Published : 05 Apr 2014 12:28 PM
Last Updated : 05 Apr 2014 12:28 PM

உ.பி., ராஜஸ்தானில் பாஜக கூட்டணி முன்னிலை: புதிய கருத்துக் கணிப்பில் தகவல்

உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணாவில் பாஜக கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றும் எனவும், இமாச்சல் பிரதேசத்தில் கடும் போட்டி நிலவும் எனவும் புதிய கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது. சிஎன்என்- ஐபிஎன் மற்றும் தி வீக் சார்பில் தனியார் நிறுவனம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பின்படி இத்தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ள தகவல்கள்:

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பாஜக- அப்னா தால் கூட்டணி 42 முதல் 50 இடங்களைக் கைப்பற்றும்.

முலாயம்சிங்கின் சமாஜ்வாதி கட்சி 11 முதல் 17 இடங்களையும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் 10 முதல் 16 இடங்களையும், காங்கிரஸ்-ராஷ்ட்ரீய லோக் தளம் கூட்டணி 4 முதல் 8 இடங்களையும் கைப்பற்றும்.

ராஜஸ்தானில் பாஜக 21 முதல் 25 இடங்களைக் கைப்பற்றும். காங்கிரஸ் கூட்டணி அதிகபட்சம் 2 இடங்களைக் கைப்பற்றலாம்.

டெல்லியில் 40 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளுடன் 3 அல்லது 4 இடங்களை பாஜகவும், 2-3 இடங்களை ஆம் ஆத்மியும், காங்கிரஸ் ஒரு இடத்தையும் பெறும். டெல்லி மக்கள் பிரதமர் வேட்பாளர்களில் நரேந்திர மோடிக்கு 38 சதவீதம் ஆதரவு தெரிவித்துள்ளனர். அர்விந்த் கேஜ்ரிவால் 20 சதவீத மக்கள் ஆதரவுடன் 2-ம் இடம் பிடித்துள்ளார். பஞ்சாபில், சிரோமணி அகாலிதளம்-பாஜக கூட்டணி 42 சதவீத வாக்குகளைக் கைப்பற்றும். காங்கிரஸ்- பஞ்சாப் மக்கள் கட்சி கூட்டணி 29 சதவீத வாக்குகளைக் கைப்பற்றும்.

ஹரியாணாவில், பாஜக-ஹரியாணா ஜங்கிட் காங்கிரஸ் கூட்டணி 36 சதவீத வாக்குகளைக் கைப்பற்றும். காங்கிரஸ் 30சதவீத வாக்குகளையும், இந்திய தேசிய லோக் தளம் 16 சதவீத வாக் குகளையும், ஆம் ஆத்மி 7 சதவீத வாக்குகளையும் கைப்பற்றும்.

இமாச்சலில் கடும் போட்டி

இமாச்சல் பிரதேசத்தில் பாஜக-காங்கிரஸ் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளுமே தலா 45 சதவீத வாக்குகளைக் கைப்பற்றும். ஆம் ஆத்மி 7 சதவீத வாக்குகளைப் பெறும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x