Published : 23 Apr 2014 09:27 AM
Last Updated : 23 Apr 2014 09:27 AM
மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் தமிழக மக்களுக்கு முழுமையாக கிடைப்ப தில்லை. அதற்கு முட்டுக் கட்டை போடும் அரசாக தமிழக அரசு உள்ளது என, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டினார்.
திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விக்டரி ஜெயக்குமாரை ஆதரித்து தேர் தல் பிரச்சாரம் ஆவடியில் நடை பெற்றது. கட்சியின் மாவட்டத் தலைவர்கள் சிதம்பரம், ஜேம்ஸ் இருவரும் தலைமை தாங்கினர். மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் வேட்பாளரை ஆதரித்து பேசியதாவது:
39 தொகுதிகளிலும் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாக உள்ளனர். இந்தத் தேர்தலில் மத்திய அரசின் நல்ல திட்டங்கள் வெற்றிக்கு அடித்தளமாக அமையும்.
தமிழகத்தில் நீண்ட இடை வெளிக்கு பிறகு தன்மானத்தோடு, தனித்தன்மையாடு நம்முடைய திட்டங்களை எந்தக் கட்சியுட னும் பங்கு போடாமல் நாமே தைரியமாக மக்களை சந்தித்து வாக்கு கேட்கின்றோம். இந்த நிலை காங்கிரஸ் பேரியக் கத்துக்கு வருங்காலத்தில் வெற்றிப் பாதையாக அமை யும்.
விவசாயிகளுக்கு 73 ஆயிரம் கோடி கடன் வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றியது காங்கிரஸ் அரசு. தகவல் அறியும் உரிமை சட்டத்தை கொண்டு வந்து வெளிப்படையான நிர்வாகத்தை இந்தியாவில் கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி. உணவுப் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்து நாட்டில் 81 கோடி மக்களுக்கு உணவு கொடுக்கிறோம். அதற்காக நாங்கள் வெளியே செல்ல வேண்டுமா?
6 முதல் 14 வயது மாணவர்களுக்கு கட்டாய கல்வி கொடுத்திருக்கிறோம். முதியோர் பென்ஷன் திட்டத்தை ரூ.600-ல் இருந்து ஆயிரமாக உயர்த்தியது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் கட்சி மாற்றாந்தாய் மனப்பான்மை இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
மாநிலங்களுக்காக வழங்கப்படும தொகை மத்திய அரசின் வருவாயில் இருந்து 2012-13-க்கு, 4,76,560 கோடி ரூபாய் கொடுத்தோம். 2013-14-ல் 4 லட்சம் என்பது 5,28,571 கோடி ரூபாயாக அதிகரித்தது. 2014-15-ல் இது 6,83,584 கோடியாக உயர்ந்தது. இது மத்திய திட்டக் குழுவின் அதிகாரப்பூர்வமான புள்ளி விவரம். மாநிலங்களுக்கு அளிக்கப்படும் தொகை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. எனவே, மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி தமிழகத்தை ஒருபோதும் வஞ்சிக்கவில்லை என தெரிவிக்கிறேன்.
சேது சமுத்திர திட்டம் தென்மாவட்ட மக்களின் கனவு திட்டம் மட்டுமல்ல, நாட்டை பொருளாதார ரீதியாக உயர்த்தக் கூடிய திட்டம். இத்திட்டத்தை ஒருபுறம் பாஜகவும், மறைமுகமாக அதிமுகவும் எதிர்க்க நினைக்கின்றன. இவர்கள் இத்திட்டத்தை எதிர்த்து உச்சிநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதுபோன்ற எண்ணற்ற மத்திய அரசின் திட்டங்கள் கிடப்பில் உள்ளதற்கு அதிமுக அரசுதான் காரணம்.
திருவள்ளூர் தொகுதியில் ரூ.166 கோடியில் பாதாள சாக்கடை, 110 கோடியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை உருவாக்குவது, 20 கோடி செலவில் ஆயிரம் ஏழை மக்களுக்கு இந்திரா குடியிருப்புகளை கட்டித் தந்தது அனைத்தும் மத்திய அரசின் நிதியுதவிடன் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு வாசன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT