வாகும். இரு கட்சிகளும் எப்போதும் இணைந்து செயல்பட்டால்தான் மக்களுக்கு நன்மை கிடைக்கும். இதை நானும் ஆதரிக்கிறேன்.
காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் புதுவைக்கு எந்த நல்லதையும் செய்யவில்லை. எனவேதான் இடதுசாரி கட்சி வேட்பாளரை ஆதரிக்க வலியுறுத்தி பிரகடனம் வெளியிட்டுள்ளோம் என்றார்.