ராஜபக்சே - மோடி இருவருக்கும் வித்தியாசம் இல்லை: கார்த்திக்

ராஜபக்சே - மோடி இருவருக்கும் வித்தியாசம் இல்லை: கார்த்திக்
Updated on
1 min read

“ராஜபக்சேவுக்கும், நரேந்திர மோடிக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை” என்று அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் பேசினார்.

கன்னியாகுமரியில் புதன் கிழமை காங்கிரஸ் தலைவர் சோனியா பங்கேற்ற பொதுக்கூட் டத்தில், அவர் வரும் முன் கார்த்திக் பேசியதாவது:

தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடக்கும் தேர்தல் இது. காங்கிரஸ்தான் தர்மம், பா.ஜ.க. அதர்மம். நாட்டை வலிமையாக்கும் இடத்தில் மோடியை நினைத்துக் கூட பார்க்க முடியாது. நிறைய பேர் பொய் சொல்லியே சுற்றி வருகின்றனர். குழப்பத்தில் இருந்து மக்களை மீட்க வேண்டும்.

கோத்ரா சம்பவம்

குஜராத்தில் 2002-ல் ஏற்பட்ட, ‘கோத்ரா’ சம்பவத்தை யாரும் மறக்க முடியாது. அதற்கு வருத்தம் கூட தெரிவிக்காதவர் மோடி. அவர் பிரதமரானால் இந்த தேசம் என்ன ஆகும்? சிதறு தேங்காயாக சிதறிவிடும்.

நம்மைச் சுற்றியுள்ள நாடுகளால் ஆபத்து இருக்கும் இந்நேரத்தில் நரேந்திர மோடியிடம் நாட்டை ஒப்படைக்கக் கூடாது. தேர்தலில் காங்கிரஸ் ஜெயிக்கா விட்டால், மக்கள் தோற்றுவிடுவர்.

காங்கிரஸ் கட்சிக்கு நான் வந்த பின், கோயிலுக்குள் வந்ததைப் போல் உணர்கிறேன். தேசப்பற் றும், நல்ல மனதும் உள்ளவர்களை சந்தித்து வருகிறேன், என்றார் கார்த்திக்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in