Published : 19 Apr 2014 10:38 AM
Last Updated : 19 Apr 2014 10:38 AM

தமிழகத்தை விட பல்வேறு துறைகளில் அதிக வளர்ச்சி அடைந்த மாநிலம் குஜராத்: பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் பேட்டி

தமிழகத்தை விட குஜராத் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்த மாநிலமாக உள்ளது என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளி தரராவ் புள்ளி விவரங்களுடன் கூறினார்.

இதுதொடர்பாக சென்னை யில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இவ்வளவு நாட்களாக, பாஜக அதிமுகவை ஏன் விமர் சிக்கவில்லை என்ற கேள்வி இருந்தது. தேசிய அளவில் முக்கிய பிரச்சினைகள் குறித்து பேசி வந்தோம். அதே போல காங்கிரஸ் அரசின் தவறான நிர்வாகம், ஊழல் போன்றவற்றை பேசி வந்தோம். தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், அதே பிரச்சினை பற்றித்தான் பேசி வந்தார். ஆனால், திடீரென்று குஜராத்தின் வளர்ச்சி மாயை என குற்றம்சாட்டியுள்ளார். இது உண்மைக்கு புறம்பானது. தமிழகத்தை விட குஜராத் வளர்ச்சி அடைந்த மாநிலம்.

அதற்கான புள்ளி விவரங்கள்:

2012 2013 கணக்குப்படி குஜராத்தின் விவசாயத்துறை வளர்ச்சி 8.46 சதவீதம்; தமிழகத்தில் 4.04 சதவீதம். குஜராத்தில் தொழில்துறை வளர்ச்சி 10.64 சதவீதம்; தமிழகம் 9.69 சதவீதம். குஜராத் உற்பத்தி வளர்ச்சி 10.89 சதவீதம்; தமிழகம் 9.60 சதவீதம். அதே போல குஜ ராத்தின் வேலைவாய்ப்பும், தமிழகத்தைவிட அதிகமாக உள்ளது. குஜராத்தில் தேவைக்கு அதிகமாக மின் சாரம் உற்பத்தி செய்யப்படு கிறது. ஆனால், தமிழகத்தில் தேவையை விட மிகவும் குறைவாகவே மின்சாரம் உற் பத்தியாகிறது.

ஜெயலலிதா தனக்கு சாதகமான விஷயங்களை மட்டும் முன்வைத்து குற்றச் சாட்டை எழுப்பியுள்ளார். குஜராத் மற்றும் தமிழகத்தின் வளர்ச்சி பற்றி விவாதிக்க நாங்கள் தயார். ஜெயலலிதா மட்டும் அல்ல, இந்தியாவில் யார் வேண்டுமானாலும் குஜராத் வளர்ச்சி பற்றி எங்களுடன் விவாதம் செய்யலாம்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட் டணிக்கு கிடைத்து வரும் ஆதரவு, ஜெயலலிதாவுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான், அவர் இப்படி பேசியிருக்கிறார். நரேந்திர மோடியை என்கவுண்டர் முதல்வர் என சிதம்பரம் கூறுகிறார். அவரது வாதத்தை ஏற்க தேவையில்லை. அவர் ஒரு மிகப்பெரிய பொய்யர். தேர்தலில் போட்டியிடக் கூட திராணி இல்லாமல் ஒதுங்கி நிற்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x