

ஆட்சியில் இல்லாதபோதும் சாதனை செய்பவர் திமுக தலைவர் கருணாநிதி என தேர்தல் பிரச்சாரத்தில் நடிகை குஷ்பு தெரிவித்தார்.
கரூர் திமுக வேட்பாளர் சின்னசாமியை ஆதரித்து பேருந்து நிலையம் அருகே நடந்த பிரச்சாரத்தில் அவர் மேலும் பேசியது:
கருணாநிதி முதல்வராக இருந்த போதும், ஆட்சியில் இல்லாத போதும் சாதனை செய்து வருகிறார். கரூரில் தண்ணீர் மற்றும் மின்வெட்டுப் பிரச்சினை உள்ளது. விவசாயத்துக்கு தண்ணீர், மின்சாரம் இரண்டும் தேவை. திமுக தலைவர் கருணாநிதி கடந்த முறை முதல்வரானபோது விவசாயிகளின் கடன்கள் ரூ.7,000 கோடியை தள்ளுபடி செய்தார். ஆனால் இன்றோ விவசாயிகளுக்கு ஜெயலலிதா அரசு ஒன்றும் செய்யவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட விவசா யிகள் 12 பேர் இதுவரை தற்கொலை செய்து கொண்டுள் ளனர். முதல்வராக உள்ள ஜெயலலிதா அவர்களது குடும்பத் தினருக்கு நேரில் ஆறுதல்கூட சொல்லவில்லை. ஆனால் ஆட்சி யில் இல்லாதபோதும் அவர்கள் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகையாக தந்தவர் கருணாநிதி.
3 ஆண்டுகளுக்கு முன் அதிமுக தேர்தல் அறிக்கையில் 20 லிட்டர் தண்ணீர் வழங்குவதாகக் கூறப்பட்டது. ஆனால், இன்றைக்கோ ஒரு பாட்டில் தண்ணீரை ரூ.10க்கு விற்கும் கொடுமையை அதிமுக ஆட்சி செய்துள்ளது.
பஸ் கட்டணம் உயர்வு
அதிமுக அரசு பேருந்து கட்டணம், பால் விலையை உயர்த்தியது. மாநில போக்கு வரத்துத்துறை அமைச்சராக கரூரைச் சேர்ந்த செந்தில்பாலாஜி தான் உள்ளார். பேருந்து கட்டண உயர்வு ஏன் என்று கேட்டால் பெட்ரோல், டீசல் விலை உயர்வை காரணம் சொல்கிறார்கள். ஏன் திமுக ஆட்சியிலும்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந் தது. அப்போது பேருந்து கட்டணத்தை கருணாநிதி உயர்த்தி னாரா? மக்களுக்கு கஷ்டத்தை தரக்கூடாது என அவர் கட்டணங் களை உயர்த்தவில்லை.
இங்குள்ள அமைச்சர் என்றைக் காவது உங்கள் பிரச்சனைகளை கேட்டுள்ளாரா? இன்றைக்கு தமிழகத்தில் உள்ள சாலைகள் திமுக ஆட்சியில் துணை முதல் வராக ஸ்டாலின் இருந்தபோது போடப்பட்டது. மக்களுக்கு எதுவுமே செய்யாதவர்களுக்கு பதில் தர சந்தர்ப்பம் கிடைத் துள்ளது. அதைப் பயன்படுத்தி திமுக.வுக்கு வாக்களியுங்கள் என்றார்.
தொண்டர்களுக்கு தொப்பி
திங்கள்கிழமை காலை கரூருக்கு குஷ்பு பிரச்சாரம் செய்ய வருகிறார் என அறிவிக்கப்பட்டதால் காலை 11.30 மணி முதலே கட்சியினரும் பொதுமக்களும் காத்திருந்தனர். மணிக்கணக்கில் வெயிலில் காத்திருந்த தொண்டர்களுக்கு திமுக சார்பில் கறுப்பு, சிவப்பு நிறத்திலான உதயசூரியன் சின்னம் பொறித்த தொப்பி வழங்கப்பட்டது.